கனவு மெய்ப்பட வேண்டும்....

நம்முடைய தமிழ்ப்புத்தாண்டு தை 1 என்றாலும் உலத்தாரால் பெருபான்மை (ஜனவரி 1)புத்தாண்டாகக் கொண்டாப்படுவதால் ,நாமும் கொண்டாடுகின்றோம்.
(அப்படி தானே)

சென்ற ஆண்டு பல கனவுகளைச் சுமந்து கொண்டு,அதனை நோக்கியே சில நகர்வுகள் இருந்து இருக்கும் .அதனை விட்டு பிறழ்ந்தும் இருப்போம்.

இந்த ஆண்டுகள் இதனை எல்லாம் செய்ய வேண்டுமெனப் பல திட்டங்களை எல்லாம் வகுத்துக்கொண்டு ,கனவுகளைக் கண்டு கொண்டு, இருப்போம்.வழக்கம் போல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆகா! இதனை எல்லாம் நினைத்தோம் முடியவில்லையே என்று வருத்தப்படுவோம்! சிலர் தாங்கள் எண்ணிய செயல்களை எல்லாம் எண்ணியபடி முடித்து நிறைவு கொள்ளுவார்கள்.அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது !


பல அறிஞருகள் இதனைப் பற்றியெல்லாம் கூறியிருக்கின்றார்கள்(புத்தாண்டின் தொடக்கத்திலேயே இப்படி எல்லாமா? என்று வினவுவது காதில் விழுகின்றது சரி சரி பல அறிஞர்கள் கருத்துக்களை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,அதனைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்)

உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துக்கள்.

கருத்துகள்

அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
ஊரோடு ஒத்து வாழறோம்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்