இடுகைகள்

ஆத்தா கைமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்தாரணை மருந்து கொழம்பு

சத்தாரணை என்ற  ஒருவகைச் செடியுள்ளது. மருத்துவகுணம் நிறைந்த செடி. எங்கூர் பக்கம் அதனைப் பறித்து கொழம்பு வைப்பார்கள். சத்தாரணை இலை பூவரசு இலை போல இருக்கும் ஆனால் இலையின் ஓரத்தில் வளைவாக காணப்படும்.(ஊருக்குச் செல்லும் பொழுது அதனைப் படம் எடுத்துப் போடுகிறேன்). இணையத்தில் தேடினேன் அப்படி ஒரு பெயரே இல்லை. அது வேறு பெயரில் வழங்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை.அது ஒரு கொடி வகை. இலையைப் பறித்து நன்றாக அலசிவிட்டு நல்லெண்ணை வதக்கி எடுத்துக்கொண்டு அதனை அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அரைக்கும் பொழுது மிளகு, சீரகம்,சோம்பு, மஞ்சள் வைத்து வழிக்கும்போது வெங்காயம் வைத்து வழித்து எடுத்துகொண்டு,  நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்து,சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூல் இரண்டையும் சேர்த்து , உப்பு போடவேண்டும். அதனுடன் முருங்கைக்காய் கத்தரிக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த பிறகு இறக்கி, சாப்பிட்டால் அப்படித்தான் இருக்கும். இதில் கருவாடும் வேண்டுமென்றால் சேர்ப்பார்கள்.

குமட்டிக்கீரை

கார்த்திகை மார்கழி மாதங்களில் கொல்லையில்,வயல்களில் கடலை போடும் பொழுது அதனூடாக முளைக்கும் கீரை. இந்த கீரை எங்களூரில் அந்த காலங்களில்  மட்டும் தான் கிடைக்கும்.கடலை  களை வெட்டும்பொழுது அதுனூடாக இருக்கும்  இளங்கீரையாக இருக்கும் குமட்டிகீரையை மாலை நேரங்களில் பறித்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.வேரை மட்டும் கிள்ளிவிட்டு சிறது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்தால் ஒரே ஆவியில் வெந்துவிடும். எடுத்து கடைந்து கடுகு, காய்ந்த மிளகாய்,சின்னவெக்காயம், போட்டு தாளித்து சாப்பிட்டால் என்ன ஒரு சுவை. உண்மையாகவே இந்த கீரையின் சுவையைப் போல் வேறு எந்த கீரையின் சுவையையும் நான் அறிந்ததில்லை. அது பெரிதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.எங்களூரில் பெரிதாகி பார்த்தில்லை. இளங்கீரையாக கிடைக்கும் நாள்களில் பயன்படுத்துவதோடு சரி. இளம் குமட்டிக்கீரை அதை கடைந்து சாப்பிட்டால் அப்பப்பா... சொல்லி மாளாது சுவை...

மூக்கரட்டை ரசம்(சூப்)

படம்
எங்க ஊரில் (ஒக்கநாடு கீழையூர் என்ற ஒக்கூர்)அதிகமான அளவு மூக்கரட்டை எங்கும் படர்ந்து காணப்படும். எங்க அம்மாயி நல்லா சமைக்கும்.  அவங்க சமைச்சா எங்க வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். எதனையும் மிக சுவையாக சமைத்து தருவதில் கைதேர்ந்தவர். மூக்கரட்டை ரசம் வைத்து தருவார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். மூக்கரட்டை தரையோடு படர்ந்திருக்கும் அதனை பிடிங்கி வந்து அதன் வேரை அம்மியில் மைய அரைத்து அதனுடன் மிளகு, சீரகம்,சோம்பு,மஞ்சள், மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து வைத்து அரைத்து வழிக்கும் போது சிறிய வெங்காயத்தையும் வைத்து வழித்து எடுத்து, நல்லெண்ணை ஊற்றி சிறிது கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி நன்றாக வதக்கி விட்டு, புளி கரைகல் குறைந்த அளவு அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையைக் கலந்து, கொதித்து வரும்பொழுது அதன் மேல் நல்லெண்ணைவிட்டு இறக்கி வைத்தால் கமகம மணம், மிகுந்த சுவை. வாய்ப்புக் கிடைத்தால் ஊருக்குப் போகும் பொழுது அம்மாயியை வைக்கச் சொல்லி படத்தோடு போடுகிறேன்.

சோள கூழும் - கடலை தொவையலும்

படம்
துரித உணவுமுறை சூழலும் அதனால் உண்டாகும் நோய்மைகளும் இன்று பழைய உணவு முறைகளை நினைக்கத் தூண்டுகிறது. ஒரத்தநாடு பக்கத்தில் ஒக்கநாடு கீழையூர் எங்கள் ஊர், எங்கள் ஊரில் அப்பொழுதுநெல், சோளம், கேழ்வரகு,கடலை, பயறு வகைகள் போன்றவை அதிகம் பயிறிடுவார்கள்.நாங்கள் சிறுவயதாக இருக்கும் பொழுது பெருபாண்மை நெல் சோறு தான் என்றாலும்,  எங்க அப்பாயி(அப்பாவுடைய அம்மா) மாதத்துக்கு ஒரு முறை சோளகூழு செய்து தரும். அதற்கு தொட்டுகொள்ள நிலகடலையை வறுத்து துவையல் அரைத்துக் கொடுக்கும். அது இன்று சாப்பிடவேண்டும்  போல் தோன்றுகிறது.  என்னதான் சோளத்தில் பல வகையான உணவுகள் இன்று கிடைத்தாலும் அந்த சுவை இன்று கொண்டுவரமுடியவில்லை. சோளத்தை முதல் நாளே உறவைத்து மாலையில் உரலில் இட்டு இடித்து மாவாகவும் பாதி குருணையாவும் எடுத்துக்கொண்டு, அடுப்பில் பானையில் வெந்நீரை வைத்து அதில் குருணையாக வைத்திருக்கும் சோள அரிசியைப் போட்டுவிட்டு சிறிது நேரமு கழித்து, இடித்த மாவை கரைத்து அதில் ஊற்றி,உப்பிட்டு நான்றாக வெந்தவுடன் இறக்கி வைத்து பெரிய குணாடானைத் தலைக்குப்புற போட்டு கவித்து வைத்துவிடுவார். அடுத்த நாள் காலையில் அதன்மேல் ஏட...