இடுகைகள்

சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு (சிறப்பாய்வு - உறையூர்)

படம்
தமிழக ஊர்ப்பெயர் ஆய்வுகள் , 1. ஊர்ப்பெயர் புனைவுகளை ஆதரித்துப் பொருள் கூறுதல். 2. ஊர்ப்பெயர் புனைவுகளைக் கட்டுடைத்து அறிவார்ந்த நிலையில் விவாதித்தல். என இரண்டு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக 18 ஆம் நூற்றாண்டில் கோட் பிரைடுவில் ஹெல்ம் லெய்ப்னிஷ் என்பவர் இடப்பெயராய்வை ஒரு அறிவியல் துறையாகத் தோற்றுவித்தார். இத்துறை வரலாறு, மொழியியல் துறைகளில் அசைவுகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இடப்பெயராய்வு உலகளவில் கவனப்படுத்தப்பட்டு, மேற்கண்ட இரண்டு நிலைகளில் உலகளவிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடப்பெயர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன . வள்ளலார்(1828-1874) ஊர்ப்பெயராய்வில் விருப்பம் காட்டினார் என்றாலும் பெரிதாக ஈடுபடவில்லை. 1946 இல் வெளியான ரா. பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் என்னும் நூல் படிப்பதற்குச் சுவையாக இருப்பினும் ஆய்வு தொய்வுடையதாக அமைந்துள்ளது. (2008:206). திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தலபுராணங்களிலும் ஊர்ப்பெயர் பற்றிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் அக்காரணங்கள் புராண புனைவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ...

நவ சக்திகள்

மனோண்மணி - பக்குவம் எய்திய உயிர்களை மலத்தினின்று நீக்கிச் சிவத்துடன் சேர்க்கும் சர்வபூத்தமணி - உயிர்களிலெல்லாம் ஒன்றி உடன் கலந்து நின்று, அவற்றின் புண்ணிய பாவங்களை அகற்றுவிக்கும். பலப்பிரதமணி - சூரியனிடத்தில் பதிந்து நின்று தீய கிருமிகளை அழித்து, நல்ல பொருள்கள் பெருகி வளர்வதற்கு ஆக்கம் அளிக்கும். பலவிகரணி - சந்திரனிடத்தில் நிலைபெற்ற அமுதத் துளிகளைச் சொரிவித்துப் பயிர்பச்சைகளும் உயிர்த் தொகுதிகளும் தழைத்துச் செழித்தோங்க உதவி செய்யும் கலவிசரணி - வானத்தில் இருந்த எல்லாப் பொருள்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னிற் கலந்து இணைய இடம் தந்து நிற்கும். காளி - காற்றின்கண் இனிது கலந்து பிராணமயமாய் விளங்கி, உயிர்களுக்கு நலம் விளைவிக்கும். இரவுத்திரு - நெருப்பின் கண் தங்கி அதற்கு வெப்பம் அளித்து நிற்கும். சேட்டை - நீரில் நிலைபெற்று அதற்றுகுக் குளிர்ச்சியையும் சுவையையும் உண்டாக்கும். வாமை - மண்ணில் விளங்கி ஐம்பூதங்களின் இயல்புகளும் செயல்களும் நிகழுமாறு செய்யும்.

சக்தி - தத்துவ நோக்கு

தனக்கு நிலைக்களமான பரப்பிரமத்தின் வெளித்தோற்றமே சக்தி என வழங்கப் படுகிறது. சக்தியை முக்குணங்களின் காமியாவஸ்தை என்றும் அவ்வியக்தம் என்றும் மூலப் பிரகிருதியான மாயையென்றும், சத்தான பிரமத்திற்கும் அசத்தான பிரபஞ்சத்திற்கும் விலட்சணமானது என்றும் கூறுவர். அதன் பொருள் யாவற்றையும் இயற்றும் திறமை என்பதாகும். இத்தன்மை வாய்ந்த சக்தியானது சத்துவ குணத்தையடைந்தால் காப்பாற்றும் சக்தியெனவும், இராசத குணத்தையடைந்தால் சிவராசிகளைப் படைக்கும் சக்தியெனவும், தாமத குணத்தையடைந்தால் அழிக்கும் சக்தியெனவும் அழைக்கப்பெறும். இதனால் மும்மூர்த்திகளின் ஆற்றல்களும் சக்திக்கு உண்டென்பது அறியவேண்டிய தத்துவமாகும். சக்தியைத் த்ததுவ நோக்கில் உணர்ந்து உபாசிக்கும் சாக்தர்கள் தம் வழிபாடு கடவுள் மனத்தால் நினைக்கவோ ,கண்ணால் காணவோ, இலக்கணங்களால் தெரிவிக்கவோ முடியாத சிறப்புடையது அப்பாலுக்கு அப்பாலான நிலையினையுடைய அரும்பொருளாக மதிக்கின்றனர். தொடக்கம் சக்திநடுநிலைமை, முடிவு என்ற மூன்றும் அற்றதாக அப்பொருள் இரிப்பினும், பெரும்பாலும் சக்தி என்ற பெண்ணாலான சொல்லினாலே பக்தியுடன் வழங்கப் படுவதால் அது பெண்பாலாகவே கருதப்படுகிறது. பக்தர்களின்...

