இடுகைகள்

நூல் அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எந்தையும் தாயும்

படம்
  நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய நூல் எந்தையும் தாயும். புதுமைப்பித்தனைத் தேடிதேடிப் படிக்கின்ற வாசகர்களுக்கு சிலவற்றை அவர் மகள் என்ற முறையில் கூற ஆசைப்படுகிறேன். இதில் அச்சேறாத சில பகுதிகளும் உண்டு. இது அப்பாவின் வரலாற்றின் பின்பகுதி என்று கூறலாம் எனத் தன்னுடைய இரண்டாவது வயதில் தந்தையை இழந்த தினகரி தன் அம்மா அப்பாவைப் பற்றித் தொடர்ச்சியாக உரையாடியதன் வழியாகவும் அப்பாவின் நண்பர்களோடும் அவருடைய எழுத்துகளோடும் குறிப்பாக அவர் எழுதிய கடிகளிலிருந்தும் தாம் பெற்ற அனுவபவங்களிலுருந்தும் எழுதுகிறார். புதுமைப்பித்தன் ஒரு புறம் தமது கூரிய மொழியால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை எழுதிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் வாழ்வின் துயரம் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்துள்ளதை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலை வாசிக்கும்   பொழுது உணரமுடியும். தமது 40 வயதில் இரண்டு குழந்தைகளை இழந்து மூன்றாவது குழந்தையாகப் பிறந்த தினகரின் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் உடையவராக இருந்துள்ளது அவர் தொடர்ந்து தன் மனைவி கமலாவிற்கு எழுதிய க...

திணையியம்- தமிழின் ஆதி மெய்யியல்

படம்
  சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில்     முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் மு. பாலசுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்ட பாமயன். நவீன வேளாண்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பழந்தமிழரின் திணையியல் வாழ்வியலைப் பற்றித் தமிழ் சமூகத்தோடு தொடர்ந்து உரையாடியும் எழுதியும் வருபவர் . வேளாண்மையை அடிப்படையாக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் ஓர் இயற்கைநேய வாழ்க்கைமுறையை பொதியைச் சோலை என்னும் ஊரினை (கூட்டுறவு வேளாண் நிலமாகத் தென்காசி, சிவகிரி, வாசுதேவன்நல்லூர் அருகே) ஏற்படுத்தி பகுத்துண்ணல், பல்லூயிர் ஓம்பல், தமிழர் வகுத்துள்ள திணை வாழ்வியல், உயிர்ம நேயம் காத்தல் அத்துடன் அன்பையும் நிறைவையும் கொண்ட வாழ்வை எதிர்கால தலைமுறைக்கு உருவாக்கி கொடுத்தல் என்னும் கனவுகளைச் சாத்தியப்படுத்தி வருபவர் பாமயன். வேளாணைமை இறையாண்மை, அள்ளித் தரும் நிலம், அணுகுண்டும் அவரை விதைகளும், நியாய வணிகம், தாணுமாலயன் ஆலயம், முன்னத்தி ஏர் என்னும் நூல்களின் வரிசையில்2025 இல் வெளிவந்துள்ள நூல் திணையியம் தமிழின் ஆதி மெய்யியல். தோற்றுவாய் தொடங்கி நிறைவாக வரை 37 தலைப்புக...

உயிரற்ற உயிர்கள் (நடுநிசி எல்லைகள்)

படம்
      இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வடக்கே நிகழ்ந்த வன்கொடுமைகளை அபுனைவாகவும் புனைவாகவும் வாசித்துள்ளேன். காஷ்மீர் பகுதியில் தாக்குதல் குறித்தும் அவ்வபொழுது பார்ப்பதும் படிப்பதும் உண்டு. இந்திய நிலப்பரப்பின் தன்மையை, மக்களின் பண்பாட்டை உணர்வுகளைப் பற்றி எதுவும் அறியாதவர்களால் உருவாக்கப்பட்ட எல்லைகளில் வாழும் மக்களின் துயரார்ந்த வாழ்நிலையை அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் அடிப்படை வாழ்வில் சிக்கல்களுக்கான சட்டப்பூர்வமாக விளக்கங்களை அளித்து நேசத்தோடு உடன் பயணித்து அவர்களின் கதையை அவர்களின் குரலாகவே ஒலிக்கச் செய்துள்ளார் சுசித்ரா விஜயன். இதற்காக இந்திய எல்லை 9000 மைல் 2013 இலிருந்து கிட்டத்தட் எட்டு ஆண்டுகள் பயணித்துள்ளார். பயணத்தின் ஊடாக அவர் கேட்டக் கதைகள் இந்தியாவைப் பற்றி அண்மை காலத்தில் கட்டியெழுப்படுகின்ற கருத்தாக்கத்தை அசைக்கின்றன. 200 ஆண்டுகால காலனிய ஆதிக்கத்தின் துயரத்தைவிட சுதந்திரம் கிடைத்து எல்லைகள் பிரிக்கப்பட்ட பிறகு எல்லையோர மக்களின் அடிப்படை வாழ்வாதரமே திக்குத்தெரியாமல் இருண்டதாக மாறுகிறது. அவர்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் கதைகள் இந்தி...

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

படம்
  பெரும்பாலும் அறியப்படாத இனமாக இருப்பவர்கள் பார்சிகள். சொராஸ்டிரம் என்னும் மதத்திலிருந்துதான் பின்னர் பார்சி மதமாக இனமாக உருவாகியது என்பர்.   19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பார்சிகளின் எண்ணிக்கை 85,397 பம்பாயில் மட்டும் 48,507     ( https://www.dinamani.com/arasiyal-payilvom/ ) தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்றபட்ட குடும்பங்கள் வசிக்கின்றார்கள். பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு குடியேவறியவர்கள். சுதந்திர போராடத்தில் ஈடுபட்ட தாதாபாய் நௌரௌஜி, இந்திய அணு சக்தியில் புகழ்பெற்ற ஹோமி ஜஹாங்கீர், ரத்தன் டாடா, கோத்ரெஜ் வாடிய போன்றோர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.   இவர்கள் தங்களுக்கென்று சில வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி விருதினை ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் நூல் பெற்றுள்ளது. இதனை மொழி பெயர்த்தவர் பத்திரிக்கையாளர் மாலன். இதன் மூலநூலான Chronicle of a Corpse Bearer க்கு 2015 ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக...

ஒரு அரசு எழுத்தரின் மரணம்

  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் உரையைச் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டுக்கொண்டிருந்த பொழுது ரஷ்ய சிறுகதை மன்னனாகிய ஆன்டன் பாவ்லோ செக்காவின்   ஒரு கதையைக் கூறினார். அக் கதை ரஷ்ய சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய கதை என்றார். அக்கதையை நீண்ட நாள்கள் படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் பேராசிரியர் கி. நடராஜன் மொழிப்பெயர்ப்பில் பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதை மன்னன் செகாவ் என்னும் தொகுப்பில் அக்கதை இடம்பெற்றிருந்து. செகாவின் வான்கா சிறுகதையில்,   அன்புக்குரிய தாத்தா கான்ஸ்டன்டைன் மக்காரிச் என்று எழுதினான்.   உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன் . கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அனுப்பிகிறேன் ,  ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் .  எனக்கு அப்பாவும் இல்லை ,  அம்மாவும் இல்லை ;  உன்னைத் தவிர யாருமே இல்லை எனக்கு . மாஸ்கோ மிகப் பெரிய ஊர் ,  கனவான்களது வீடுகளுக்குக் கணக்கே இல்லை ,  குதிரைகளும் ஏராளம் .  ஆனால் ஆடுகள் இல்லை ,  நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றி சாதுவாய் இருக்கின்றன .  கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்த...

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

படம்
            இயற்கையோடு இயைந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கையை நவீனம் என்கின்றோம். அதனோடு இன்றளவும் இயைந்து வாழக்கூடியவர்களைப் பழங்குடிகள் என அடையாளப்படுத்துகிறோம். தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வியல் குறித்த ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்வுகளை வாசிக்கும் பொழுது, ஆய்வுகளின் நோக்கம் ஆவணப்படுத்துவது மட்டுமா? வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதா? அம்மக்களை மேம்படுத்டுவதா? அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வாழ்க்கையை அளிப்பதா? என்ற பல்வேறு வினாக்கள் எழுகின்றன.             நீலகிரி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் வசித்துவரும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களோடு ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களின் வாழ்வியல் முறைகளை நுட்பமாக அவதானித்து, அங்குள்ளோரிடம் வாய்மொழியாகப் பெற்ற விவரங்களை அடிப்பட்டையாகக் கொண்டு, தம்முடைய அனுபவத்தையும் இணைத்து தகவல் கிடங்காக மட்டும் இல்லாமல் வாசகர்களை ஈர்க்கும் வகையில் பிலிப் குமார் என்னும் ஊரா...

தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்கள்

  Ø   பி ரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிக் குறிப்பு - ஆனந்தரங்கப் பிள்ளை Ø   கனவு, சின்னசங்கரன் கதை – பாரதியார் Ø   என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர் Ø   வ.உ.சி.- சுயசரிதை Ø   ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன் Ø   என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை Ø   வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்] Ø   எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து Ø   என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார் Ø   எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம் Ø   நாடக மேடை – பம்மல் சம்பந்த முதலியார் Ø   நினைவுகள்- க.சந்தானம் Ø   உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார் Ø   எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் Ø   நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன் Ø   நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு Ø   கவலை – அழகிய நாயகி அம்மாள் Ø   எனது வாழ்க்கைப் பாதையிலே – இராதா மணாளன் Ø   எனது பொதுவாழ்வும் அனுபவங்களும் – எம்.ஏ. சிங்கராயர் மாவீரன் Ø   பித்த...