இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் சமஸ்கிருத இலக்கண மரபுகள்

மனிதனின் அறிவுசார் தொடக்கம் மொழி. மொழி என்னும் கருவி மானுடத்தின் அகத்தும் புறத்தும் நிகழ்த்திய/ நிகழ்த்தும் ஊடாட்டத்தின் விளைவே பல் பரிமாண/ பரிணாம வளர்ச்சி. பல நூற்றாண்டுகள் பல்வேறு நிலைகளில் மொழியைப் பயன்படுத்தும் பொழுதுதான் அதற்கான வரைவுகள் உருவாகத்தொடங்குகின்றன. அவ்வாறு உருவானவை அம்மொழியின் இலக்கணங்களாக அமைகின்றன. இந்திய மொழிகளில் பழமையான மொழிகளுள் தமிழ், சமஸ்கிருதம் தனக்கென இலக்கண மரபுகளைக் கொண்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் காணப்படும் இலக்கண மரபுகளை அறிமுகப்படுத்தி, தமிழ் மொழியினுள் சமஸ்கிருத மொழியின் தாக்கம் மெல்ல மெல்ல எவ்வாறு நுழைந்தது என்பது குறித்தும் தமிழ் சமஸ்கிருத இலக்கண மரபுகள் என்னும் நூல் விளக்கிச்செல்கிறது. இரண்டு இலக்கணமரபுகளுள் வேற்றுமை, வேற்றுமைத் தொகைக்கான இலக்கணம் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை தொல்காப்பியம், வீரசோழியம், பியோகவிவேகம், இலக்கணக்கொத்து ஆகியநூல்களோடு சமஸ்கிருத வேற்றுமை, தொகை இலக்கண கூறுகள் ஒப்பிட்டு நோக்கப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் உருவான பல்வேறு மரபிலக்கணங்களுடன் தமிழ் மரபிலக்கணத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்கு அடிப்படையாக இந்நூல்