சாக்த மதம்

இந்து மத்தத்தில் சிறப்பாகச் சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம்,கௌமாரம்,சௌரம் என ஆறு சமய வழிபாடுகள் உண்டு. சக்தியை சிவபெருமானுக்குத் தேவி என்றும், திருமாலுக்குத் தங்கை என்றும்,கணபதி முருகன் ஆகியோருக்குத் தாய் என்றும் கூறுகின்ற புராணப் போக்குகளால் இந்து சமயங்கள்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமை புலப்படும்.இதனை உணரவேண்டுவது மக்களின் கடமையாகும். சக்தி வழிபாடு காஷ்மீரத்தில் சஷிரா பவானியும், மகாராட்டிரத்தில் துளஜா பவானியும், குஜராத்தில் அம்பாஜியும் உத்திரப்பிரதேசத்தில் விந்தியாவாசினியும், வங்களாத்தில் காளியும், அசாமில் காமரூபியும், மைசூரில் சாமுண்டீஸ்வரியும், கேரளத்தில் பகவதியும், காஞ்சியில் காமாட்சியும், மதுரையில் மீனாட்சியும், தில்லையில் சிவகாமியும், திருவாரூரில் கமலாம்பிகையும், திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியும், திவண்ணாமலையில் உண்ணாமுலையம்மையும், திருக்கடவூரில் அபிராமியும் பெருஞ் சிறப்புடன் வழிப்படுகின்றனர். காசி விசாலாட்சியும் தென் கோடியில் கன்னியாகுமரியம்மனும் அம்பிகை வழிபாட்டிலே ஒருமைப்பாட்டின் நிலைக்களங்களாக விளங்குவதைக் காணலாம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அம்மையின் அருள் தலங்கள் சக்த...

சக்தி வழிபாடு

படம்
சக்தியைப் போற்றி வணங்குவது என்பது மிகப்பழங்காலந்தொட்டே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து வந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சிந்துவெளி நாகரிகம் ஏறத்தாழக் கி.மு. 4000 ஆண்டுகள் முற்பட்டதாகும். அந்த நாகரிகத்தின் சுவடுகளாக, மொகஞ்ச தாரு ஆரப்பா என்னும் இடங்களில் அகழ்வாராய்சிசகளிற் கிடைக்கப் பெற்ற உலக அன்னையின் மணசிலைகளைக் கொண்டு சக்தி வழிபாடு மிக மகத் தென்னமையானது என்பது புலனாகும். தொல்பொருள் ஆராய்ச்சித் துறைத் பேரறிஞர் ஆகிய சர் ஜான் மார்ஷல் சிந்துவெளிப் பகுதியிற் கிடைத்த அன்னையின் சிலைகளைப் போலவே பாரசீகம்,ஏஜியன்,எலம்,மெசப்படோமியா,பிரான்ஸ், காஸ்பியா, பாலஸ்தீனம், சைப்ரஸ், க்ரீட், எகிப்து, துருக்கி முதலிய பல்வேறு பகுதிகளிற் கிடைத்த சிலைகளும் இருப்பதனால், அம்பிகை வழிபாடு மிகப்பழங்காலத்திலேயே பல நாடிகளிலும் பரவியிருத்தல் வேண்டும் என்று விளக்குகின்றார். உலகளாவிய நிலையிலிருந்து சக்தி வழிபாடு , பல்வேறு மதங்களிலும் சிறந்தோங்கி வந்துள்ளது. எடுத்துக்காட்டாக அன்னை மரியாள் சிறப்பைக் கொண்டாடுவதன் வாயிலாக கிறித்துவ மதமும், தாராதேவியின் புகழைப் போற்றுவதன் வாயிலாகப் பௌத்தமும் ஒரு வகையில் தாய்த் தெ...

