இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம் ITAM – 31 – அற இலக்கியமும் காப்பியமும் திருக்குறள் உழவு 1.    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை உழுவதைத் துன்பம் என்று கருதிப் பிற தொழில்களைச் செய்து அலையுமாயின் உலகம் உணவுக்காக ஏருடைய உழவரையே நாடும். அதனால் வருத்தமுறினும் தொழில்களுள் உழவே தலையானதாகும். 2.    உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து      உழவுத் தொழினைத் செய்ய முடியாமல் பிற தொழில்கள் மேற்கொள்வானைத் தாங்குவதால் உழுவார் உலகமாகிய தேர்க்கு அச்சாணி போன்றவராவர் 3.      உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்      உழவு செய்த அதனாற் பெறும் உணவைத் தாமும் உண்டு பிறரும் உண்ணக் கொடுத்து வாழ்பவரே தமக்குரிய வாழ்க்கையை வாழ்பவர். பிறரெல்லாம் உணவுக்காகப் பிறரைத் தொழுது அதனாற் பெற்றதை உண்டு வாழ்பவர். 4.    பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.      நெற்கதிரால் பெற்ற செல்வத்தால் பலர்க்கு நிழல் செய்து வாழும் உழவர் வேந்தர் பலரின் குடைநிழல் செய்யும் இவ்வுலகத்தைத் தம் அரசின் குடைநிழலின் கண் கொண்