இடுகைகள்

கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது என்பார்கள் அல்லவா,அதற்குச் சான்றாகத் திகழும் இக் கதையினைப் படித்துப் பாருங்களேன் . ஒரு வேடனின் தினை காட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு யானை வந்து தினையை அழித்துச் சென்று கொண்டு இருந்து.அதனை எப்படியாவது கொல்ல வேண்டுமென முடிவு செய்தான் வேடன்.ஒருநாள் வில்லை எடுத்துக்கொண்டு யானையின் மீது அம்பினைப் பாய்ச்சினான்.யானையின் உடலில் மீது அம்பு தைத்தவுடன் கோபம் கொண்டு,யானை அவனைத் தாக்கியது.அப்பொழுது அருகில் இருந்த பாம்பு புற்றில் வேடன் காலை வைத்து விட்டான். பாம்பு அவனைத் தீண்டியது.அவன் தனது உடை வாளை உருவி பாம்பினைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான்.ஆக யானை வேடனாலும்,வேடன் பாம்பின் நஞ்சாலும்,பாம்பு வேடனின் வாளாலும் இறந்துபட்டன.அந்நிலையில் அவ்வழியே வந்த நரி ஒன்று தனக்கு நிறைய உணவு கிடைத்து விட்டது என மகிழ்ந்து,இந்த யானையின் உடல் ஆறு நாளுக்கு உணவாகும்.வேடனின் உடல் மூன்று நாளுக்கு உணவாகும்,பாம்பு ஒருநாளுக்கு உணவாக போதும்.ஆனால் இப்பொழுது உண்ணுவதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்தித்தது , வேடன் கையில் இருந்த வில்லின் நரம்பை உணவாக கொள்ளலாம் என எண்ணி ,அதனை இழுத்தது ,அதிலோ ஏவ...

தேனுண்ட கதை

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் ,சில நேரங்களில் தென்றல் போல சில மகிழ்வாக நிகழ்வுகள் நிகழ்வதும் உண்டு.அதனை நாம் மகிழ்வாகவும் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த நேரத்தில் நம்முடைய பழைய துன்பங்களை மறந்து விடுகின்றோம்.இப்படிதான் ஒருவன் காட்டு வழியே சென்று கொண்டு இருந்தான் .அப்பொழுது யானை ஒன்று அவனைத் துரத்த தொடங்கியது,அவன் யானைக்கு அஞ்சி வேகமாக ஓடினான்,ஓடும் போது செடிகொடிகளால் மறைக்கப்பட்டு இருந்த பாழுங்கிணற்றை அறியாமல் அதில் விழுந்து விட்டான். விழுந்தவன் அக்கிணற்றில் தொங்கிக் கொண்டு இருந்த விழுது ஒன்றினைப் பற்றிக் கொண்டு தொங்கினான்.அப்பொழுது ஐந்து தலை நாகம் ஒன்று கடிப்பதற்குச் சீறிக்கொண்டு வந்து,அந்நிலையில் அவன் பிடித்திருந்த விழுதை எலி ஒன்று தன்னுடைய கூரிய பற்களால் கரகரவெற்று கடித்துக்கொண்டு இருந்து. அவ்விழுது அறுந்தால் அவன் அக்கிணற்றுக்குள் விழுந்து மடியவேண்டியதுதான். இந்நேரத்தில் ,இப்படி துன்பத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே என்று,இறைவனை நோக்கிப் புலம்பிக்கொண்டு, விண்ணை நோக்கி வாயைப்பிளந்தான்.அப்பொழுது அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூடு ஒன்றில் இருந்த சில தேன்...

துன்பம் தொடர்ந்துவந்த கதை

துன்பம் ஒருவருக்கு வந்தால் எப்படி தொடர்ந்து வரும் என்பதற்கு ஒரு கதையினை விவேகசிந்தாமணி என்னும் நூல் கூறுகின்றது.பட்டகாலிலே படும் கெட்டக்குடியே கெடும் என்ற பழமொழியும் இதறகுப் பொருத்தமாக இருக்கும். ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான்.அவனுக்குப் பொல்லாத காலம் வந்தது.ஒருநாள் பெருமழை பொழிந்தது.அப்பொழுது அவனுடைய பசு மாடு கன்று போட்டது.மழையினால் பசுவும் கன்றும் துன்புற்றன.அப்பொழுது அவனுடைய வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது கருவுற்றிருந்த அவனுடைய மனைவிக்குப் பேறு காலம் நெருங்கியதால் உடல் வருந்தினாள்.அந்நேரத்தில் அவனுடைய வேளையாள் இறந்து போனான் என்ற செய்தி வந்தது.மழை பெய்யும் போதே விதை விதைக்க வேண்டிய சூழல். எது எப்படி ஆனாலும் ஆகட்டும் என்று வயலில் விதைவிதைத்து விடலாம் என விதையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.அந்நேரத்தில் பழைய கடன்காரர்கள் சிலர் எதிர்பட்டுக் கடனைக் கொடுத்துவிட்டு மறுவேலையைப் பார் என மறிக்கின்றார்கள்.இச் சமயத்தில் வரிகட்டவில்லை என அரசாங்க ஆள் வந்து வரிப்பணம் கேட்கின்றான். இவை இவ்வாறாக இருக்க குடியானவனுதைய குலகுரு தமக்கு அவ்வாண்டு கொடுக்க கூடிய காணிக்கைப்பொருள் தரவில்லை என...

