தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்ச்சொல் இலக்கணம்தான் அம்மொழியின் இளமையைக் காத்தது.அளவிறந்த கருத்துகளும் வழிவகுக்கும் அவற்றில், ஒருசில சிறந்த பகுதிகளையே நாம் இங்கு அறிமுகம் செய்துகொள்கிறோம். தமிழ்மொழியிலுள்ள மொழிகளின் உள்வகைகளை ஓரிடத்தில் கூறுகின்றார். ஒரெழுத் தொருமொழி ஈரெழுத்தொருமொழி இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே தமிழில் ஓரெழுத்து தொரு மொழிகள் மிகப்பல. நெட்டெழுத்து என்பன உயிர்நெடிலாகிய உயிர்நெடிலாயினும் வேறு பொருள் தரும்போது சொல்லாகிவிடும். எழுத்துக்கள் தொடர்ந்து பொருள் தருவது சொல் என்பது மாறி, எழுத்தே தன்னை உணர்த்துவதன்றி பிறிதொரு பொருள் தந்து சொல்லாவது தமிழின் சிறப்புகளில் ஒன்றெனலாம். ஆங்கிலத்தில் A- என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக பயன்படுகிறது.A BOOK- ஒரு புத்தகம் .A CLASS- உயர் வகுப்பு முதல் வகுப்பு I - நான். தமிழில் ஆ -பசு, வியப்புக்குறிப்பு, ஊ - தசை,ஊன்,உணவு. ஈ - தருவாயாக.தா,போ,கா,நா,வா,சா,பா,யா,மா,தீ,போ,கூ என அடுக்கலாம். சில பலபொருடையன. இவை சைகை மொழியிலிருந்து பிறந்த்தற்கு அடையாளம் என்பர் ஆய்வாளர். கூ- குயில், கா- காக்கை, மா- மாடு இவை போல்வன போ...