இசை...

இசைக்கு இசையா உயிர் உண்டா? இசை மனதைப் பக்குவப்படுத்தும்,நம்மை வேறு உலகில் சஞ்சரிக்க செய்யும்,உணர்வுகளைத் தூண்டி இன்ப நாட்டத்தைக் கொடுக்கும், மேலும் நம்மை வயப்படுத்தி தன்மயமாக்கும் தன்மையும் அதற்குண்டு.எப்பொழுது என்றால் செவி வழிப் புகுந்து இதய நாடிகளைத் தடவி உயிரினங்களை இயைவுப் பொருந்தவும் வைக்கின்ற இனிய ஒலிகளாக மாற்றும் பொழுது. நுண்கலைகளுள் மிக நுட்பம் வாய்ந்த இசைக்கலை என்பர் ஹெர்பட் ஸ்பென்சர். இசையின் பெருமையினை பாலுண் குழந்தை யொடுநற் பசுவும் பணியும்இனும் ஞாலத் துயர்பண் டிதரும் நல்கியோகியர் ஞானியரும் கோலத் தமரரும் நானுமுகன் முக்கணன் கோவலனும் சாலச் சுகமுற ஓங்கிய நற்கலை சங்கீதமே எனப் பாடுகின்றது தனிப்பாடல். ஏழு சுரங்களுக்குள் இசையினை அடக்கினர். வடமொழியில் சட்ஜம்,ரிஷபம்,காந்தாரம்,மத்திமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் எனவும், தமிழில் குரல்,உழை, கைக்கிளை, துத்தம், இளி, விளரி, தாரம் எனவும் அழைக்கப்பெறுகின்றது. இந்த ஏழிசைகள் பிறக்கும் இடங்களை குறிக்கையில் மிடற்றால் குரலும், நாவால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும் நெற்றியால் இளியும், நெஞ்சத்தால் விளரியும் மூக்கால் தாரமும் பி...

தமிழர் திருமணமுறை -2

வாழ்வியல் வழிகாட்டி (அ) திருவள்ளுவர் வழிபாடு மக்கள் அனைவரும் உலகில் தக்க வகையில் எவ்வாறு வாழவேண்டும் என்று வழிகாட்டியவர் திருவள்ளுவர். அறத்தால் பொறுள் தேடி, அப்பொருளால் இன்புற வேண்டும் என்பதற்காக முப்பால் அருளியவர் அப்பெருமகனார். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் அறத்தால் வருவதே இன்னபம் என்றும் தெளிவு படுத்தியவர் அவர். இரு சிறகு வீசுப் பறக்கும் ஒரு பறவையைப் போல், மணமக்கள் இருவரும் ஒருமைத் தன்மையராய் இல்வாழ்க்கை நடத்தினால் அவர்கள் வாழ்வே வீடுபேறு இன்பம் என்றும், அமிழ்தம் அருந்தும் அமர வாழ்வு என்றும் கூறியவர் அவர். கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் துணையாக அமைந்து குடும்பக் கதமையை இருவரும் ஒப்பாகத் தாங்கி, வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவர்கள் வாழ்வு தெய்வ வாழ்வு என்று உறுதி மொழி தந்தவர் அவர். ஆதலால், நலவாழ்வு வேண்டு அவரைப் போற்றுவோம், எனக் கூறி, வள்ளுவர் சிலைக்கோ, படத்திற்கோ திருக்குறள் நூலுக்கோ மலர் தூவி மணமக்கள் வழிப்படச் செய்தல். வள்ளுவம் வாழ்க ! வாழ்வியல் வாழ்க ! என மும்முறை அவர்களைக் கூறச் செய்தல். சான்றோர் வழிபாடு மணவிழாவுக்கு வந்துள்ள பெருமக்கள்,தாய்மார்கள், செல்வர்கள் அ...

தமிழ் நெறித் திருமணம்...

