இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சங்க காட்சி

அவளோ செல்வ செழிப்பில் வளர்ந்தவள். சிறு வயதுடையாள் விளையாட்டுப் பருவத்தினள். அவளுக்குத் திருமணம் முடிகின்றது. புகுந்தகம் செல்லுகின்றாள்.நீண்ட நாட்கள் ஆகின்றது. அவளைக் கண்டு வர அவள் தாய் வருகின்றாள். தலைவியின் நிலையை எண்ணி வருந்தினாலும் வியந்து போகின்றாள். சிறுவிளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்த தன் பெண் இன்று தன் கணவன் குடும்பம் வறுமையுற்ற காலத்தும் தந்தையினுடைய செல்வ செழிப்பை எண்ணாமல், தன் கணவனின் வருவாயை அறிந்து அதற்கு ஏற்றாற்போல தன்னை மாற்றி கொண்டாலே என்று வியக்கின்றாள். கணவன் வீட்டில் வறுமை ஒருவேளை உணவுக்குக் கூட பஞ்சநிலை,அதுவும் நீரில் இடையிட்டுக் கிடக்கும் நுண்மணல் போன்ற கஞ்சி இதை உண்ணும் பக்குவத்தை இவள் யாண்டு பெற்றாள். சிறு பிள்ளை என்று எண்ணியிருந்தோமே இப்படி பட்ட அறிவும் நடைமுறை ஒழுக்கத்தையும் எங்கு கற்றாள் எனத் தாய் மனம் எண்ணுகிறது. சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டும் உணர்ந் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென, கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்; ஒழுகுநீர் நுணங்கு அறல் போல; பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே!(நற்றிணை,110) இம் மனநிலை இன்று எத்தனைப் பேரிடம் இருக்கின்

தமிழ்ச்சொற் கட்டமைப்பு

ஒவ்வொரு மொழியிலும் தனிநிலை,ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை மூன்றும் உள.ஆயினும் இவற்றில் ஏதேனும் ஒன்று மேலோங்கி நிற்கும். தமிழ் ஒட்டுநிலையில் பெரிதும் உளது; ஒரு சொல்லின் உறுப்புகளைத் தனித்தனியே பிரிக்கலாம்; பிறகு பிரிந்தவாறே சேர்த்து முன்னைய வடிவை உருவாக்கி விடலாம். கூனன் - கூன் + அன் பாடினான் - பாடு + இன் + ஆன் எடுத்தான் - எடு + த் + த் + ஆன் படித்தனன் - படி + த் + த் + அன் + அன் கண்டனன் - காண் (கண்) + ட் + அன் + அன் வந்தனன் - வா(வ) + த்(ந்) +த் + அன் +அன் இவை ஒவ்வொன்றற்கும் தனிப்பொருளும் பெயரும் உண்டு. பகுதி அல்லது முதனிலை, விகுதி அல்லது இறுதிநிலை. அவற்றுடன் இடைநிலை பகுதிக்கும் இடைநிலைக்கும் இடைப்பட்டது சந்தி. காண் - கண் என மாறுவது பகுதி திரிந்த விகாரம். வா - வ எனத் திரிவதும் அது த -ந் ஆவது சந்தி திரிந்த விகாரம். வந்தானில் ஆன் இறுதிநிலை,வந்தனன் என்பதில் அன் + அன் - என இரண்டும் உள. முன்னது சாரியை, பின்து விகுதி இறுதிநிலை . இத்தகைய சொற்கட்டமைப்பை மாற்றி வர்றான், பாட்றான் ,கேக்குறான், விளையாட்றான் என்றால் உட்பிணைப்பு பிரிக்க முடாயத நில

