இடுகைகள்

ஒக்கநாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆத்தா என்னும் ஆளுமை

எத்தனையோ உறவுகளை கடந்து சென்றுகொண்டுள்ளோம் ஆனால் சில உறவுகள் உள்ளிருந்து உடற்றிக்கொண்டு இருக்கும். அவர்கள் நம்முள் ஏற்படுத்திய அதிர்வுகள்  அதிர்ந்துபடியே உடன் உறையும். நாம் சோர்வடையும் பொழுதெல்லாம் அது நம்மை விழிப்படையச்செய்யும். எப்படி பட்ட மனுஷி இவள் எனப் பல நேரங்களில் நான் பார்த்து வியந்தவர் என் அம்மாவைப் பெற்ற அம்மாயி என்று எங்கள் ஊர்பக்கம் அழைகக்ககூடிய எங்கள் ஆத்தா. 20 வயதுக்குள் இரண்டு பெண்பிள்ளைகள், சிங்கபூருக்குச் சென்ற தன் கணவன் இறந்துவிட்டார் என்னும் செய்தி கேட்டு, வாழ்க்கையின் ஒட்டுமொத்த துயரங்களையும் சுமந்து நின்ற நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்துகாட்டிய தன்நம்பிக்கை அவர். நான் பிறந்த ஊர் கிராமம் 1950 அந்த காலகட்டங்களில் கிராமங்களின் முகம் எப்படியிருந்து இருக்கும் என்பது நமக்கும் தெரியும் , கணவனை இழந்த சூழலிலும், தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய இரண்டு பெண்களையும் பி.யூ.சி வரை படிக்கவைத்தவர். வீட்டு வேலையிலிருந்து வயல் வேலைகள் வரை அவருக்கு அத்துப்படி. கரம்பை என்று சொல்லக்கூடிய ஊரைவிட்டு தூரமாக இருகக்கூடிய வயல்வெளியில் தனியாளாய் நின்று, இரவு எந்நே...

கதைகதையாய் காரணமாம்...ஒக்கூர்(ஒக்காநாடு கீழையூர்)

ஊர் வரலாறு நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு நலம் பெறும் ஒக்கநாடு பச்சிலை பறிக்கா நாடு பைங்கிளி நோகாத நாடு கள்ளர் மரபு தவறாத நாடு கடல் தண்ணீயை வாட்டும் நாடு சொல்லுக்கும் பெரிய நாடு நிகழத்தால் பதில் சொல்லும் சுயமரியாதை உடைய நாடு   ஊர்ப்பெயர்கள்   பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும் கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு   என்னும் ஊர்களாகும். 10,11 ஆம் நூற்றாண்டுகளில் இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும் பிரித்துள்ளது.   இதில் நிகழத்தால் பதில் சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில் நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற ஊர்க...

செல்லியம்மன் திருவிழா

படம்
அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது.காக்கப்படுகின்றது என்றும் கூறலாம். வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு ,கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ளதுதான் ஒக்கநாடு கீழையூர் என்னும் கிராமம். இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது.ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது.இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும்,இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர். கோடைக்காலத்தில் (மே) மாதத்தில் விழாக்கள்நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக் கட்டுடன் இங்கு விழாத்தொடங்கியது.இன்னும் இங்கு விழாவினைப் பறையறைந்து அறிவிக்கும் முறைவுள்ளது.விழா அறிவிக்கப்பட்...