பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியத்தில் இராமாயணம் மகாபாரதம் குறிப்புகள்
இந்தியக் கண்டம் என்று அழைக்கப்பெறும் முப்புறம் ஆழிசூழ் நிலத்து தொன்மை கதைகள் இராமாயணம், மகாபாரதம். இக்கதைகள் இந்திய நிலவெளியில் வாய்மொழியாகவும் எழுத்து மொழியாகவும் உரைமொழியாகவும் திரைமொழியாகவும் வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்தும், நவீன புனைவாக்கங்களில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்து வருகின்றன. தமிழ் மொழியின் தொல் இலக்கியங்களாக அறியக்கூடிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு பனுவல்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் உவமையாகவும், மன்னர்களின் சிறப்பை உயர்வுபடுத்தி சொல்லும் சூழலிலும் புலவர்கள் இரு இதிகாசங்களிலும் வரக்கூடிய கதை மாந்தர்களையும் கதையின் சில குறிப்பிட்ட தருணங்களையும் பயன்படுத்தியுள்ளனர். Ø ஊன்பொதி பசுங்குடையார் Ø முரஞ்சியூர் முடிநாகராயர் Ø தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார் Ø பெருங்கடுங்கோ Ø சோழன் நல்லுருத்திரன் Ø கபிலர் Ø நல்லந்துவனார் Ø நப்பண்ணனார் Ø இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் புறநானூறு 378 ஆம் பாடலில் இராமன் சீதையை இழந்ததும் இராவணன் அவளைக் கடத்திச் சென்ற...