இடுகைகள்

அறிஞர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…

படம்
  நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே -        மூதுரை,9   நாள் ஒன்றுக்கு ஒரு நூறு பக்கங்களுக்குக் குறையாமல் படித்தலும், பதினாறு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுதலும், இரவில் படுக்கையில் வரும் சிந்தனைகளைப் பாடல் ஆக்குதலும் நாள் வழிக்கடமையாகக் கொண்டு, தமிழ் மொழிக்காவும் இனத்திற்காகவும் இறுதி காலம் வரை எழுத்து, பேச்சு எனச் செயல்பட்டவர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார். ஐயாவின் திருக்குறள் தொடர்பான நூல்கள், இலக்கண வரலாறு, சுவடியியல் போன்ற நூல்களின் வழியாக   அறிந்திருந்தேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு   2005 - இல்   கிட்டியது. நெய்வேலிக்குச் சொற்பொழிவு நிமித்தமாக ஐயா வந்தபொழுது, நானும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழாரும் திருக்குறள் ஆய்வுத் தொடர்பாக அவர்களைச் சந்தித்தோம். அன்று தொட்டு ஐயா அவர்களுடன் ஏற்பட்ட சில நினைவுகளைப் பகிர்வதாகவே இக்கட்டுரை அமைகிறது. என்னுடைய ஆய்வு திருக்குறள் பரிதியார் உரையைப் பற்ற...

உலகப் பெருந்தமிழர் பேராசிரியர் பி.விருதாசலனார்

படம்
  தலைநாள் போன்ற விருப்பினர் கல்பனாசேக்கிழார்               வாடா … வாடா … எப்படிடா இருக்க என்று   உள்ளன்பு ததும்ப கூறும் சொற்கள். பாசாங்ற்ற புன்னகை. கம்பீரமான உருவம் , உடல்   மொழி,   சிம்மக் குரல் மொழி. குழந்தை மனம். பண்பின் உரு. வாழ்நாளில் சேகரித்த அறிவுசார் வாழ்வியல் அனுபவங்கள். மரபு இலக்கண இலக்கியங்களையும் -- நவீன இலக்கியங்களையும் கேட்டார் பிணிக்கும் வகையில் எடுத்துரைத்தல்.   கேளாதாரும் விரும்பும் அறிவாற்றல்.   இருமொழிப் புலமை. தமிழ் மொழிப் பற்று அதற்கான செயலாக்கம். தமிழ் , திராவிட   கருத்தியல் வழி உலகப் பார்வை   நோக்கியதாகவே தன் எண்ணம் செயல் வாழ்வு   அனைத்தையும் அமைத்துக்கொண்டவர் ஐயா முனைவர் பி. விருதாசலனார் அவர்கள்.             காவிரிகரையினிலே பிறந்து வாழ்க்கையே போராட்டமாக இருப்பினும் தடை கடந்து தானும் வளர்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து, தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான மொழியை வளர்தெடுத்த பன்முகஆளுமை பேராசிரியர் பி. விருதாசல...

மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

படம்
மகாவித்துவான்  ச. தண்டபாணி தேசிகர் (சிதம்பரம் சடையப்ப தண்டபாணி தேசிகர்) தோற்றம் - 02. 04. 1903 மறைவு     - 25. 04. 1990       சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி, கிராமத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சடையப்ப தேசிகர். தாயார் பாலம்மாள். சு. பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் மகாவித்துவான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யரின் மாணவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவன் எனும் பட்டம் பெற்றவர். பின் திருவாரூரில் இவர் பணிசெய்யும் போது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இவருடைய மாணவர். மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.           திருக்குறள், திருவாசகம் போன்றவற்றின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் சிறந்த இரு நூல்களை இயற்றிய தண்டபாணி தேசிகர் அவர்கள் சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான் மற்றும் திருமந்திரம் விளக்கக் கூடிய பஞ்சாச்சர தீபம் போன்ற நூல்களை எழுதியுள்ளார...

தேங்காய் எதற்கு தெரியுமா?.

