இயக்கி இந்தியத் தொல்குடித் தெய்வம் முனைவர் வெ. வேதாசலம்
இயக்கி இந்தியத் தொல்குடித் தெய்வம் முனைவர் வெ. வேதாசலம் இன்று இந்தியா என்று கூறப்படும் நிலத்து தொல்பழங்காலத்து பல கடவுளர்களும் வழிபாட்டு முறைகளும் இருந்துள்ளன. அவற்றுள் இயக்கன் – இயக்கி வழிபாட்டு முறை குறிப்பிடத்தக்கது. இயற்கையும் இயற்கை இறந்த ஆற்றல்களைத் தொல்குடிகள் வேவ்வேறு நிலைகளில் குறிப்பாக தங்கள் ஊர் மரங்களில் குடிக்கொண்டிருப்பதாகவும் தங்களுக்கு வளத்தை அளிப்பதாகவும் நம்பி, அம்மரக்கிளைகளுக்கு மாலை அணிவித்து, மரத்திற்கு மேடை அமைத்து விளக்கேற்றி படையல் படைத்துள்ளனர். பின்னர் உருவங்கள் செய்து வணங்கியுள்ளனர். பிற்காலத்து இயக்கர்- இயக்கியர் வழிபாடாக மாறியுள்ளது. இந்தியாவில் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே அதாவது ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே இவ்வழிபாடு மிகச்சிறப்புடன் இவ்வழிபாடு இருந்துள்ளது. வைதீக, சமண, பௌத்த மதங்கள் தொடக்கத்தில் இவ்வழிபாட்டினை நிராகரித்தலும் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாகத் தங்கள் தெய்வங்களின் காவல், ஏவல் தெய்வங்களாக உட்செரித்துக்கொண்டனர். பொதுவாக இயக்கியை வளமையின் தெய்வமாக வணங்கியுள்ள...