சொற்சுவை

தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்ச்சொல் இலக்கணம்தான் அம்மொழியின் இளமையைக் காத்தது.அளவிறந்த கருத்துகளும் வழிவகுக்கும் அவற்றில், ஒருசில சிறந்த பகுதிகளையே நாம் இங்கு அறிமுகம் செய்துகொள்கிறோம். தமிழ்மொழியிலுள்ள மொழிகளின் உள்வகைகளை ஓரிடத்தில் கூறுகின்றார். ஒரெழுத் தொருமொழி ஈரெழுத்தொருமொழி இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே தமிழில் ஓரெழுத்து தொரு மொழிகள் மிகப்பல. நெட்டெழுத்து என்பன உயிர்நெடிலாகிய உயிர்நெடிலாயினும் வேறு பொருள் தரும்போது சொல்லாகிவிடும். எழுத்துக்கள் தொடர்ந்து பொருள் தருவது சொல் என்பது மாறி, எழுத்தே தன்னை உணர்த்துவதன்றி பிறிதொரு பொருள் தந்து சொல்லாவது தமிழின் சிறப்புகளில் ஒன்றெனலாம். ஆங்கிலத்தில் A- என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக பயன்படுகிறது.A BOOK- ஒரு புத்தகம் .A CLASS- உயர் வகுப்பு முதல் வகுப்பு I - நான். தமிழில் ஆ -பசு, வியப்புக்குறிப்பு, ஊ - தசை,ஊன்,உணவு. ஈ - தருவாயாக.தா,போ,கா,நா,வா,சா,பா,யா,மா,தீ,போ,கூ என அடுக்கலாம். சில பலபொருடையன. இவை சைகை மொழியிலிருந்து பிறந்த்தற்கு அடையாளம் என்பர் ஆய்வாளர். கூ- குயில், கா- காக்கை, மா- மாடு இவை போல்வன போ

விரிச்சி நிற்றல்

விரிச்சி நிற்றல் எனபதற்கு நற்சொல் கேட்டல் என்பது பொருள்.இச் சொல் வாய்ப்புள் எனவும் வழங்கப்படுகிறது. இப்பொழுது அசீரீரி எனக் கூறப்பெறுகின்றது. திருந்திழை விரிச்சி நிற்ப என நற்றிணையிலும்(40) நெல்நீர் எறிந்து விரிச்சி ஒருக்கும் எனப் புறநானூற்றிலும்(280) இச் சொல் பயிலப்படுகின்றது. இந்சொல் வாய்ப்புள் என வழங்கப்பெறுவதற்கு காரணம் நிமித்தம் காணப் பறவைகள் பயன்பட்டமை போல வாய்ச்சொல்லும் அதற்கு பயன்பட்டமை எனலாம். பெருமுது பெண்டிர் மாலைப்பொழுதில் பிரிந்து சென்ற தலைவன் நிலையினை அறிதற்கு, மூதூர் மருங்கு சென்று, நற்சொல் கேட்டனர். அப்பொழுது இடைக்குல மடந்தை குளிர் நடுக்கத்தால் கையைத் தோளில் கட்டிக்கொண்டு இளங்கன்று பாலகுடிக்காத துயரால் பசுவை நோக்கிக் கதறும் தன்மை கண்டு, கோவலர் ஆனிரையை ஓட்டிவர நன்கு மேய்ந்து நின் தாயார் இப்பொழுது வருகுவார் என்று கூறிய இன்சொல் அவர்கள் கேட்டனர். இது பிரிந்த தலைவன் விரைந்து வருவான் என்னும் குறிப்புணர்த்தியமையின், மடந்தைமொழி நன்மொழி எனச் சுட்டப்பட்டது. -----------------------ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள்; கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுநர் தா

காமம்

படம்
அதுகொல்?தோழி!காம நோயே, வதிகுருகு உறங்கும் இன் நிழற் புன்னை, உடைத்திரை திவலை அரும்பும் தீம்நீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடுஒல் லாவே(குறுந்தொகை,5) தன்னிடத்தே தங்கியிருக்கும் நாரைகள் உறங்கும் இனிய நிழலையுடைய புன்னை மரமானது, அலைவீசும் துளியால் அரும்புகின்ற இனிய நீர்ப்பரப்பையுடைய நெய்தல் தலைவன் பிரந்தானாக , தாமரை போன்ற கண்கள் இமை பொருந்தாவாயின் (உறங்கவில்லை) அவ்வுறக்கமின்மைதான் காமநோயோ எனப் பிரிவில் கவலையோடு தலைவி தோழியிடம் கூறுகின்றாள். காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாம்மும் விடியலும் என்று இப் பொழுதிடை தெரியின், பொய்யே காமம் (குறுந்தொகை,32) காலை நண்பகல் பிரிந்த்தால் செயல்ற்று வருந்தும் மாலை,ஊரார் துயிலும் நள்ளிரவு, விடியற்காலம் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோன்றுமாயின்,அத்தைகையோரிடம் தோன்றும் காமம் உண்மையன்று; பொய்யேயாகும். பொழுதின் வேறுபாடு தெரியாது துய்ப்பது தான் காமம் என் மிகுத்துச் சொல்லியது. ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின் கைஇல் ஊமன் கண்ணில் காக்கும், வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே (குறுந்தொகை,58) கதிரவனின் வெயில் எறி

வியாபாரிகளாகும் மருத்துவர்கள்..........