ஒருமுறை கரந்தை கவிஞரான வேங்கடாசலம் பிள்ளை ஒரு நாள் தன நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போது, " திருமணத்தில் ஏன் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? " என்று புதிராக கேள்விக்கணையைத் தொடுத்தார்.காரணம் தெரியாது நண்பர்கள் விழிக்க, நகைப்புடன் அதற்கான விளக்கத்தை அவர் பாணியிலேயே கூறினார். " தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள் " என்று விளக்கமளிக்க அங்கு கூடியிருந்த நண்பர்கள் அவரின் நயமானப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தனர்.

அங்கே போகாதே....

உளவியலின் தந்தை என்று போற்றப்படுபவரான சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒருமுறை தன் மனைவியுடனும் மகனுடனும் வெளியே சென்றார். குழந்தையை சற்று விளையாட விட்டு விட்டு ஃபாராய்டும் அவர் மனைவியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.பேசிகொண்டு இருந்த ஆர்வத்தில் விளையாடிக்கொண்டு இருந்த மகனை கவனிக்க மறந்தனர். அவர்களுடைய உரையாடல் முடிந்து விளையாடியப் பையனைத் தேடினால் காணவில்லை.இருவரும் சேர்ந்து குழந்தையை எங்கே போயிருப்பான் என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தனர்.கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தன் மனைவியைப் பார்த்து ஃப்ராய்ட் கேட்டார்," நீ அவனை ஏதாவது ஒரு இடத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினாயா?" என்று கேட்டார். "ஆமாம் ! அருகில் உள்ள நீருற்றுன் பக்கத்தில் மட்டும் போகாதே என்று சொன்னேன்!" என்றார். இருவரும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது,நீருற்றின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.இதைக் கண்ட அவரது மனைவிக்கு ஒரே ஆச்சரியம்! " இங்கே தான் அவன் இருப்பான் என்று எப்படி யூகித்தீர்கள் " , என்று தன் கணவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்" நம...

காந்திக்குச் சட்டை

ஒருமுறை மாகாத்மாகாந்தி ஒரு பள்ளிக்குச் சென்றிருஃந்தார்.காந்தியைக் கண்டதும் மாணவர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.காந்தி சட்டைப்போடாமல் இருந்ததைக் கண்ட ஒரு சிறுவன் 'பாபு! உங்களுக்குச் சட்டைக் கிடையாதா? என் அம்மா அழகான சட்டைத் தைத்துத் தருவார்கள் .உங்களுக்கும் ஒரு சட்டை தைத்துத் தரட்டுமா?' என்று வெகுளிஃத்தனமாக துணிச்சலுடன் கேட்டுவிட்டான். ஆசிரியர்களும் அதிகாரிகளும் காந்தி என்ன நினைப்பாரோ என்று பதறினபோனார்கள். காந்தியடிக்ள சிரித்துக்கொண்டே 'தம்பி எனக்கு 40 கோடி சகோதரர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு சட்டை தைத்துத் தர உன் அன்னையால் முடியுமா? அப்படியானால் நானும் சட்டைப் போட்டுக் கொள்கின்றேன்'என்றார். இதைக் கேட்ட சிறுவன் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டான். இப்படி இன்றுள்ள அரிசியல் வாதிகளைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

சிஷ்யன் என்றால்...

சிறுகதை இலக்கியத்தில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவரும்,சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுபவருமான புதுமைப்பித்தனைச் சந்திக்க ஒரு புதிய எழுத்தாளர் ஒருவர் வந்தார்.வந்தவருக்கு எப்படியாவது புதுமைப்பித்தனைப் பாராட்டி,குளிர்வித்துவிடவேண்டும் என்று நினைப்பு ஏற்றபட்டது.அவருக்கு நன்றாக அறிமுகமில்லாத அந்த புதிய எழுத்தாளர்,புதுமைப்பித்தனைப் பார்த்து,ஐயா! நான் உங்கள் சிஷ்யன் உங்களைப் பின்பற்றி எழுதுகின்றேன் என்றார். உடனே புதுமைப்பித்தன் அவரைப் பார்த்து கடுப்பாக சொன்னார் ,'நண்பரே! சிஷ்யன் என்றால் என்ன என்று தெரியுமா? சிஷ்யன் என்று கூறாதீர்கள் என்றார். புதிய எழுத்தாளருக்கு குழப்பமாகிவிட்டது.ஏன் இவர் சிஷ்யன் என்று கூறவேண்டாம் என்கின்றார் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். அவர் எண்ணத்தை உணர்ந்த புதுமைப்பித்தன் 'சிஷ்யன் என்றால் மண்டையில் மாசாலா இல்லாதவன் என்று பொருள்' என்றாரே பார்க்கலாம். அந்த புதிய எழுத்தளார் முகத்தில் அசடு வழிய சொல்லாமல் கொள்ளாமல் நழுவி சென்றுவிட்டார்.