தமிழரின் திருமண முறை முன்பு எளிமையாக மூத்தோர் முன்னிலையில் நடைபெற்றது.இன்றைக்குக் காணக்கூடிய அக்கினி வளர்த்து,ஐயர் வைத்து நடத்தும் முறை அன்று இல்லை.சிலப்பதிகார காலத்தில் வந்தது என்றாலும் அது ஆரிய கலப்பினால் என்றே கூறலாம். தமிழன் ஏற்படுத்திக் கொண்ட திருமணமுறைபடி திருமணம் நடக்கவேண்டும் என்னும் விருப்பம் கொண்டு பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் அல்லூர் தவச்சாலை நிறுவனர் புலவர் இரா.இளங்குமரனார். இவர் தமிழ் நெறியில் திருமணங்களை எவ்வாறு நடத்துவது எனச் சிலருக்குப் பயிற்சியும் கொடுத்து வருகின்றார். திருமணம் தமிழ் மரபு படி எவ்வாறு நிகழ்த்தவேண்டுமெனப் பொதுக்குறிப்பினைத் தருகின்றார் நம் பழைய மரபு - நம் பண்பாடு - பகுத்தறிவு இன நலம் என்பவற்றைப் பாதுகாத்துப் போற்றும் வகையில் அமைக்கப்படுவது இத் தமிழ்நெறி திருமணம் எளிமை,இனிமை, நிறைவு என்பவை சார்ந்தவையாக இத் திருமணமுறையும்,பிற சடங்குகளும. முற்றிலும் தமிழையும், தமிழ் நெறியாம் திருக்குறளையும் கொண்டு நிகழ்த்தப் பெறுவன. இவை பாராட்டுதல், வாழ்த்துதல் என்பனவே உடையவை நல்லவை அன்றி அல்லவை இடம் பெறாதவை. மகளிர், பெற்றோர், சான்றோர் ஆகியோரை முதன்மைப்படுத்தி நிகழ்த...

நட்பு................

நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன. க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது. நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை ந...

பிள்ளையார் சுழி........

நாம் எழுதத் தொடங்குவதற்கு முன் 'உ' என்னும் எழுத்தை எழுதுவதை வழக்கமாக்க கொண்டுள்ளோம்.இதனை பிள்ளையார் சுழி என்றும்,அது பிள்ளையார் வழிபாட்டின் முதல் சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணகதைகளும் கூறப்பெற்றுள்ளன. பொதுவாக பழங்காலத்தில் தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிய ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்பதுண்டு.இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர்.இந்த தீண்டற்குறியைத்தான் பின்னாட்களில் பிள்ளையார் சுழி என்று கூறும் மரபாக வந்தது. இவ்வாறு பிள்ளையார் வழிபாடு தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே ஏடுதீண்டும் வழக்கம் இருந்துள்ளது என்தென்பது ஆறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மையாகும்.மேலும்,புள்ளியில்லாச் சுழி என்பது வெறும் சுழியத்தைக் குறிக்கும்.ஓலைச்சுவடியில் எழுதும் போது புள்ளி வைப்பதில்லை.புள்ளி வைத்தால் ஏடு பொத்து கிழிந்துவிடும்.ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாக சுழியம் போடுவர்.புள்ளியில்லாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழியென மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின்...

அறக்கட்டளைச் சொற்பொழிவு

படம்
ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் பெயிரில் உள்ள அறக்கட்டளைச் சார்பில் இன்று சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் மா.அறிவு நம்பி அவர்கள் நாட்டாரின் கட்டுரைத் திறன் என்னும் தலைப்பிலும் பதினெண் கீழ்கணக்கும் நாட்டாரும் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். முதல் அமர்விற்கு துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் தலைமையேற்றார். நாட்டாரின் இயற்பெயர் சிவப்பிரகாசம் என்னபதாகும்.இவருக்கு முன் பிறந்த இருவர் மரணம் எய்த,இக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டி திருவேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரை மாற்றி வேங்கடப் பெருமானின் நினைவாக வேங்கடசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.என்று துவங்கினார். நாட்டாரின் கட்டுரையினை ஆய்து,கட்டுரை என்பதற்கு நாட்டார் கூறும் விளக்கம், சொற்களைப் பெய்துஉரைக்கும் திறன்,சொல்லவந்த கருத்தினை வலியுறுத்த அடுக்கி கூறும் உத்தி,அவர் எடுத்தாண்ட நூல்களை வகைபாடு செய்யும் முறை,எந்த நூலைப்பற்றி குறிப்பிட்டாலும் அந்நூலினை அடைகொடுத்து சிறப்பித்துக் கூறும் தன்மை,வினா விடையாக எழுதிச்செல்லும் பாங்கு,இசையில் அவருக்கிருந்த நுட்பமாக அறிவு போன்றவற்றை எடுத்துரைத்தார். இரண்டாம் அமர்விற்கு பேராச...

புத்தகக் கண்காட்சி 2010..

படம்
சென்ற ஞாயிற்றுக் கிழமை புத்தக்கண்காட்சி சென்று வந்தேன் .ஞாயிறு என்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது.அன்று மாலை கமல் வந்ததால் கூட்டம் வெளியில் சென்று விட்டது.உள்ளே சுமாரான கூட்டம்.சென்ற ஆண்டு 15000 ரூபாய்க்கு நூல்கள் வாங்கினேன் .இந்த ஆண்டு 3000 ரூபாய்க்குத் தான் நூல்கள் வாங்கினேன்.குடும்பத்துடன் வந்து மக்கள் நூல்களை வாங்கிய காட்சி மகிழ்ச்சியாக இருந்தது. விடியல்,அடையாளம்,தமிழ்மண,மெய்யப்பன்,பாரி,காவ்யா,அன்னம்,நர்மதா,காலச்சுவடு, உயிர்மை பதிப்பகங்களில் மட்டுமே நூல்கள் வாங்கினேன்.

தினமணியில்....

வலையுலகப் படைப்பாளிகள்! எம். மணிகண்டன்First Published : 01 Jan 2010 12:12:00 AM IST எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம். உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிற...

கனவு மெய்ப்பட வேண்டும்....

நம்முடைய தமிழ்ப்புத்தாண்டு தை 1 என்றாலும் உலத்தாரால் பெருபான்மை (ஜனவரி 1)புத்தாண்டாகக் கொண்டாப்படுவதால் ,நாமும் கொண்டாடுகின்றோம். (அப்படி தானே) சென்ற ஆண்டு பல கனவுகளைச் சுமந்து கொண்டு,அதனை நோக்கியே சில நகர்வுகள் இருந்து இருக்கும் .அதனை விட்டு பிறழ்ந்தும் இருப்போம். இந்த ஆண்டுகள் இதனை எல்லாம் செய்ய வேண்டுமெனப் பல திட்டங்களை எல்லாம் வகுத்துக்கொண்டு ,கனவுகளைக் கண்டு கொண்டு, இருப்போம்.வழக்கம் போல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆகா! இதனை எல்லாம் நினைத்தோம் முடியவில்லையே என்று வருத்தப்படுவோம்! சிலர் தாங்கள் எண்ணிய செயல்களை எல்லாம் எண்ணியபடி முடித்து நிறைவு கொள்ளுவார்கள்.அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது ! பல அறிஞருகள் இதனைப் பற்றியெல்லாம் கூறியிருக்கின்றார்கள்(புத்தாண்டின் தொடக்கத்திலேயே இப்படி எல்லாமா? என்று வினவுவது காதில் விழுகின்றது சரி சரி பல அறிஞர்கள் கருத்துக்களை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,அதனைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்) உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துக்கள்.

புத்தாண்டே வருக.....

படம்
பொன்னொளி பூக்க பிறக்கும் புத்தாண்டே வருக! வாழ்வில் வசந்தம் தருக ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்புடன் கல்பனா சேக்கிழார்

தேங்காய் எதற்கு தெரியுமா?.

ஒருமுறை கரந்தை கவிஞரான வேங்கடாசலம் பிள்ளை ஒரு நாள் தன நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போது, " திருமணத்தில் ஏன் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? " என்று புதிராக கேள்விக்கணையைத் தொடுத்தார்.காரணம் தெரியாது நண்பர்கள் விழிக்க, நகைப்புடன் அதற்கான விளக்கத்தை அவர் பாணியிலேயே கூறினார். " தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள் " என்று விளக்கமளிக்க அங்கு கூடியிருந்த நண்பர்கள் அவரின் நயமானப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தனர்.

அங்கே போகாதே....

