தாம்பூலம் தரித்தல்.....
தமிழர்களுடைய பழக்க வழக்கங்களில் ஒன்று தாம்பூலம் தரித்துக்கொள்ளுதல். தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றிலைப் போடுவதாகும்.என்னென்ன பொறுள்களைக் கலந்து தாம்பூலம் தரிக்கவேண்டும் என்பதும் உண்டு.வெற்றிலையுடன் பச்சைக் கற்பூரம்,ஜாதிக்காய் ,வால் மிளகு,காராம்பு,கத்தக்காம்பு,சுண்ணாம்பு,பாக்கு ஆகிவற்றைச் சேர்த்து போடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது. தாம்பூலம் தரிப்பதால் என்ன பயன் என்றால், வாய்க்கு நறுமணம் ஏற்படுகிறது.முகத்திற்கு அழகையும் ஒளியையும் உண்டாக்குகிறது . தாடை ,பல்,நாக்கு இவற்றின் அசுத்தங்களைப் போக்குகிறது.வாயில் மிகுதியாக உமிழ் நீர் சுரப்பதைத் தடுக்கின்றது.கலவியில் விருப்பத்தை ஏற்படுத்துகிறது.துவர்ப்பு ,கார்ப்பு,கசப்பு,உவர்ப்பு சுவைகள் ஒருங்கே இருப்பதால் எளிதில் உண்ட உணவு செரிக்கின்றது.இதயத்திற்கு நலம் பயக்கின்றது.தொண்டை நோய்களைப் போக்குகின்றது. தாம்பூலத்தை எப்பொழுது போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் வரையறுத்துற்றனர் நம் முன்னோர்.தூங்கி எழுந்தவுடன்,உணவு உண்ட பின்,குளித்த பிறகு தாம்பூலம் தரித்துக்கொள்ளலாம்.அதே போல காலை நேரத்தில் தாம்பூலம் போடும்போது பாக்கைச் சிறிது கூடுதலாகவும்,மதியநேரத்தில்...