உணவு எப்படி இருந்தால் என்ன?

குழந்தைகளின் ராஜாவான ரோஜா சூடிய முன்னால் பிரதமர் ஜவர்கலால் நேரு ஒருமுறை சுதந்திரப்போராடத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அப்பொழுது உணவில் ஏராளமான கற்கள் இருந்தன என்று சிறைவாடனிடம் புகார் செய்துள்ளார். சிறைவாடன் நேருவை கிண்டல் செய்யும் முகமாக ' சுதந்திரப் போராட்டக் கைதியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் .உங்களுக்கு உணவில் கல் இருப்பது பெரும் பிரச்சனையா? இந்த நாட்டை நேசித்து தானே நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று நான் நினைத்தேன் ' என்றார். நேரு அவருக்குச் சரியான பதிலடி கொடுக்க எண்ணி 'நாங்கள் எங்களது நாட்டையும் மண்ணை நேசிக்கின்றோம் என்பது உண்மையே ! அதனால் தான் அந்த மண்ணைத் தின்பதற்கு நாங்கள் விரும்பவில்லை ! என்றார்.

ஆட்டுக்குத் தூரோகம்

சர்தார் வல்லபாய் பட்டேல் ஒருமுறை காந்தியைச் சந்திக்க சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தாராம்.அப்பொழுது காந்தி உண்வருந்தும் வேளை.அவருடன் பட்டேலும் சாப்பிட்டாராம்.உணவில் வேப்பிலைச் சட்டினியும் இருந்தாம். அதனைக் கண்ட பட்டேல் காந்தியடிகளைப் பார்த்து ஏன் பாபுஜி! உங்களுக்கு எப்போதும் பாலைத் தந்துக்கொண்டிருக்கும் வெள்ளாட்டுக்கு நீங்கள் இப்படி துரோகம் இழைக்கலாமா? என்று கேட்டாராம். காந்தியும் என்னவோ ஏதோவென்று பதறிபோய் , 'நான் என்ன துரோகம் செய்தேன்? விளக்கமாகச் சொல்லுங்கள் !' என்று பட்டேலிடம் கேட்டாராம். அதற்கு பட்டேல் சொன்னாராம் ' பாபுஜி அவர்களே ! நீங்கள் இது நாள் வரை வெள்ளாட்டின் பாலை மட்டும்தான் உணவாக எற்றுக்கொண்டு இருந்தீர்கள்! ஆனால் , இப்போது வெள்ளாடு விரும்பி உணவாக உண்ணும் வேப்பிலையும் அல்லவா நீங்கள் உண்ணத்தொடங்கிவிட்டீர்கள்! இது வெள்ளாட்டுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? என்று கேட்க அதனைக் கேட்ட காந்தி கலகலவெனச் சிரித்தாராம்.

காக்கையைச் சமைத்து....

படம்
நகைச்சுவை நடிகரும்,தமது படங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்கும் போது'காக்கையைச் சமைத்து கருவாடு மென்று தின்பார்கள் படித்தவர்கள்' என்றார். இதைப் பார்த்த அவர் நணபர் ஒருவர் அவரிடம் கேட்டார்,நீங்கள் படத்தில் கொடுத்துள்ள விளக்கம் வேடிக்கையாக இருக்கிறதே! அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காக்கையைப் பொதுவாக கறியாக சமைத்துச் சாப்பிடுவதில்லை,கருவட்டை மென்று பொதுவாக தின்பதில்லையே? கடித்து தான் தின்பார்கள். அதற்கு கலைவாணர் விளக்கம் கூறினார். உணவு பற்றாக்குறை நாட்களில் அதிகம் உண்ணக் கூடாது என்று கருதி படித்தவர்கள் கால் (பங்கு)காயை மட்டுமே கறி சமைத்து உண்பார்கள்.கால் + காய் - காக்காய் அந்த கால் காயாவது உண்ணாவிட்டால் அவர்களது உடம்பு வாடிவிடும் என்பதற்காக அதை உண்பார்கள்.'கரு' பிறந்த உடம்பு 'வாடும்' எனுற தின்பார்கள். கரு + வாடும் + மென்று = கருவாடுமென்று தின்பார்கள் என்று விளக்கம் அளித்தாராம். விளக்கம் கேட்ட நண்பர் பொருள் புரிந்து அமைதியாக சென்றாராம்.