அனைத்தும் உலகமயமாகி கொண்டிருக்கும் சூழலில் உயிருக்கு எவ்வித உத்தரவாதம் இல்லாமல் போய்க்கெண்டு இருக்கின்றது. உயிரைக் காக்க கூடிய மருத்துவம், அதனைச் செய்யக்கூடிய மருத்துவர்கள் பொருளை மையப்படுத்தி மனித உயிர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளவிடுகின்றார்கள். மக்கள் உயிர் மலினப்பட்டுவிட்டது. அறியமையில் உழலும் மக்கள் மட்டும் அல்ல அறிவுடையோரும் சில நேரங்களில் இதில் சிக்கித் தவிக்கதான் செய்கின்றார்கள். அவர்களுடைய தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்த்துவிடவேண்டுமெனச் சில மருத்துவர்களின் எண்ணமாகிவிடுகின்றது. சர்க்கரை நோய் நிபுணர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக 60 வயதுள்ள ஆங்கில ஆசிரியராக இருந்து பணி ஒய்வு பெற்ற அம்மையார் ஒருவர் சர்க்கரை நோய்க்காக மருத்துவம் பார்த்து வந்தார். அவருக்கு மூன்று ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு எக்கச் சக்கம். அதைவிடக் கொடுமை அவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரை அவர் வைத்திருக்கும் மருந்து கடையைத்தவிர வெளியில் கிடைக்காது.(பெரும்பாலன மருத்துவமனைகளில் இதுதான் நடக்கின்றது. இல்லை என்றால் மருத்துவக் கடைக்கார்கள் அவர்கள் வைத்திருக்கும் மருந்தினை எழுதிகொடுப்பதற்குக் கமி

காமநோய்

காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!(நற்றிணை,39) அருளினினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே!என்னதூஉம் அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே( நற்றிணை,140) அன்பில்லாத தலைவி நமக்கு அருள்செய்தாலும், அருள் செய்யாது பிரிந்து போனாலும் ,நீ மிகவும் உள்ளம் அழிந்து இரந்து வழிப்பட்டு நிற்றலை வெறுக்காதே. யான் கொண்ட காமநோயோடு கலந்த துன்பத்தைத் தவிர, வேறொன்றும் சிறிதளவு கூட, மருந்தாகும் தன்மையுடையது இல்லை என்று தலைவன் தம் நெஞ்சம் நோக்கி கூறினான். நல்காய் ஆயினும் நயனில செய்யினும் நின்வழிப் படூஉம் என்தோழி நலநுதல் விருந்திறை கூடிய பசலைக்கு, மருந்து பிறிதின்மை நற்குஅறிந்தனை செம்மே ( நற்றிணை,247) நீ தலைவிக்குத் தலையளி செய்யினும்,அவள் வெறுக்கும் செயலைச் செய்யினும், உன் மனதுகேற்ப நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியிலுள்ள நிலை கொண்ட பசலை நோய்க்கு,நீயே மருந்தாவதன்றி பிறிதொரு மருந்தினை நீ நன்கு அறிந்து, பின் செல்வாயாக எனத் தலைவனுக்குத் தோழி கூறினாள். மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர, நினக்கு மருந்து ஆகிய யான், இனி இவட்கு மருந்து அன்மை நோம்என் நெஞ்சே( ஐங்குறுநூறு,59) ம

காமத்தீ

தீயானால் சுடுதலோ இலர்மன்;ஆயிழை தீயினும் கடிது,அவர் சாயலின் கனலும்நோய்(கலித்தொகை,137) ஓஒ! கடலே! ஊர்தலைக் கொண்டு கனலும் கடுந்தீயுள், நீர்ப்பெய்க் காலே சினம் தணியும்; மற்று இஃதோ, ஈரமில் கேள்வன் உறீஇ காமத்தீ, நீருள் புகினும் சுடும் (கலித்தொகை,144)

காமத்தில் புலம்பல்.........