கேட்ட கதை

படம்
அண்மையில் கேட்ட ஒரு கதை பெரியவர் ஒருவர் ஒவ்வொரு நாளும் கடற்கரையோரம் சென்று தியானம் செய்வது வழக்கம்.அவர் தியானம் செய்யும் பொழுது அவர் மேல் கடற்கரையில் உள்ள நண்டுகள் எல்லாம் ஏறி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருக்கும். இப்படியாக ஒவ்வொரு நாளும் அவரின் காலை பொழுது கழியும். ஒருநாள் அவருடைய பேரன் தாத்தா நீங்கள் ஒவ்வொரு நாளும் தியானம் செய்யும் போது உங்கள் மேல் நண்டுகள் ஏறிவிளையாடுகின்றன,இன்று நீங்கள் தியானம் செய்ய போகும் போது எனக்கு ஒரு நண்டினைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறினான்.அவர் எவ்வளவோ மறுத்துப் பார்த்தார் பேரன் கேட்பதாக இல்லை.பேரன் ஆசைப்பட்டுவிட்டானே ,அவனுக்கு இன்று ஒரு நண்டினைப் பிடித்துக் கொடுப்போம் என்ற எண்ணத்தில் விடியலில் தியானம் செய்ய கடற்கரைக்குச் செல்லுகின்றார்.அவர் மனநிலை முழுதும் தியானத்தில் ஒன்றவில்லை எப்பொழுது நண்டுகள் நம்மீது ஏறும் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தார்.ஆனால் அன்று ஒரு நண்டு கூட அவரின் அருகே வரவில்லை.வெறுங்கையுடன் திரும்பினார். அவரின் எண்ணவோட்டம் தியானத்தில் மட்டும் இருந்த போது நண்டுகள் பயமில்லாமல் அவர் மீது ஏறி விளையாடியது.அவரால் தமக்கு து...

அண்மையில் படித்த கதை

அண்மையில் ஒரு கதை படித்தேன்.ஒரு அழகிய பண்ணை வீடு.அவ் வீட்டில் கணவன்,மனைவி இருவர் மட்டும் வசித்தனர். அங்கு எலி தொல்லை இருந்த்தால் ,அவ்வீட்டுகாரர் எலிபொறி கட்டை ஒன்றை வைத்து எலிகளைப் பிடிக்கலாம் என எண்ணி எலிப்பொறி கட்டை ஒன்றை வைத்தனர் .அதை பார்த்த ஒரு பெருச்சாளி ஐய்ய... யோ நாம மாட்டிக்கப் போறமுனு நினைத்து,அழுதது. சரி நமக்கு ஏற்பட்ட நிலையை நண்பர்களிடம் சொல்லாம் என எண்ணி முதலில் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று கூறியது,உடனே கோழி எலிப்பொறி கட்டையால் எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை அதனால்,உனக்கு ஆபத்து என்றால் நீயே பார்த்துக் கொள் என்றது.பெருச்சாளிக்கு மிகுந்த வருத்தமாக போய்விட்டது. சரி அடுத்து அங்குள்ள நம் நண்பன் ஆட்டிடம் முறையிடலாம் எனச் சென்று ஆட்டிடம் சென்று ஓ என அழுதது,ஆடு கேட்டது எதற்காக இப்படி ஒப்பாரி வைக்கறாய்,உனக்கு என்ன ஆகிவிட்டது .பெருச்சாளி உடனே எனக்கு ஆபத்து வந்துவிட்டது. என்னை பிடிக்க பண்ணை வீட்டில் எலி பொறி கட்டை வைத்துள்ளனர்.நான் பிடிபட்டுவிடுவேன்.என்க்கு பயமாக உள்ளது எனக் கூறியது . உடனே ஆடு கோழி சொன்ன பதிலையே தந்தது. ஐயோ நமக்கு யாரும் உதவமாட்டார்களா என எண்ணி,அடுத்து நம் நண்பன...