இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடப்பெயர்களின் தோற்றம்

மனிதகுலம் தோன்றிய காலத்திலேயே பெயர்களும் தோன்றியிருக்க வேண்டும். எனவே மனித இனத்திற்குரிய பழமை பெயர்களும் உண்டு. ஒருவன் இயற்கையில் தான் கண்ட உயிரினங்களை, பொருட்களை இடங்களைப் பிறருக்குத் தெளிவாகவும் குறிப்பாகவும் உணர்த்தும் பொருட்டு அமைத்துக் கொண்ட முறையே பெயரமைப்பாகும். இடப்பெயர்களும் இவ்வாறே தோன்றியிருத்தல் வேண்டும். ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து வேறுபடுத்தி ஆட்பெயரையும், ஒரு இனத்தை இன்னொரு இனத்திடமிருந்து வேறுபடுத்த இனப்பெயரையும், ஒரு பொருளை இன்னொரு பொருளிடமிருந்து வேறுபடுத்த பொருட்பெயரையும் வழங்கியதைப் போன்று நிலத்தின் ஒரு பகுதியை இன்னொரு பகுதியிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, இடப்பெயர்களை அமைத்துக்கொண்டனர் எனலாம். மலை, குகை, காடு, ஆறு, குளம், குன்று, பள்ளம் என இயற்கையில் வேறுபட்டிருந்து நில அமைப்புக்கேற்ப இடங்களை வேறுபடுத்தி அறிந்தபின் ஆரம்பகால மனிதன். பின்னர் மனித இன ஒரு குழுவாக, சமூகமாக ஆங்காங்கே ஒரு பகுதியில் சிறிது காலம் வாழத் தொடங்கிய பின்னர் குடியிருப்புகளும், பெயர்களும் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தொகையை அதிகரிக்கவே, மனிதன் புதிய புதிய குடியிருப்புகளை