இன்று பொருளியல் தேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கல்வி முறையில், மானுட விழுமியங்கள், அற மதிப்பீடுகள் குறித்த இடம் தெரியவில்லை. இவற்றை கற்பிப்பதில் ஆசிரியரின் பங்கு பெரிது என்றாலும், இன்றை சூழல் உகந்ததாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. க. துளசிதாசன் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கனவு ஆசிரியர் என்னும் நூல் தமிழகப் படைப்பாளுமைகள் பலர் தங்களுக்கும் ஆசியருக்குமான உறவினைக் கூறுவதாக அமைந்துள்ளது. தன்னுடைய மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஆப்ரஹாம் லிங்கன் எழுதிய கடிதம் எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்லர். அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்லர் என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அதே சமயம் ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும் ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் சொல்லிக் கொடு