இடுகைகள்

சான்றோர் சிந்தனைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிள்ளையார் சுழி........

நாம் எழுதத் தொடங்குவதற்கு முன் 'உ' என்னும் எழுத்தை எழுதுவதை வழக்கமாக்க கொண்டுள்ளோம்.இதனை பிள்ளையார் சுழி என்றும்,அது பிள்ளையார் வழிபாட்டின் முதல் சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணகதைகளும் கூறப்பெற்றுள்ளன. பொதுவாக பழங்காலத்தில் தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிய ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்பதுண்டு.இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர்.இந்த தீண்டற்குறியைத்தான் பின்னாட்களில் பிள்ளையார் சுழி என்று கூறும் மரபாக வந்தது. இவ்வாறு பிள்ளையார் வழிபாடு தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே ஏடுதீண்டும் வழக்கம் இருந்துள்ளது என்தென்பது ஆறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மையாகும்.மேலும்,புள்ளியில்லாச் சுழி என்பது வெறும் சுழியத்தைக் குறிக்கும்.ஓலைச்சுவடியில் எழுதும் போது புள்ளி வைப்பதில்லை.புள்ளி வைத்தால் ஏடு பொத்து கிழிந்துவிடும்.ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாக சுழியம் போடுவர்.புள்ளியில்லாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழியென மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின்...

சான்றோர் சிந்தனைகள்

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும். விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும். ஆரோக்கியமான மனிதர்களும் ஆரோக்கியமான நாடும் நிகழ்காலத்து நடவடிக்கைகளில் தெளிவாகவும் ,திட்பமாகவும் செயல் பட்டு வருங்காலத்தை நோக்க வேண்டும். என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல; என்ன செய்கிறாய் என்பது தான் முக்கயம் .ஆகவே உறுதியான உள்ளமும்,நன்னடத்தையில் வலிமையும் நேர்மையான போக்கும் கொண்டவர்களுக்கு இந்த வையகம்,அளிக்கும் ஏராளமான நல்ல சந்தர்பங்களை எண்ணிப்பார். சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன். நேரு............

பட்டத்தினால் என்ன பயன்?

உடல் சுக்காக உள்ளம் சுடரா இடமறிந்து காலமறிந்து உழைத்துக்கொண்டிருந்தால் மண்புழுவுக்குக் கூட மகுடாபிஷேகம் சூட்டலாம் என்பான் ஒரு கவிஞன். ஒருமுறை ஆசாரிய வினோபாபா தாம் பெற்றிருந்து உயர் கல்விக்கான பட்டச் சான்றிதழ்களைத் தீயில் இட்டு கொளுத்தினாராம்.அப்பொழுது அவருடைய தாயர்,அரும்பாடுப்பட்டு படித்துப் பெற்றபட்டங்களை இப்படி தீயிலிட்டுக் கொளுத்துகிறாயேப்பா உனக்கு புத்தி எதுவும் கெட்டுப் போய்விட்டதா?என்று கடிந்து கொண்டாராம். அதைக்கேட்ட வினோபாபா சிரித்துக்கொண்டு அம்மா நாம் எதிர் காலத்தில் வாழப்போவது சுதந்திர பாரதத்தில்,சுதந்திர சர்க்காரில் வெள்ளையர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்களுக்கு மதிப்பு இருக்காது.தவிர வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை.கடுமையான உழைப்புத்தான் வாழ்க்கையை உயர்த்தும்.அதனால் வெள்ளைக்காரர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்கள் சாம்பலாகிப் போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றாராம். என்றுமே உழைத்தால் தான் வாழமுடியும்.

சான்றோர் சிந்தனைகள்

படம்
தேவைகள் குறையக்குறைய,ஆன்மசுகம் பெருகிக்க கொண்டே வந்து சேரும்.தெய்வத் தன்மை உன்னருகே வந்து சேரும். உண்மையின் முகம் அழகுடையது .கம்பீரமானது.உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன் .உண்மை அறிவதொன்றே என் விருப்பம். பெண்களால் உலகத்தை அழிக்கவும் முடியும் ஆக்கிகாட்டும் வல்லமையும் அவர்களிடத்தில் நிறையவே உண்டு. நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள். உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும். -------------சாக்ரட்டீஸ்.

