இடுகைகள்

திருக்குறள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவள்ளுவரின் உருவப் படங்கள்

படம்
 

நட்பு................

நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன. க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது. நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை ந...

வள்ளுவர் கண்ட சமுதாயம்....

இன்றைய நாள்களில் மனிதன் சாதி,மதம் என்னும் தளையினால் கட்ப்பட்டு,சுயசிந்தனை இன்றி தம் மதம் பெரிதென எண்ணுவதும்,அதற்காக தீவிரவாதத்தைக் கையில் எடுப்பதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.இதனால் என்ன பயன் விளைகின்றது என்பதனை யாரும் சிந்திப்பதில்லை.ஒவ்வொரு மலருக்கும் மணம் வேறுபடுவது போல ,ஒவ்வொரு சமயங்களின் புறம் வேறுபட்டிருந்தாலும் ,மணம் என்பது பொதுவானது போல அச்சமயங்கள் கூறும் அடிப்படைப்படை அழ்பொருள் ஒன்றுதான்.இதனை நாம் மறக்கிறோம்,மறுக்கிறோம் அதனால் பல பூசல்களும்,மோதல்களும்,உயிர்வதைகளும் ஏற்படுகின்றன. இந்நிலையினைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை தாம் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்திலும் இறைவனைப் பற்றிய எந்த குறிப்பும் தரவில்லை.(கடவுள் வாழ்த்தினை வள்ளுவர் பாடவே இல்லை என்று சிலர் கூறுவர்)பத்துப்பாடல்களில் ஏழு இடங்களில் இறைவனின் அடி சிறப்பை கூறிகின்றாரே ஒழிய கடவுளின் முகத்தினைக் கூறினாரிலர்.நற்றாள்(2),மாண்டி(3),இலானடி(4),தாள்சேர்ந்தார்(7,8),தாள்(9),இறைவனடி(10) முதல் பாடலில் வரும் பகவன் என்று வரும் சொல் சமணசமயக் கடவுளான அருகனைக் குறிக்கும் அதனால் அவர் சமணசமயத்...

அருவினை என்ப உளவோ..........

காலப்பெருவெளியில் எத்தனையோ நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் வாழுங்கலையை வாழ்க்கையில் இருந்து பிழிந்து, சாறாய் வடித்துப் பருக கொடுத்திருக்கும் நூல் திருக்குறள். இந்நூல் வாழ்க்கையின் பிழிவாய் இருப்பதனால் தான் உலகப் பொதுமறையாக வாழ்கின்றது. 1330 குறளிகளையும் அவதானிக்கும் போது காலத்தின் தேவைக்கு ஏற்ப கருத்துக்களை உட்செரித்து, தனித்தன்மையுடன் திகழ்வதைக் காணலாம். காலம் கண் போன்றது என்பர். காலம் கிடைத்தற்கரிய ஒன்று.அதை நிருவகிக்க இயலாவிட்டால் வேறு எதனையும் நிருவகிக்க இயலாது எனபர் கால நிருவாக மேலாணமை பற்றி நிருவாக மேதை பீட்டர் டிக்கரின்.என்னிடம் எதனை வேண்டும் என்றாலும் கேள் காலத்தைத் தவிர என்றார் காலத்தின் அருமையை உணர்ந்த நெப்போலியன்.நீ தாமதிப்பாய் ஆனால் காலம் தாமதிக்காது என்று காலத்தின் தேவையை வலியுறுத்துவார் பெஞ்சமின் பிராங்கிளின். காலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக இன்றியமையாது.காலத்தை ஒருவன் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த தொடங்கினால் அவன் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவான். இன்று நாம் கால மேலாண்மையைப் பற்றி பேசுகின்றோம்,படிக்கின்றோம்,ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முன் தோன்றிய வள்ளுவ...

உள்ளியது எய்த........

இற்றை நாட்களில் புத்தக கண்கட்சிகளுக்குச் சென்றோம் என்றால் அங்குப் பெருமளவில் காணக்கூடிய நூல்கள்,வாங்க கூடிய நூல்களாக இருப்பது தன்னம்பிக்கையூட்டும் சுயமுன்னேற்ற நூல்களாக உள்ளன. சிறகை விரி சிகரம் தொடு,சுயமுன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டி,தன் முயற்சி,நமது இலக்கு என்ன அடைவது எப்படி,நம்மால் முடியும், நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள், நினைப்பதெல்லாம் நடந்துவிடும், வெற்றிக்கு வழிகாட்டி,வெற்றியின் மூலதனம்,தடைக்கு விடைகொடு,உங்களால் வெல்ல முடியும் போன்ற நூல்களைக் கூறலாம்.இந்நூல்களுள் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முப்பாட்டன் வள்ளுவர் கூறிவிட்டார். ஒருவன் வாழ்க்கையில் வெறுமனமே உட்கார்ந்து இருந்தால் காலம் என்ற மண்ணில் தன் அடையாளத்தைப் பதிக்கமுடியுமா? இந்த உலகத்தில் எதனையுமே செய்யாமல் எதனையும் பெற முடியுமா? சுதந்திரம் வேண்டுமென நம்நாட்டவர் கொண்ட வேட்கை தானே அந்நியர்களை இம்மண்ணைவிட்டு விரட்டியது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் வேட்கையாக இருக்க வேண்டும். நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றிபெற முடியுமா என்றால் முட...

