நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது என்பார்கள் அல்லவா,அதற்குச் சான்றாகத் திகழும் இக் கதையினைப் படித்துப் பாருங்களேன் .

ஒரு வேடனின் தினை காட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு யானை வந்து தினையை அழித்துச் சென்று கொண்டு இருந்து.அதனை எப்படியாவது கொல்ல வேண்டுமென முடிவு செய்தான் வேடன்.ஒருநாள் வில்லை எடுத்துக்கொண்டு யானையின் மீது அம்பினைப் பாய்ச்சினான்.யானையின் உடலில் மீது அம்பு தைத்தவுடன் கோபம் கொண்டு,யானை அவனைத் தாக்கியது.அப்பொழுது அருகில் இருந்த பாம்பு புற்றில் வேடன் காலை வைத்து விட்டான்.

பாம்பு அவனைத் தீண்டியது.அவன் தனது உடை வாளை உருவி பாம்பினைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான்.ஆக யானை வேடனாலும்,வேடன் பாம்பின் நஞ்சாலும்,பாம்பு வேடனின் வாளாலும் இறந்துபட்டன.அந்நிலையில் அவ்வழியே வந்த நரி ஒன்று தனக்கு நிறைய உணவு கிடைத்து விட்டது என மகிழ்ந்து,இந்த யானையின் உடல் ஆறு நாளுக்கு உணவாகும்.வேடனின் உடல் மூன்று நாளுக்கு உணவாகும்,பாம்பு ஒருநாளுக்கு உணவாக போதும்.ஆனால் இப்பொழுது உண்ணுவதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்தித்தது , வேடன் கையில் இருந்த வில்லின் நரம்பை உணவாக கொள்ளலாம் என எண்ணி ,அதனை இழுத்தது ,அதிலோ ஏவுவதற்காக வைத்திருந்த அம்பு,வில்லிலே இருந்தது, நரம்பை கவ்விய அளவிலேயே அவ் அம்பு தைத்து நரியும் இறந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......