வானத்தில் எவ்வளவு தூரம்...

மேலைநாடு சென்று இந்திய ஆன்மீகத்தின் புகழை நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர் தத்துவஞானி மட்டுமல்லாது,நல்ல திறமிக்க உடற்கட்டையும்,கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்டவர். ஒருமுறை கல்கத்தா நகர வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது வெறிபிடித்த முரட்டுக்காளை ஒன்று துள்ளிக் குதித்து ஆர்பாட்டமாக பாய்ந்து வந்தது.அதனைக் கண்டோர் அனைவரும் நாலாதிசையிலும் பறந்தோடினர்.எதிர்பட்டவர்களை அக்காளை துவம்சம் செய்து வந்துகொண்டு இருந்தது. எதிர்பாராத நிலையில் அக்காளை விவேகானந்தருக்கு நேர் எதிரே வந்து நின்றது.அதனைச் சற்றும் எதிர்பார்க்காத விவேகானந்தர் சிறிதேனும் கலக்கம் கொள்ளவில்லை.இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு அந்த காளையின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்று கொண்டு இருந்தார். பாய்ந்து வந்து காளை இவரின் தீட்சண்யமான பார்வையைக் கண்டதும் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டதைப் போல அசைவற்று நின்றது.பின்னர் வந்த வழியே அமைதியாகத் திரும்பி போய்விட்டது. இக்காட்சியைக் கண்டோர் வியந்து,விவேகானந்தரிடம் காளை உங்கள் எதிரில் வந்த போது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர் சொன்னார...

எனக்குத் தெரியாது

ஒருமுறை தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழாசிரியர் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.பள்ளி நிர்வாகியினர் அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.அவர்மு சென்றார்.அப்பொழுது அங்கு அவரிடம் ஒரு வினா எழுப்பப்பட்டது. 'குற்றியலுகரத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுவும்'என்பதே அவ்வினா. மறைமலை அடிகள் 'எனக்குத் தெரியாது 'என்று அமைதியாக கூறினார். வினா கேட்டவர் மீண்டும் அவருடம் 'எங்களது வினாவிற்கு என்ன விடை ' என்று வினவினர். மறுமுறையும் அடிகளார் அவர்கள் 'எனக்கு தெரியாது 'என இரண்டு சொற்களுக்கும் இடைவெளிவிட்டு அழுத்திக் கூறினார். வினாகேட்டவர்களின் மத்தியில் இருந்த மற்றொரு தமிழ் புலவர் அடிகளார் கூறும் பதிலினைப் புரிந்து கொண்டு புன்னகைபுரிந்து கொண்டு .அங்கிருந்த மற்றவர்களுக்கு அவர் கூறிய பதிலை விளக்கினார். 'எனக்கு' 'தெரியாது' என்னும் இரண்டு சொற்களுமே குற்றுகரச் சொற்கள்தான் என்றார்.அதற்குப் பிறகு அடிகளாரைக் வினா விடுக்கவும் அஞ்சி பேட்டியை முடித்துக்கொண்டனர்.

பேராசிரியர் எம்.ஏ.சுசீலா

படம்
மதுரை பாத்திமாகல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஒய்வு பெற்று இந்திய தலைநகரான டெல்லியில் வசித்து வருபவர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள். கடந்த சில மாதங்களாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப்பெற்றேன். அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்த குற்றமும் தண்டனையும் என்னும் நூலை இந்த ஆண்டு புத்தக்கணகாட்சியில் வாங்கியிருந்தேன். அந்நூலே அவர்களை அறிய காரணமாக இருந்தது. பிறகு அவர்களுடன் இணையத்தில் மட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தேன் . கடந்த மாதம் அவர்கள் நெறிகாட்டுதலில் முனைவர்பட்ட அய்வு மேற்கொண்டு ,முடித்த பெண்ணுக்கு வாய்மொழித் தேர்வுக்கு மதுரை வருவதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அவர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.அவர்கள் மதுரை வந்தவுடன்,சென்று சந்தித்தேன்.நான் வருகிறேன் என்று கூறிய நாளுக்கு முதல் நாளே சென்றேன்.அவர்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு , என்னோடு நேரத்தைச் செலவிட்டார்கள்.பழகுவதற்கு மிக எளிமையனவராக,இனிமையானவாராக இருந்தார்கள். அவர் அவர்களுடை குடும்ப நண்பர் வீட்டில் தான் தங்கிஇருந்தார்.அவர்களோடு 30 ஆண்டுகால பழக்கமாம்.அவர்களும் மிக அன்போடு வரவேற்றார்கள். இலக்கியத்தைப் பற்...