வள்ளுவர் கண்ட சமுதாயம்...1

கள்ளுண்ணாமை........ சமுதாயம் என்பது என்ன என்னும் வினாவிற்கு எப்படி விடை கூறலாம்.மனிதர்கள் கூட்டமாக வாழ்வது சமுதாயமா? பன்றிகள் கூடதான் கூட்டமாக வாழ்கின்றன அதனை சமுதாயம் என்று கூறலாமா?முடியாது இல்லையா?அப்பொழுது சமுதாயம் என்பது பகுத்தறிந்து தனக்கு இது தேவை தேவை இல்லை என ஆய்து அறிந்து தெளிந்த சிந்தனை,நல்வழிபட்டு நடந்து பிறரையும் நடத்தி வைப்பவர்கள் நிறைந்த கூட்டத்தையே சமுதாயம் என்று கூற வேண்டும்.ஆனால் இன்று சமுதாயம் எப்படி உள்ளது.எங்கு காணீணும் பொய்கள் புரட்டுகள் ஏமாற்றங்கள்,வஞ்சகங்கள்,இளைய சமுதாயம் பெரும்பாலர் மதுவுக்கு அடிமை,என்றல்லவா இருக்கின்றது.இதனை சமுதாயம் என்று எப்படி ஒத்துக்கொள்வது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முப்பாட்டன் வள்ளுவ பெருந்தகை நாம் வாழ்க்கையில் சிறந்த நெறியைப் பின்பற்றி மேன்மைகளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வாழ்க்கையின் சாரத்தை ஒன்றே முக்கால் அடியில் பிழிந்து சாறாக கொடுத்துள்ளார். அவற்றுள் ஒன்றுதான் கள்ளுண்ணாமை .அறிவினை மயக்கும் கள்ளினை உண்ணுவதால் ஏற்படும் உடல் நலக்கேட்டினையும் ,கள்ளுண்ணுபவனைச் சமுதாயம் எப்படி மதிக்கும் என்பதைப் பற்றி பத்துக் குறள்...

குறளின்பம்..........

காமத்துப் பாலில் ஒரு குறள் துனியும் புலவியும் இல்லாயின் காமங் கனியுங் கருக்காயும் அற்று.(1306) இக்குறளுக்குப் பரிமேலழகர் முதிர்ந்த காலமாகிய துனியும் இளைய கலமாகிய புலவியும் இல்லையாயின்,காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். அதாவது மிக முதிருந்த இறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமையாது ஆதலின்,துனியில்லை யாயின் கனியற்று என்றும் கட்டிளமைத்தாய காய் நுகருச் செவ்வித்து அன்றாகலின் புலவி இல்லை யாயின் கருக்காயற்று என்றும் கூறினான்.இவ்விரண்டும் வேண்டும் என்று கூறியவாறு என்று பொருள் கூறுகின்றார். இக்குறளுக்கு பரிபெருமாள் இது தலைமகள் புலவி நீட்டித்தவழி துனி இல்லையாயின் பழம் போலும் இனிமை தரும்;புலவி இல்லையாயின் காய் போல துவர்க்கும் ஆதலால்,இஃது உணர்தற்கு நல்லளவு என்று கூறியது என்று விளக்கம் தருவர். பரிதியார் துனியும் புலவியும் இல்லாத காமம் பழத்தைப் போன்று காயைத் தின்றதற்கு ஒக்கும் என்று உரைகாணுகிறார். பழைய உரையாசிரியர் ஒருவர் துனியும் புலவியும் உண்டாயின் காமம் கனி போல சுவைக்கும்.துனியும் புலவியும் இல்லையாயின் காமம் இளங்காய் போலச் சுவை இல்லாமை பெறும் என்றும், புத்துரை ஆசிரியர்...

நினைப்பும் மறப்பும்........

