சத்தாரணை மருந்து கொழம்பு

சத்தாரணை என்ற  ஒருவகைச் செடியுள்ளது. மருத்துவகுணம் நிறைந்த செடி. எங்கூர் பக்கம் அதனைப் பறித்து கொழம்பு வைப்பார்கள்.

சத்தாரணை இலை பூவரசு இலை போல இருக்கும் ஆனால் இலையின் ஓரத்தில் வளைவாக காணப்படும்.(ஊருக்குச் செல்லும் பொழுது அதனைப் படம் எடுத்துப் போடுகிறேன்). இணையத்தில் தேடினேன் அப்படி ஒரு பெயரே இல்லை. அது வேறு பெயரில் வழங்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை.அது ஒரு கொடி வகை.

இலையைப் பறித்து நன்றாக அலசிவிட்டு நல்லெண்ணை வதக்கி எடுத்துக்கொண்டு அதனை அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அரைக்கும் பொழுது மிளகு, சீரகம்,சோம்பு, மஞ்சள் வைத்து வழிக்கும்போது வெங்காயம் வைத்து வழித்து எடுத்துகொண்டு,  நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்து,சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூல் இரண்டையும் சேர்த்து , உப்பு போடவேண்டும். அதனுடன் முருங்கைக்காய் கத்தரிக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த பிறகு இறக்கி, சாப்பிட்டால் அப்படித்தான் இருக்கும். இதில் கருவாடும் வேண்டுமென்றால் சேர்ப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்