பேராசிரியர் மா.இராமலிங்கம்

படம்
1982 ஆம் ஆண்டு புதிய உரைநடை என்னும் நூலூக்குச் சாகித்திய அகதெமி விருதும்1983 இல் விடுதலைக்கு முன் தமிழ் சிறுகதை என்னும் நூலூக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசும்,1992 இல் கவிதை படைப்புக்குப் பாவேந்தர் பாரதிதாசன் விருதும்,1988 இல் நல்லாசிரியர் விருதும்,நாவல் இலக்கியம் என்னும் நூலுக்கு விருதும்,2008 இல் நிச்சயத்தார்த்தம் என்னும் குஜராத்தி மொழிபெயர்ப்பு நூலிக்கு சாகித்திய அகதெமி விருதும் பெற்ற பெருமைக்குரியவர் பேராசிரியர் மா.இராமலிங்கம்.இவர் இலக்கிய உலகில் எழில் முதல்வன் என்னும் புனைப்பெயரில் பல படைப்புக்களைப் படைத்துள்ளார்.ஒய்வு பெற்ற பின்பும் ஒயாது உழைத்துக் கொண்டு இருப்பவர். பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்து கொண்டுள்ளார்கள். நாகை மாவட்டம் திருத்துரைப்பூண்டி என்னும் தாலுக்காவில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5-10-1939 ஆம் ஆண்டு திருமிகு வ.மாணிக்கம் திருமதி மா.இராமாமிருத அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார்.உயர்நிலைக் கல்வி திருத்துறைப்பூண்டியிலும்,தமிழ் இளங்கலை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று,முதுலை சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பி...

முதல்வர் D.சாந்தி

படம்
பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் தங்களது முத்திரைகளைப் பதித்து வருகின்றனர் . எடுத்துக்கொண்ட வேலைகளைச் செவ்வனே முடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் கேரளாவில் சந்தித்த ஒரு தமிழ் பெண்மணியைக் குறிப்பிடலாம். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று சாதனைகளின் எல்லைகளைத் தொட்டு கொண்டிருப்பவர்தான் Regional Vocational Traning Institute For Woman (RVTI) என்ற நிறுவனத்தின் முதல்வர் D . சாந்தி. திண்டுக்கல் பெத்தாம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து ,பெத்தம்பட்டி அரசு பள்ளியில்1-3 வகுப்பு வரையிலும் கொசவப்பட்டி R.C.கான்வெட்டில் 4-8 பயின்றும்,மேலும் மதுரை லூர்தூ அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றும் ,மதுரையில் ஆடை வடிவமைப்புத் துறையில் பயின்று,1992 ஆம் ஆண்டு UPSC –யால் பயிற்சி அதிகாரியாக தேர்வு செய்யப்பெற்று,தன்னுடைய திறமையான பணியின் காரணமாக இன்று,இந்தியாவின் ஏழு இடங்களில் அமைந்துள்ள இந்நிறுவனங்களின் ஒன்றான கேரள பகுதியில் முதல்வராக 11-6-2007 இலிருந்து பதவியேற்று,திறம்பட தன் பணியை இன்று செய்து வருகின்றார். அந்த பகுதி நிறுவனத்தில் முதல்வராக பதவி ஏற்றுள்ள மு...