உளவியலின் தந்தை என்று போற்றப்படுபவரான சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒருமுறை தன் மனைவியுடனும் மகனுடனும் வெளியே சென்றார். குழந்தையை சற்று விளையாட விட்டு விட்டு ஃபாராய்டும் அவர் மனைவியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.பேசிகொண்டு இருந்த ஆர்வத்தில் விளையாடிக்கொண்டு இருந்த மகனை கவனிக்க மறந்தனர். அவர்களுடைய உரையாடல் முடிந்து விளையாடியப் பையனைத் தேடினால் காணவில்லை.இருவரும் சேர்ந்து குழந்தையை எங்கே போயிருப்பான் என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தனர்.கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தன் மனைவியைப் பார்த்து ஃப்ராய்ட் கேட்டார்," நீ அவனை ஏதாவது ஒரு இடத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினாயா?" என்று கேட்டார். "ஆமாம் ! அருகில் உள்ள நீருற்றுன் பக்கத்தில் மட்டும் போகாதே என்று சொன்னேன்!" என்றார். இருவரும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது,நீருற்றின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.இதைக் கண்ட அவரது மனைவிக்கு ஒரே ஆச்சரியம்! " இங்கே தான் அவன் இருப்பான் என்று எப்படி யூகித்தீர்கள் " , என்று தன் கணவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்" நம...

சொற்பொழிவு

படம்
இன்று அண்ணமலைப் பல்கலைக்கழத் தமிழியல் துறையில் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் பெயரில் தொடங்கப்பெற்றுள்ள அறக்கட்டளையின் சார்பில் பேராசியர் ப.மருதநாயகம் சொற்பொழிவாற்றினார். காலையில் துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் தலைமைதாங்க தமிழின் செவ்வியல் தகுதிகள் என்னும் தலைப்பில் பேரா.ப.மருதநாயகம் கருத்துரையாற்றினார். பிற செவ்வியல்மொழி இலக்கியங்களில் இல்லாத சிறப்பு தமிழில் உள்ளவற்றையும்,தமிழின் சிறப்பினை மேலைநாட்டார் எடுத்துக் கூறிய திறத்தினையும் எடுத்துரைத்தார். பன்மொழி வல்லுநராகத் திகழும் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் பிறமொழிகளோடு தமிழினை ஒப்பிட்டுத் தமிழ் மொழி உயர்ந்த ;பிறமரபுகளுக்குக் கடன்படாத ; தன்னளவில் நிறைவு கொண்ட ஒரு மொழி என்று கூறியதை எடுத்துக்காட்டினார். இவர் தமிழின் பால் கொண்ட காதலால் புறநானூற்றினையும் ,கம்பராமாயணத்தில் ஒரு காண்டத்தினையும் மொழிப்பெயர்ந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இவருக்கு சமஸ்கிரும் பயிற்றுவித்த இங்கால்ஸ் என்பவர் சமஸ்கிருத மொழியினையும் அதன் இலக்கியத்தினையும் ஆராய்ந்து சமஸ்கிருத்தில் உள்ள சில கவிதை மரபுகள் வேறு எங்கிருந்தோ வந்துள்ளது என்று ஆராய்ந்த...

தேவதை இதழில்....

படம்
டிசம்பர் மாதம் வெளியான தேவதை இதழில்(16 -31 ,2009) வலையோடு விளையாடு என்னும் பகுதியில் என்னுடைய வலைப் பதிவினை அறிமுகம் செய்துளார்கள்.அதனோடு வலைப்பகுதியில் இடம் பெற்று இருந்த சில பகுதிகளை நவநீதன் அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கும் தேவதை இதழின் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விளக்கு.....விளக்கு...

பொதுவுடமைத் தோழர் ப.ஜீவானந்தம் ஒரு முறை ஒரு மண்டபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டுருந்தார் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களில் பலர் விளக்கு விளக்கு என்று குரல் எழுப்பினர். அந்த இருட்டிலும் ஜீவா அவர்கள் நகைச்சுவையுடன் ' தோழர்களே ! நான் உங்களுக்குப் பல செய்திகளை விளக்குவதற்காக வந்திருக்கின்றேன்.இத்தனை நேரம் உங்களுக்கு அவைகளை விளக்குவதற்காக உரையாற்றி வருகின்றேன்.எரிந்த விளக்குகள் வராவிட்டால்கூட,நான் உங்களுக்கு விளக்குவேன்.ஆகவே,அணைந்து போன விளக்கு பற்றி கவலைப்படாமல் நான் விளக்குவதைக் கேளுங்கள் ' என்று கூறினாராம். உடனே கூட்டத்தில் இருந்து சிலர் விளக்கு இல்லை என்றால் நீங்கள் விளக்குங்கள் என்று குரல் கொடுத்தனர்.