இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணின் வகுப்பு

ஒன்று, பத்து, நூறு,ஆயிரம், பதினாராயிரம்,இலக்கம், பத்திலக்கம்,கோடி, பத்துக்கோடி,நூறு கோடி, அர்ப்புதம், நியர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம்,சங்கம், மகாசங்கம்,க்ஷோணி,மகாக்ஷோணி, க்ஷதி,மகாக்ஷதி, க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம்,சாகரம், பாதம், அசிந்தியம், அத்தியந்தம்,அனந்தம்,பூரி,மகாபூரி,அப்பிமேயம்,அதுலம்,அகம்மியம்,அவ்வியத்தம். அபிதான சிந்தாமணியில் காணப்படும் எண்களின் வரிசை.

சமஸ்கிருத இலக்கிய வரலாறு

இந்திய மொழி மரபினை மொழியியல் வல்லுநர்கள் இந்திய – ஐரோப்பியம் (Indo – European) திராவிடம்(Dravidian) ஆஸ்திரியம்( Austric) திபேத்திய – சீனம் (Tibetian) என நான்காக வகுத்துக் கூறுகின்றனர். கி.பி.1786 இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில்லுள்ள ஆசியக் கழகத்தில் சமஸ்கிருத மொழியினைப் பற்றி ஆய்ந்து, ஐரோப்பிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்குமுள்ள உறவினை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கோல்புரூக்பாபு, கீரிம், மாக்சுமுல்லர், புருக்மன், விட்னி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வின் மூலமாக மக்கள் பரவப் பரவ மொழிகளில் சிறுசிறு வேற்றுமைகள் வளர்ந்து மொழிபேதங்கள் உண்டாகின்றன. அவை நாளடைவில் கிளைமொழிகளாகி (Dialects) பின்னர், தனித்தனி மொழிகளாக இலக்கிய, இலக்கணங்களுடன் வளர்ந்து விடுகின்றன. இப்படியே மூல இந்திய – ஐரோப்பியம் பல கிளைகளாகப் பிரிந்தது. இப்படி பிரிந்த கிளை மொழிகளுள் ஒன்றே சமஸ்கிருதம். இது இந்திய ஐரோப்பியத்தின் கிழக்கு எல்லையில் உள்ள முக்கிய பிரிவு என்னும் கருத்தை முன்வைக்கின்றனர். இக் கருத்து நிகழ் மொழிச் சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய மொழியினில் இருந்து கிளைத்த, சமஸ்கிர

திருக்குறள் பரிதியார் உரையும் மொழிப்பெயர்ப்புச் செயல்பாடும்

தமிழ் உரைமரபு மையம் கொண்டிருந்த இடைக்காலத்தில் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் தோன்றின. திருக்குறளுக்கு பதின்மர் ஊரையெழுதினர் என்னும் செய்தியைத் தனிபாடல் கூறுகின்றது. ஆனால் இன்று ஐவர் உரைகளே கிடைத்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பரிதியார், அவர் காலத்தின் தேவைக்குக்கு ஏற்பவும், திருக்குறள் கருத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலும், வைதிகச் சமயம் சார்ந்தும் எழுதியிருப்பதை அவருரையினிருந்து அறியமுடிகின்றது. இவர் உரை பெரும்பான்மை வடமொழி கலந்தே காணப்படுகின்றது. காலனிய காலத்தில் தொடங்கிய திருக்குறள் மொழிப்பெயர்ப்புச் செயல்பாடுகள் பெரும்பான்மை உரைகளைத் தழுவியே மொழிப்பெயர்ப்புச் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ன. இச் செயல்பாட்டுகளுக்குப் பரிமேலழகரையினையும் மணக்குடருரையினையும் பெரும்பான்மை தழுவினர் என்றாலும் சில இடங்களில் பரிதியின் உரையினைத் தழுவியும் மொழிப்பெயப்புச் செயல்பாடுகள் நிகழ்த்தியுள்ளனர். வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை என்னும் குறளினை மொழிப்பெயர்க்கும் ட்ரு விருப்பு வெறுப்பு இல்லாதவன் பாதம் சேர்ந்தார்க்குத் துன்பம் இல்லை என்னும் பரித