இராவுசாப்பட்டிபேராசிரியர் இரா.கலியபெருமாள்

படம்
தூய வெள்ளாடை,அமைதி தவழும் முகம்,கனிவான பேச்சு, அகத்தில் அறிவு முதிர்ச்சி,புறத்தில் இளமை,தமிழைத் தவிர வேறு நினையாத மனம்,அவரிடம் பயிலும் பயின்ற மாணவர்கள் மட்டுமல்ல யாவரும் விரும்பும் தமிழ்பேரறிஞராய் ந.மு.வேங்கடசாமி கல்லூரியில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் பேராசிரியர் இரா.கலியமூர்த்தி. கடந்த மூன்றாண்டுகளாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன்.ஓர் ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டுமென இவர்களைப் பார்த்தப் பிறகு தெளிந்தேன். மாணவர்களிடம் இவர் காட்டும் அக்கறை சொல்ல வார்த்தைகள் இல்லை.இவரிடம் மாணவர்கள் பழகும் முறையே அதற்குச் சான்றாகும். இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் பல இலக்கியங்களைக் கற்ற மகிழ்ச்சித் தோன்றும். சங்க இலக்கியம்,பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம்,திரைப்படப் பாடல்கள் அனைத்திலும் ஆழ்ந்த தோய்வின் காரணமாக ஒரு செய்திக்கு அது தொடர்பான இலக்கியம் முதல் திரைப்படப்பாடல் வரை எடுத்துக்காட்டுவார்கள். இவருடைய தமிழ் ஈடுபாட்டின் காரணமாக தமிழ்ப்பேராசான் ,ஔவை,வாண்டையார் விருது,மாமன்னன் இராசராசன் விருது, குறள் செம்மல், போன்ற விருதுகளைப் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி சிறப்பித்துள்ளது.ஐந்தாம் ஐந்தாம் ...

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

படம்
நுங்கள் பாரியைப் பார்த்தேன் முற்றும் சரிதான்.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற் பிறப்பு அமைப்பீர்கள் எனத் தேவநேயப்பாவணரால் பாரி என்னும் ஆய்வுக் கட்டுரைக்காகப் பாராட்டப் பெற்று ,அண்மையில் திருச்சி பாவேந்தர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ. அவர்களால் மதிப்புறு முது முனைவர்ப் பட்டமும்,மதுரைப் பல்கலைக் கழகத்தால் செந்தமிழ் காவலர் என்ற பட்டமும் வழங்கப் பெற்று ,தேவநேய பாவணர் வழி நின்று நீடு தோறும் இனியராய் தனித்தமிழ் காவலராய் வாழ்பவர் புலவர் இரா.இளங்குமரனார். 80 வயதை கடந்த நிலையிலும் ஒய்வு இல்லாமல் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாக விளங்குகின்றார். 400 மேற்பட்ட நூல்களை தமிழுலக்கு வழங்கி சிறப்புச் செய்துள்ள பெருமகனாரின் பெருமையையும் நுண்ணிய அறிவு நுட்டபத்தையும் இனங்கண்டு கொண்ட பாரதிதாசன் பல்கலைகழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னம்வைக்கோ அவர்கள் செம்மொழி அந்தணர் இளங்குமரனாரை கலைச்சொல்லாய்விற்கும் சொல்லாய்விற்கும் பயன்படித்திக் கொள்ள இசைந்துள்ளார். நெல்லை மாவட்டத்தின் வடக்கு எல்லையும்,முகவை மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கக் கூடிய இடத...

தமிழறிஞர் பேராசிரியர் பி.விருத்தாசலம்

படம்
'கெடல் எங்கே தமிழின் நலம்,அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'. என்னும் பாடல் அடிகளுக்கேற்ப வாழ்ந்து வருபவர் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள். தனித்தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர்கள் தமிழியக்கம் தழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார்கள். குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தில் இருந்த DOCTRINA VIM PROMOVET INSITAM என்னும் குறிக்கோள் மொழியைத் தமிழில் மாற்ற வேண்டுமென 8.11.1976,30.31977,30.11.1977 ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்று பேரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் தந்து போராடியதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழ அடையாளச் சின்னத்தில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என மாற்றியதையும்,சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வழங்கப்பெற்றதை,தமிழிலும் வழங்க வேண்டும் கூறி மாற்றியதையும் கூறலாம். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில் திருவாட்டி தென்காவேரியம்மையாருக்கும்,திருவாளர் பொ.பிச்சை நாட்டார் என்பாருக்கும்அருமை மகவாய் 22-5-1940-இல் தோன்றினார். இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனி...