ஆட்டுக்குத் தூரோகம்

சர்தார் வல்லபாய் பட்டேல் ஒருமுறை காந்தியைச் சந்திக்க சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தாராம்.அப்பொழுது காந்தி உண்வருந்தும் வேளை.அவருடன் பட்டேலும் சாப்பிட்டாராம்.உணவில் வேப்பிலைச் சட்டினியும் இருந்தாம்.

அதனைக் கண்ட பட்டேல் காந்தியடிகளைப் பார்த்து ஏன் பாபுஜி! உங்களுக்கு எப்போதும் பாலைத் தந்துக்கொண்டிருக்கும் வெள்ளாட்டுக்கு நீங்கள் இப்படி துரோகம் இழைக்கலாமா? என்று கேட்டாராம்.

காந்தியும் என்னவோ ஏதோவென்று பதறிபோய் , 'நான் என்ன துரோகம் செய்தேன்? விளக்கமாகச் சொல்லுங்கள் !' என்று பட்டேலிடம் கேட்டாராம்.

அதற்கு பட்டேல் சொன்னாராம் ' பாபுஜி அவர்களே ! நீங்கள் இது நாள் வரை வெள்ளாட்டின் பாலை மட்டும்தான் உணவாக எற்றுக்கொண்டு இருந்தீர்கள்! ஆனால் , இப்போது வெள்ளாடு விரும்பி உணவாக உண்ணும் வேப்பிலையும் அல்லவா நீங்கள் உண்ணத்தொடங்கிவிட்டீர்கள்!
இது வெள்ளாட்டுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? என்று கேட்க அதனைக் கேட்ட காந்தி கலகலவெனச் சிரித்தாராம்.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
nice post. thanks for sharing
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வுக்கு நன்றிங்க
வேலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல நினைவு கூறல். நன்றி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் குப்பன்,சேகரன்,வேலன் ......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்