இடுகைகள்

பிப்ரவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணா கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் சார்பாக அண்ணா நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் இரண்டுநாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய் பட்டிரு ந்தது.அது தொடர்பான கருத்தரங்க முதல் நாள் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. துணை வேந்தர் ,மொழிப்புல முதன்மையர்,சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.மொழிப்புல முதன்மையர் அனைவரையும் வரவேற்று, அண்ணாவைப் பற்றி சிறந்த அறிமுகவுரை நல்கினார்கள். தலைமையுரை மாண்பமை துணைவேந்தர் இராமநாதன் வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மா.நன்னன் தமிழுலகம் நன்கறிந்த தமிழறிஞர் அவர் தமது உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று நான் கூறமாட்டேன் வாழ்த்து எனக் கூ றினார்.அதற்கு அவர் அளித்த விளக்கம் சிந்திக்க வைப்பதாக இருந்தது.நம்முடைய சங்க இலக்கியங்களில் மன்னர்களை வாழ்த்துகின்றார்களே ஒழிய வணங்கவில்லை.வணங்குதல் என்பது பிற்காலத்தில் தோன்றியது எனக் கூறினார்.மேலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். உணவு இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் முனைவர் சி.மறைமலை அவர்கள் அண்ணாவைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.ஆய

ஏ.ஆர்.ரஹ்மான்

படம்
பலருக்கு கனவாக இருக்க தமது உழைப்பாலும் முயற்சியாலும் நனவாக்கி இரண்டு ஆஸ்கார் அவார்டுகளைப் பெற்று ,தமிழினத்துக்குப் பெருமைத் தேடி தந்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாளை அண்ணா நூற்றாண்டு தொடர்கான கருத்தரங்கு இரண்டு நாள்கள் நடைப்பெறவுள்ளது.
படம்

நான் கடவுள்

படம்
‘அகம் ப்ரமாஸ்மி ‘ இது தான் இப்படத்தின் மூலம்.இந்த அடியைப் பார்த்தவுடன் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று நினைவில் வந்தது எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதனைக் கண்டறிவா ரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கின் கண்ணாடி போலகலந்து நின்றானே. இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் யார் ஒருவர் உணர்ந்து அறிந்துகொள்கிறார்களோ அவர்கள் இறைவனாகிறார்கள். தமிழ் சினிமாவுலகை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றார் இயக்குனர் பாலா. இப்படம் தமிழின் வெளிவந்த சிறந்த படங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்கது.பல்வேறு விருதுகளுக்குத் தகுதியுடைய படம். திரைப்படம் என்றால் கதாநாயகன்,நாயகியைச் சுற்றியே அமைய வேண்டும் என்ற மரபினைப் பாலா கட்டுடைத்து,அப்படத்தில் வரக் கூடிய ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழச்செய்துள்ளார் வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்து அழகான நாவல் படிப்பது போன்ற உணர்வினையும் தோற்றிவித்து, ஆழமாக காட்சிப்படுத்தி முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளார் இயக்குனர் பாலா விளிம்பு நிலை மாந்தர்களின் மீது இயல்பாக ஏற்படக் க

கருத்தரங்க அறிவிப்பு மடல்

நாகை அ.ம.து.மகளிர் கல்லூரியுடன் இணைந்து-திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் நடத்தும் ஏழாவது அனைத்துலக வரலாற்றுத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.இக்கருத்தரங்கிற்கு தமிழ்மொழி வரலாறு,தமிழின வரலாறு,தமிழ் மன்னர் வரலாறு,தமிழர் பண்பாட்டு வரலாறு,தமிழ் இலக்கிய வரலாறு,தமிழ் இலக்கண வரலாறு,தமிழர் சமய வரலாறு,தமிழர் அறிவியல் வரலாறு,தமிழ் கவிஞர்-எழுத்தாளர் வரலாறு,திழ் அறிஞர்கள்-நினைவுச்சின்னங்கள் வரலாறு என்ற மையப் பொருண்மையில் அமைந்த கட்டுரைகளை எழுதலாம்.சிறந்த 50 கட்டுகளைத் தேர்ந்தெடுத்து கட்டுரையாளர்களுக்கு செந்தமிழ்ச் சுடர் என்ற பட்டம் வழங்கப் பெறுகின்றது.சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து 1000ரூபாயும் செந்தமிழ் வேந்தர் பட்டமும் வழங்கப்பெறுகிறது. பதிவுக்கட்டணம்---ஆய்வு மாணவர்களுக்கு 500 மற்றவர்களுக்கு-550 காசோலை எடுக்க வேண்டிய முகவரி கண்ணகி கலைவேந்தன் என்ற பெயரில் பாரத வங்கி,இந்தியன் வங்கி,லெட்சுமி வங்கி,கார்பரேசன் வங்கி,கூட்டுரவு வங்கி ஆகிய வங்கிகளில் எடுத்து அனுப்பலாம்.பணவிடையாகவும் எடுத்து அனுப்பலாம். கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி முனைவர் மு.கலைவேந்தன் தலைவர் தமிழய்யா கல்விக் கழ

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள

கருத்தரங்கம்

கணிணி மற்றும் இணையத்தமிழ் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் 27,28.02.2009ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணம் ஆய்வாளர்க்ளுக்கு 100 விரிவுரையாளார்களுக்கு 200.ஆகும்.கட்டுரை16.02.2009தேதிக்குள் அனுப்ப வேண்டும். முனைவர் இரா.குணசீலன் பகுதியில் கண்டது.