இடுகைகள்

ஊர்ப்பெயராய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரிமண வாயில்

வேள் எவ்வியின் பகைவர்களைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் அரிமண வாயில் உறத்தூர் என்ற ஊர்ப்பெயர் குறிக்கப் பெற்றுள்ளது.   அரி-கள், உறப்பு-செறிவு, கள்ளின் மணம் செறிந்த ஊர் அரிமண வாயில் உறத்தூர் என்று அமைந்திருக்கலாம். “ வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன. கவ்வை ஆகின்றல் பெரிதே . . . . ” (அகம்-266-11-15) - இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் - தொகுதி – ஒன்று – ஆர். ஆளவந்தார் – ப.63.       எவ்வி என் பானின் பகைவர் ஊர்களாக அரிமண வாயில், உறத்தூர் என்னும் இரு ஊர்களைப் பரணர் குறிக்கின்றார். இந்த அரிமண வாயிலே இன்று அரிமளம் என்று வழங்குகின்றது என்பர்.   பண்டை நாளைச் சேரர் வரலாறு எனும் தம் நூலில் ஔவை துரைசாமியார். - தென்னாட்டுப் போர்களங்கள், க. அப்பாத்துரை

அம்பர்

  சோழநாட்டில் அம்பர் என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது.   தஞ்சை மாவட்டத்தில் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.   இவ்வூரை அடுத்து அம்பர் மாகானம் உள்ளது.     “ அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே ” என்னும் தேவாரத்தின் மூலம் அரசிலாற்றங்கரையில் அம்பர் மாநகர் அமைந்து இருந்தமையை அறிகிறோம்.   ஆற்றில் அக்கரையில் அமைந்த ஊர் என்னும் பொருள்பட அம்பர் என்ற பெயர் அமைந்திருக்கலாம்.   சுசீந்திரத்தில் பழையாற்றின் அக்கரையில் அமைந்த ஊர் அக்கரை என்றே பெயர் பெற்றிருப்பது ஒப்புநோக்கத்தக்கது. அம்பர் என்னும் ஊர் அருவந்தை என்ற வள்ளலுக்கு உரியதாக இருந்தது என்பதை அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடிய புறநானூற்றுப் பாட்டு ஒன்று தெரிவிக்கிறது. புலவர் பெயர் ஊர்ப்பெயருடன் இணைத்துக் கூறப்பட்டதை போல வள்ளல் முதலியோரின் பெயரும் ஊர்ப்பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட மரபும் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. சோழன் கிள்ளிக்குரிய அம்பரைச் சூழ்ந்து அரிசில் என்னும் ஆறு ஒடியதாக க...

அட்டவாயில்

       இருபெரு மன்னர் போரிட்ட இடம் என்பதைக் குறிக்கும் அட்டவாயில் என்பது பின்னர் ஊருக்குப் பெயராய் அமைந்தது என எண்ண வாய்ப்பு உள்ளது. இவ்வூர்ப் பெயர்கள் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.   பெருங்கொடி அசைந்து பறக்கும் ஊர் என்றும், அங்குள்ள கழனிகள் பசுங்கதிர்களைத் தாங்கிப் பெருங்கவினுடையன என்றும் அக்கவினையொத்தக் கவினுடையவள் தலைவி என்றும்கூறி தலைவியின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது. அகப்பொருள் பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்களில் ஊர்ப்பெயர்கள் இடம் பெற்றிருப்பதை நோக்கும் பொழுது ஓர் உண்மை புலப்படும்.   தலைவியின் நலம் பாராட்டப்பெறும் இடங்களில் ஊர்ப்பெயர்கள் பல இடம் பெற்றிருக்கின்றன.   ஊரின் வளமும் பெயரும் கூறி அப்பெருங்கவின் ஒத்த நலமுடையான் எனத் தலைவியின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது.   இதன் மூலம் அக்குறிப்பிட்ட நகரின் வளமும் நமக்குத் தெரிகிறது. “ பெருங் கொடி நுடங்கும் அட்டவாயில் இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து விழவில் செலீ இயர் வேண்டும் . . . . (அகம் – 326-5-8)

சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு (சிறப்பாய்வு - உறையூர்)

படம்
தமிழக ஊர்ப்பெயர் ஆய்வுகள் , 1. ஊர்ப்பெயர் புனைவுகளை ஆதரித்துப் பொருள் கூறுதல். 2. ஊர்ப்பெயர் புனைவுகளைக் கட்டுடைத்து அறிவார்ந்த நிலையில் விவாதித்தல். என இரண்டு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக 18 ஆம் நூற்றாண்டில் கோட் பிரைடுவில் ஹெல்ம் லெய்ப்னிஷ் என்பவர் இடப்பெயராய்வை ஒரு அறிவியல் துறையாகத் தோற்றுவித்தார். இத்துறை வரலாறு, மொழியியல் துறைகளில் அசைவுகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இடப்பெயராய்வு உலகளவில் கவனப்படுத்தப்பட்டு, மேற்கண்ட இரண்டு நிலைகளில் உலகளவிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடப்பெயர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன . வள்ளலார்(1828-1874) ஊர்ப்பெயராய்வில் விருப்பம் காட்டினார் என்றாலும் பெரிதாக ஈடுபடவில்லை. 1946 இல் வெளியான ரா. பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் என்னும் நூல் படிப்பதற்குச் சுவையாக இருப்பினும் ஆய்வு தொய்வுடையதாக அமைந்துள்ளது. (2008:206). திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தலபுராணங்களிலும் ஊர்ப்பெயர் பற்றிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் அக்காரணங்கள் புராண புனைவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ...