காதற் சிறப்பு

பட்டுநீக்கித் துகில்உடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும் (பட்டினப்பாலை)

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய,
வாரேன் வாழிய நெஞ்சே!(பட்டினப்பாலை)

கைகவியாச் சென்று, கண்புதையாக் குறுகி
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரப் தோய்தன்று கொல்லோ!
நாணொடு மிடைந்த கற்பின்,வாள்நுதல்
அம்தீம் கிளவிக் குறுமகள்,
மென்தோள் பெறல்நசைஇச் சென்றென் நெஞ்சே ( அகநானூறு,9)


பெருங்கல் நாடன்,
இனியன் ஆகலின் ,இனத்தின் இயன்ற
இன்னா மையினும் இனிதோ!
இனிதுஎனப் படூஉம் புத்தேள் நாடே ( குறுந்தொகை,288)


யானே, குறுங்கால் அன்னம் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்,
விடல்சூ ழலன்யான் நின்னுடை நட்பே ( குறுந்தொகை,300)

இரண்டுஅறி கள்வி, நம்காத லோளே!
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நண்ணூற வந்து,
நள்ளென் கங்குல் நம்ஓ ரன்னாள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
யாந்துஉளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர்ஓர் அன்னள்; வைகறை யானே ( குறுந்தொகை,312)


நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே;
..........................................................
........................................... இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே ( நற்றிணை,160)

பொன்படு கொண்கான நன்னர் நல்நாட்டு
ஏயிற் குன்றம் பெறினும், பொருள்வயின்
யாரோ பிரிகிற் பவரே! குவளை
நீர்வார் நிகர்மலர் அன்ன, நின்
பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே(நற்றிணை,319)

தண்ணம் துறைவன் நல்கின்,
ஒள்நுதல் அரிவை பால்ஆ ரும்மே (ஐங்குறுநூறு,168)

அன்னாய் வாழி! வேண்டும் அன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய; அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ,
மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே (ஐங்குறுநூறு,203)

சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை அன்ன,
நலம்பெறு கையின்என் கண்புதை தோயே!
பாயல் இன்துணை ஆகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை,
நாஅலது உளரோஎன் நெஞ்சமர்தோரே!(ஐங்குறுநூறு,293)

நெடுங்கழை முளிய வேனில் நீடி,
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்,
வெய்ய ஆயின்,முன்னே; இனுயே,
ஒள்நுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய ஆயின், சுரத்திடை ஆறே (ஐங்குறுநூறு,332)

அரும்பொருள் வேட்கையம் ஆகிநின் துறந்து
பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவநனி நெடிய ஆயின; இனியே,
அணியிழை உள்ளி, யாம் வருதலின்,
நணிய ஆயின சுரத்திடை ஆறே (ஐங்குறுநூறு,359)

நின்னே போலும் மஞ்ஞை ஆல ,நின்
நல்நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மாமருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்;
நல்நுதல் அரிவை! காரினும் விரைந்தே.(ஐங்குறுநூறு,492)

சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய;
நாடிடை விலங்கிய எம்வயின், நாளதொறும்
அரும்பனி கலந்த அருள்இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்,
பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே (ஐங்குறுநூறு,479)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......