மைஇல் சுடரே!மலைசேர்த்தி நீஆயின், பௌவநீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை, கைவிளக்காக கதிர் சில தாராய்,என் தொய்யிலை சிதைத்தானைத் தேர்கு( கலித்தொகை,142) பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை, திங்களுள் தோன்றி இருந்த குறுமுயல்! எம்கேள் இதன் அகத்த உள்வழிக் காட்டீமோ! காட்டாய் ஆயின்,கதநாய் கொளுவுவேன்(கலித்தொகை,144) பேணான் துறந்தானை நாடுமிடம் விடாயாயின், பிறங்கு இருமுந்நீர் வெறுமண லாகப் புறங்காலின் போக இறைப்பேன்; முயலின் அறம்புணை யாகலும் உண்டு (கலித்தொகை,144)

காதற் சிறப்பு

பட்டுநீக்கித் துகில்உடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும் (பட்டினப்பாலை) முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய, வாரேன் வாழிய நெஞ்சே!(பட்டினப்பாலை) கைகவியாச் சென்று, கண்புதையாக் குறுகி பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி, தொடிக்கை தைவரப் தோய்தன்று கொல்லோ! நாணொடு மிடைந்த கற்பின்,வாள்நுதல் அம்தீம் கிளவிக் குறுமகள், மென்தோள் பெறல்நசைஇச் சென்றென் நெஞ்சே ( அகநானூறு,9) பெருங்கல் நாடன், இனியன் ஆகலின் ,இனத்தின் இயன்ற இன்னா மையினும் இனிதோ! இனிதுஎனப் படூஉம் புத்தேள் நாடே ( குறுந்தொகை,288) யானே, குறுங்கால் அன்னம் குவவுமணற் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும், விடல்சூ ழலன்யான் நின்னுடை நட்பே ( குறுந்தொகை,300) இரண்டுஅறி கள்வி, நம்காத லோளே! முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நண்ணூற வந்து, நள்ளென் கங்குல் நம்ஓ ரன்னாள் கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, யாந்துஉளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தள் ஆகித் தமர்ஓர் அன்னள்; வைகறை யானே ( குறுந்தொகை,312) நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும் பயனும் பண்பும

காதல் இயல்பு.........

நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; விலங்குஇரு முந்நீர் காலின் சொல்லார்; நாட்டின் நாட்டின்,ஊரின், ஊரின், குடிமுறை குடிமுறை தேரின், கெடுநரும் உளரோநம் காத லோரே (குறந்தொகை,130) தலைவி தலைவனைக் காணாமல் புலம்பித் தவிக்கின்றாள், அப்பொழுது தோழி அவளிடம் நம் தலைவர் சித்திப்பெற்றவர் போல நிலத்தைத் தோண்டி உள்ளே போகார்; விண்ணகத்தே ஏறிச்செல்லார்; பெரிய கடல்மேல் காலால் நடந்து போகமாட்டார்.நாடுகள் தோறும் ஆராயந்தால், அகப்படாமல் தப்பிச்செல்வாரும் உளரோ? எங்கிருந்தாலும் தலைவனைத் தேடிப்பிடித்துத் தருகின்றேன் கலங்காதே என தேறுதல் மொழிகூறி ஆற்றுகின்றாள். வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே, பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கள் தண்ணிய தரினும், வெய்ய உவர்க்கும் என்றனிர்; ஐய அற்றால் அன்பின் பாலே!(குறுந்தொகை ,196) தலைவியிடம் பழக தொடங்கிய காலத்தில் என் தோழியாகிய தலைவி வேங்பங்காய்யைத் தந்தாலும், இனிய வெல்லகட்டி என்று பாராட்டி சுவைத்து மகிழ்ந்தீர். ஆனால் இப்பொழுது பாரிவள்ளலின் பறம்பு மலையிடத்துள்ள தைமாத்தில் குளிர்ந்த சுனை நீரைத் தந்தாலும், வெப்பமுடையது உப்புச் சுவையுடையது என்

விருந்தோம்பல்.......

