நட்பு................
நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன. க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது. நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை ந