சிந்தனைகள்

ஒரு பஞ்சுமெத்தையின் மீது நெருக்கியடித்து உட்கார்ந்து இருப்பதை விட,ஒரு பூசணிக்காயின் மீது தனியாக வசதியாக உட்கார்ந்து இருப்பதை விரும்புகிறேன்.----தொராவ்

எச் செயலிலும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.-----------மகாவீரர்

தொழில் வெற்றிக்கு வழி ; துணிந்து செய்யுங்கள்,முதலில் செய்யுங்கள்,வித்தியாசமாகச் செய்யுங்கள்.--------மர்ச்சன்ட்

நான் வெற்றியடைவதற்குக் காரணம் நான் எப்பொழுதும் எதற்கும் தயாராக இருக்கிறேன்.எனக்காக வேறு யாரும் உதவி செய்வதை நான் அனுமதிப்பதில்லை.--------காப்பர்

வெற்றி ஒரு விளக்கு.தானாக அது எரியப் போவதில்லை நீ தான் அதை ஏற்ற வேண்டும்.------அர்னால்டு கிளாசோ.

எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.------வில்லியம் மீக்லி.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல உச்சாகமான வரிகள் மிக்க நன்றி ...
இதவி- உதவி மாற்றிவிடுங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்