படம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே(புறநானூறு,18) உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன்( புறநானூறு,95) ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்; பலநாள் பயின்று, பலரொடு செல்லினும், தலைநாள் போன்று விருப்பினன் மாதோ!(புறநானூறு,110) நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன்;இன்றிக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்(புறநானூறு,316) இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னான் நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூப் போல, சிற்சில வரிசையின் அளிக்கவும் வல்லன்(புறநானுறு,331) தேட்கடுப் பன்ன நாட்படுதேறல் கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ, ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை விருந்திறை நல்கி யோனே!அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே (புறநானூறு,392) தனமனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை என்போற் போற்றென் றோனே! அதற்கொண்டு அவன்மறவ லேனே பிறர் உள்ள லேனே.(புறநானூறு,395) தீந்தொட் நரம்பின் பாலை வல்லோன் பையுள் உறுப்பிற் பண்ணுப்பெயர்த் தாங்குச் சேறுசெய் மாரியின் அளிக்கும் நின் சாறுபடு திருவின் நனைமகி ழான

சங்க இலக்கியம் கூறும் மழலை இன்பம்

படைப்புப் பலபடைத்து பலரோடு உண்ணும், உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும்,தொட்டும்,கவ்வியும்,துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே( புறநானூறு,188) தாமரைத் தாதின் அல்லி அயலிதழ் புரையும் மாசில் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீம்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன் (அகநானூறு,16) இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, மறுமை உலகமும் மறுஇன்று எய்துப; செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் (அகநானூறு,66) நினநயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன் முறுவல் காண்டலின், இனிதோ? இறுவரை நாட நீ இறந்து செய்பொருளே.(ஐங்குறுநூறு,309) கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச்சா அய்ச்செல்லும் தளர்நடை காண்டல் இனிது (கலித்தொகை,80) ஐய!காரும நோக்கினை,அத்தத்தா என்னும் நின் தேமொழி கேட்டல் இனிது ( கலித்தொகை,80)

சங்க இலக்கியம் கூறும் உலகியல்.....

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறநானூறு,76) சாதலும் புதுவதன்றே ; வாழுதல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே;முனிவின் இன்னாது என்றலும் இலமே( புறநானூறு, 192) ஓரில் நெய்தல் கறங்க, ஓரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண பனிவார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப்பணிபி லாளன்!(புறநானூறு,19 இன்னாது அம்ம! இவ்வுலகம்; இனியகாணக,இதன் இயல்பு உணர்ந்தோரே (புறநானூறு,194) இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும், நண்பகல் அமையமும் இரவும் போல, வேறுவேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, உளவென உணர்ந்தனை ( அகநானூறு,327) மகளிர் தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர நீத்தலும், நீள்சுரம் போகியார் வல்லைவந்து அளித்தலும், ஊழ்செய்து,இரவும் பகலும்போல்,வேறாகி, வீழ்வார்கண் தோன்றும்,தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்க்கு எல்லாம் வரும் ( கலித்தொகை 145)

சங்க இலக்கியம் கூறும் அறம்

இறைஞ்சுக, பெரும ! நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே (புறநானூறு,6;19,20) பார்பார்க்கு அல்லது பணிபுஅறி யலையே (பதிற்றுப்பத்து 63 ;1) வல்லாரை வழிப்பட்டுஒன்று அறிந்தான்போல, நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் (கலித்தொகை,47) பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த, தாதுண் பறவை பேதுறல் அஞ்சி, மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகநானூறு, 4;11-13) அத்தம் அரிய என்னார்,நத்துறந்து பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ்வுலகத்துப் பொருளே மன்ற பொருளே! அருளே மன்ற ஆரும்இல் லதுவே (குறுந்தொகை,174) நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று; தன்செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின், மென்கண் செல்வம் செல்வம்என் பதுவே (நற்றிணை,210) அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும ! நின் செல்வம்; ஆற்றா மைநிற் போற்றா மையே;(புறநானூறு,28) நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்( புறநானூறு, 29) இன்சொல் எண்பதத்தை ஆகுமதி, பெரும!(புறநானூறு,40) கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும் நான்குடன் மாண்டது ஆயினும்,