தலைவியை விட்டு பொருள் ஈட்டும் காரணமாக பிரிந்து மீண்ட தலைவன் தன் காதலியிடம் (மனைவியிடம்)உரையாடுங்கால் முன் பிரிந்த போது விருப்புடன் உன்னை நினைத்தேன் என்று கூறினான்.உடனே அவள் மறந்தால் தானே நினைக்க முடியும்,ஏன் என்னை மறந்தீர் எனக் கேட்டு அவனிடம் புலந்தாள். உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.(1316) நினைப்பதும் மறப்பதுமின்றி எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற கருத்தைத் திருமூலரும் தமது திருமந்திரத்தில் பதிவு செய்துள்ளார். நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற் ற்றுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் ற்றுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறிலவன் நீறிய னாமே (2970) இதே கருத்தினைக் கம்பரும் ஆண்டுள்ளார். மண்டோதரி இராவணனை இடையறாது எப்பொழுதும் நினைத்திருந்தாள் என்பதைக் குறிப்பிடும் போழுது, 'நினைத்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்' என்று கூறுகின்றாள்.

திருக்குறள் முதல் உரையாசிரியர்

காலந்தோறும் கற்போருக்குப் புதுப்பொருளைக் காட்டி,வாழ்வின் உயர்வுக்குத் வழிகாட்டியாய் விளங்கும் அறநெறி நூல் திருக்குறளாகும்.குறளின் பொருள் சுவை உண்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது. அதனால்தான் இதனைக் கற்போரெல்லாம் உரையெழுதவேண்டுமென எண்ணம் கொள்கின்றனர். பிற்காலத்தில் பல உரைகள் தோன்றுகொண்டு இருக்கின்றன. அவ் உரைகள் எல்லாம் பெரும்பாலும் பழைய உரைகளைத் தழுவியே அமைந்துள்ளது எனலாம். சில குறள்களுக்கு மட்டுமே வேறுபட்ட உரைகளைக் காணமுடிகின்றது. பழைய உரையாசிரியர்கள் அல்லது மரபுரையாசிரியர்கள் என்போர் பதின்மர்.அவர்களுள், இன்று நமக்கு ஐவர் உரைகளே கிடைத்துள . இவ் ஐவர் உரைகளுள் காலத்தால் முற்பட்ட உரை மணக்குடவர் உரையாகும்.ஆனாலும் இவர் உரையினை நோக்குழி,,இவருக்கு முன் உரைகள் இருந்துள்ளதைக் காணலாம். மணக்குடவர் உரையில் தடிந்தெழுலி தானல்கா தாகிவிடின் (17) என்னும் குறளுக்கு உரை கூறுகையில் ‘தடிந்து’ என்பதற்கு ‘கூறுபடுத்து’ என்று உரைப்பாரும் உளர் என்றும்,’செவிகைப்ப சொற்பொறுக்கும்’ என்பதற்குப் ‘புரோகிதர் தன்னிடத்துச்சொல்லுஞ் சொற்களைப் பொறுக்க வல்லென்பாரும் உளர்’என்றும் காணப்படுதலால்,இவருக்கு மு...

திருக்குறள்

உலகம் அற இலக்கியங்களுள் சிறந்ததும், உலக பொதுமை கருத்துக்களைத் தாங்கியுள்ளதுமான நம் தமிழ் நூல்,அறநூல் திருக்குறள்.இக்குறள்கள் அனைத்தும் மணற் கிளைக்க நீருறுவது போல, குழந்தைகள் உண சுரக்கும் தாய்பால் போல கற்கும் தோறும் புதுப்பொருளை விரித்துச் செல்கிறன. அதனால் அதனைக் கற்பார் பலர். சிலர் அதற்கு உரை வரைந்துள்ளனர்.அவர்களுள் பழைய உராயாளர்கள் என்று கூறப்படுவோர் பதின்மர்.அவர்களுள் இன்று நமக்கு ஐவர் உரைகளே கிடைத்துள. மணக்குடவர் , காளிங்கர்,பரிப்பெருமாள்,பரிதியார்,பரிமேலழகர் என்போர் ஆவர் . இவ் ஐவர் உரைகளுள் காலத்தால் முற்பட்டவர் மணக்குடவர், இதனை அவர் உரையின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலைமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

