தமிழ்நூல் தொகுப்பு வரலாறு
தமிழ்ச்சூழலில் பல்வேறு தொகுப்பு மரபுகள் உருவாகி வருகின்றன. ஒரு மையப் பொருண்மையில் அறிஞர்கள் எழுதிய கட்டுரையைத் தொகுப்பது/புதிதாக எழுதி தொகுப்பது என்ற வகையில் அமைகின்றன. இது போன்ற தொகுப்புகள் தமிழியல்/ தமிழ் சமூகச் சூழலைப் புரிந்து கொள்வதறாகான வாய்ப்பும் மறு வாசிப்பு செய்வதற்கான சாத்தியத்தையும் உருவாக்கிறன்றன. அந்தவகையில் பாரதி புத்தகாலயாவின் புதிய புத்தகம் பேசுகின்றது இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மலர் ஒன்றினை வெளிய்ட்டு வருகின்றது. இவ்வாண்டு தமிழ்ச் சமூகம் தொகுப்பு மரபினை எவ்வாறு உள்வாங்கி செயல்பட்டிருக்கின்றது என்பதை சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரையான பதிவாக தமிழ்நூல் தொகுப்பு வரலாறு என்னும் சிறப்பு மலரை வெளிட்டுள்ளது. 12 கட்டுரைகள் மரபிலக்கியத் தொகுப்புகளாகவும் 8 கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு கட்டுரைகளாகவும் 6 கட்டுரை தனிநபர் தொகுப்புகளாகவும் 3 கட்டுரைகள் இயக்கம் சார்ந்த கட்டுரைகளாகவும் 3கட்டுரைகள் நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகளாகவும் மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய மலராக மலர்ந்துள்ளது.