சான்றோர் சிந்தனைகள்

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழவைப்பதில் தான் இருக்கிறது. ---------மோஹர் பாபா உடற்பயிற்சி உடலுக்கு எவ்வளவு நல்லதோ,படிப்பது அவ்வளவு மனதுக்கு நல்லது. -----------ரிச்சட் ஸ்டீலி நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை. நன்றாக பேசுவது நல்லது தான் ,ஆனால் நன்றாக செய்வது அதனினும் நன்று. ---------கிளார்க் ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை--------டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன். எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து. -------------ஆபிரகாம் லிங்கன். மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை; சென்றதை மறப்பது நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.-----------இங்கர்சால். இருபது ஆண்டு வளர்ச்சி இருபது ஆண்டு மலர்ச்சி இருபதாண்டு மகிழ்ச்சி.----------கம்பர் முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது-------நபிகள் நாயகம் நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.---தாமஸ் புல்லர் எல்லா புண்களுக்கும் காலம் தான் நல்ல களிம்பு; மாற்றம் இயற்கையின் நியதி.-----எட்ஹோ

சிந்தனைகள்

வயல்களுக்குக் களை அழிவை உண்டாக்குவது போல,மனிதர்களுக்குக் காம இச்சை அழிவை உண்டாக்குகிறது---------புத்தர் கல்லைச் செதுக்கி உருவாக்குவது போல்,மனிதனை உருவாக்க முடியாது.தனக்குத்தானே உருவாகும்படி அவனுக்குக் கற்பிக்கத்தான் முடியும்.-----------கே.எம்.முன்ஷி நேரம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே செல்வம்.இந்த செல்வத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உங்கள் ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவர்கள் ஏமாற்றித் தங்களுடைய தன்நலத்திற்காக உபயோகித்துக்கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்கள். படிக்க நேரம் ஒதுக்குங்கள்--அது அறிவின் ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்--அது மகிழ்ச்சிக்கு வழி. உழைக்க நேரம் ஒதுக்குங்கள்--அது வெற்றியின் விலை. பேச்சு என்ற வணிகத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே பயன்படுத்துங்கள்.----------அண்ணல் காந்தியடிகள்.

சிந்தனைகள்

ஒரு பஞ்சுமெத்தையின் மீது நெருக்கியடித்து உட்கார்ந்து இருப்பதை விட,ஒரு பூசணிக்காயின் மீது தனியாக வசதியாக உட்கார்ந்து இருப்பதை விரும்புகிறேன்.----தொராவ் எச் செயலிலும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.-----------மகாவீரர் தொழில் வெற்றிக்கு வழி ; துணிந்து செய்யுங்கள்,முதலில் செய்யுங்கள்,வித்தியாசமாகச் செய்யுங்கள்.--------மர்ச்சன்ட் நான் வெற்றியடைவதற்குக் காரணம் நான் எப்பொழுதும் எதற்கும் தயாராக இருக்கிறேன்.எனக்காக வேறு யாரும் உதவி செய்வதை நான் அனுமதிப்பதில்லை.--------காப்பர் வெற்றி ஒரு விளக்கு.தானாக அது எரியப் போவதில்லை நீ தான் அதை ஏற்ற வேண்டும்.------அர்னால்டு கிளாசோ. எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.------வில்லியம் மீக்லி.

சிந்தனைகள்

தனது தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிறமொழியில் நல்ல தேர்ச்சி வராது.---------பெர்னார்ட் ஷா பரந்த கற்பனைவளம்,எல்லாப் பொருள்களிலும் ஊடுருவும் பேராற்றல் இவை இல்லாதவனும் இலக்கியமே படிக்காத எந்த எழுத்தாளனும் காலத்தால் சாகாத இலக்கியத்தைப் படைக்க முடியாது.--------காண்டேக்கர் எந்நேரமும் தொழில் பணி என்று இராமல் ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரமாவது வீட்டில் குழந்தைகளுடன் இருப்பதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை.-------சாகர். உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை என்றால் எல்லோரும் அந்த வேடத்தைப் போட்டுக் கொண்டிருப்பதால் தான்.------------ஹிலே உயர்ந்த குடியில் பிறந்த எவன் தன்னிடம் வரக்கூடிய பழிக்கு அஞ்சுகிறானோ அவனைத் தேடிப் பொருள் கொடுத்தாவது நட்புக்கொள்.-------திருவள்ளுவர் அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.----------லயட்கரின்

சிந்தனைகள்

பிறர் துன்பங்களக் கேட்டுக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.---------பீச்சர் விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.-----------லாலா லசபதிராய் நாம் விரும்புவதை மட்டும் பெறவே முயலுங்கள்.முடியாத போது நாம் பெறக்கூடியவற்றை மட்டும் விரும்புங்கள்.---------வில்சன்

சிந்தனை

ஒரு நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கமோ பரப்பளவோ அந்நாட்டிற்குப் பெருமை சேர்பதல்ல,அந்நாட்டு மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வே அந்நாட்டின் உண்மையான உயர்வாகக் கருதப்பெறும்-----------ஜவர்கலால் நேரு நீ உன்னை வலிமையற்றவன் என்று ஒருபோதும் எண்ணாதே.எழுந்து நில்,உன் விதியைப் படைப்பவன் நீயே என அறிந்துகொள்,உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,ஆற்றலும்,உனக்குள்ளே குடிக்கொண்டிருக்கின்றன.----------காந்தியடிகள் நடக்க கூடாதது நடந்துவிட்டதற்காக வருந்திக் கொண்டு இருப்பதை விட,இனிமேல் அதைச் சீர்திருத்திட என்ன செய்யலாம் எனச் சிந்திப்பவனே சரியான மனிதன்.----------மு.வ