மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் (சிதம்பரம் சடையப்ப தண்டபாணி தேசிகர்) தோற்றம் - 02. 04. 1903 மறைவு - 25. 04. 1990 சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி, கிராமத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சடையப்ப தேசிகர். தாயார் பாலம்மாள். சு. பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் மகாவித்துவான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யரின் மாணவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவன் எனும் பட்டம் பெற்றவர். பின் திருவாரூரில் இவர் பணிசெய்யும் போது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இவருடைய மாணவர். மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றினார். திருக்குறள், திருவாசகம் போன்றவற்றின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் சிறந்த இரு நூல்களை இயற்றிய தண்டபாணி தேசிகர் அவர்கள் சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான் மற்றும் திருமந்திரம் விளக்கக் கூடிய பஞ்சாச்சர தீபம் போன்ற நூல்களை எழுதியுள்ளார...