ஆசிய மொழிகளில் பர்மியம் யு.மியோதாண்ட் (1964) சீனம் சிங்க உசி குலா சென்லயன் (1967) புசிலாமா (1978) அரபி முகமது யூசப் கோகன் (1976) ஜப்பானியம் மாத்சூனகா (1981) சிங்களம் மிசிகாமி (1961) சார்லஸ் தேசில்வா (1964) ருஷ்யன் யூரி கிலோ சோஷ் கிருஷ்ணமூர்த்தி (1963) அராப் இப்ராகி மோவ் (1974) மலாய் ராம்லி பதைக்கீர் (1964) உசேன் இஸ்மாயில் (1967,1977) ஐரோப்பிய மொழிகளில் போலிஷ் உமாதேவி வாண்டி தைநோவுசுகி (1958) ஸ்வீடிஷ் ஒய்.எங்கியா பரிகோம் (1972) இத்தாலியன் அந்தோணியா சோரென்றினோ (1985) ஆர்மினியன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை (1978) பிஜூ சாமுவேல் பெர்விக் (1964) செக் கமில் சுவலபில் (1952-1954) டச்சு காத்து (1964) பின்னிஷ் பெண்டி ஆல்தோ (1972) ஸ்பானிஷ் ஜி.அருள் (இன்பத்துப்பால்) லத்தீன் வீரமாமுனிவர் (1730) சார்லஸ் கிரால் (1856) -----(1860) ஜெர்மனி காமர்ஸ் (1803) ப்ரடிரிக் ரூக்கெர்த் (1847) வில்லியம் & நார்கேற்று (1856,66) கார்ல்கிரால் (1865) ஆல் பிரெக் & லலிதாம்பாள் (1977) பிரெஞ்சு -----(1767) ஏரியல் (1848,52) தூமாஷ் (1854,59) லெடிரா (1867) லாமாயிர்ஷ் (1867) லூயிசகோலியற்று (1867,76) பாரியிதே பாந்தேயினு...

இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட அற இலக்கியம் திருக்குறள்.இந்நூலை முதன்முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் வீரமாமுனிவர்.1730-ஆம் ஆண்டு இவர் இலத்தின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்ந்தார். அதன்பிறகு பலவேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. மலையாளம் 1. கிருஷ்ண வைத்தியன் (1863,1984) 2. அழகாத்துக்குருபு (1875) 3. நீதிபதி கோவிந்த பிள்ளை (1915) 4. ராமசாமி ஐயா (1938,1941) 5. தாமோதரன் பிள்ளை (1951) 6. ராமகிருஷ்ணபிள்ளை (1957) 7. கோபால குருபு (1960) 8. பாலகிருஷ்ணநாயர் (1963) 9. பரமேஸ்வரன் (1966) 10. தாமோதரன்(சிறுவருக்கான பதிப்பு) (1966) 11. ரமேஷன் நாயகர் (1998) தெலுங்கு 1. களபர்த்தி வேங்கட வித்தியாநந்தநாதா (1887,1894) 2. சோக்கம் நரசிங்கலு நாயுடு (1892) 3. இலக்கும் நாராயண சாஸ்திரி (1905) 4. சீராமுலுரெட்டி (1948) 5. சக்கண்ண சாஸ்திரி (1952) 6. ராதாகிருஷ்ணசர்மா சால்வா (1954) 7. சாலய்யா (1955) 8. சிரபதி சாஸ்திரி (1966) 9. கோபாலராவ் 10. எல்லூர் சீரகரிமல்லா 11. சத்தியநாராயணா 12. ஸ்ரீராமலிங்ஙாச்சார்யா கன்னடம் 1. பி.எம்.சீர்கந்தையா (1940) 2. ப.குண்டப்பா (1955,1960) 3. ஸ்ரீகண்டைய...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்றது. அப்பொழுது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வாழ்வியல் கருவூலமாகத் திகழக் கூடிய திருக்குறளுக்குப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறவேண்டும் என்ற நோக்கில் சென்னை, அண்ணாமலை, மதுரை ஆகிய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 3 இலட்சம் வைப்புநிதியாக அளித்துத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கையை உருவாக்கினார்கள். அத் திருக்குறள் இருக்கை வழி கற்றுத்துறை போகிய அறிஞர்கள் திருக்குறள் தொடர்பான பல்வேறு அரிய ஆராய்ச்சி நூல்களைத் தழிழுலகுக்கு வழங்கியுள்ளனர். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை மூலம் சிறந்த ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்துள்ளன. 1.திருக்குறள் பொருளதிகாரம் டாக்டர் மு.கோவிந்தசாமி 1973 2.காப்பியங்களில் திருக்குறள் திரு.ச.தண்டபாணி தேசிகர் 1974 3.திருக்குறளும் பிற உரையாசிரியர்களும் டாக்டர் மு.கோவிந்தசாமி 1975 4.வள்ளுவரும் கம்பரும் திரு.ச.தண்டபாணி தேசிகர் 1975 5.பரிமேலழகர் டாக்டர் மு.கோவிந்தசாமி 1978 6.வள்ளுவத்தில் மெய்ப்பொருட்சுவடுகள் திரு.ச.தண்டபாணி தேசிகர் 1980 7...