திணையியம்- தமிழின் ஆதி மெய்யியல்

 



சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில்   முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் மு. பாலசுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்ட பாமயன். நவீன வேளாண்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பழந்தமிழரின் திணையியல் வாழ்வியலைப் பற்றித் தமிழ் சமூகத்தோடு தொடர்ந்து உரையாடியும் எழுதியும் வருபவர் .

வேளாண்மையை அடிப்படையாக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் ஓர் இயற்கைநேய வாழ்க்கைமுறையை பொதியைச் சோலை என்னும் ஊரினை (கூட்டுறவு வேளாண் நிலமாகத் தென்காசி, சிவகிரி, வாசுதேவன்நல்லூர் அருகே) ஏற்படுத்தி பகுத்துண்ணல், பல்லூயிர் ஓம்பல், தமிழர் வகுத்துள்ள திணை வாழ்வியல், உயிர்ம நேயம் காத்தல் அத்துடன் அன்பையும் நிறைவையும் கொண்ட வாழ்வை எதிர்கால தலைமுறைக்கு உருவாக்கி கொடுத்தல் என்னும் கனவுகளைச் சாத்தியப்படுத்தி வருபவர் பாமயன்.

வேளாணைமை இறையாண்மை, அள்ளித் தரும் நிலம், அணுகுண்டும் அவரை விதைகளும், நியாய வணிகம், தாணுமாலயன் ஆலயம், முன்னத்தி ஏர் என்னும் நூல்களின் வரிசையில்2025 இல் வெளிவந்துள்ள நூல் திணையியம் தமிழின் ஆதி மெய்யியல். தோற்றுவாய் தொடங்கி நிறைவாக வரை 37 தலைப்புகளில் தமிழர் படித்துக் கொண்டே மறந்த மெய்யியல் சிந்தனைகள் தொல் தமிழ் இலக்கியங்களின் ஊடாகவும் இலக்கணங்கள் ஊடாகவும் பின்னிப்பிணைந்துள்ளதை தர்க்க பூர்வமாக எழுதியுள்ளார்.

நகரமயமாக்கம் மனிதனுக்கு பல சுதந்திரங்களை அள்ளி வழங்கினாலும், நகர மனிதனின் உடலும் மனமும் எவ்வாறு இயங்குகின்றது என்பதும் அன்றாடங்களைக் கடக்க எடுக்கும் பிரயத்தனங்களும் நகர் தரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளும் மனம் உடல் இரண்டையும் நோய்மை நோக்கியே நகர்கிறது.

கிராமங்கள் சாதியத்தால் கட்டுண்டு மனிதனைக் கட்டுப்படுத்துவதால்,  நகரங்கள் மிகப் பெரும் விடுதலையைக் கொடுத்துவிடும் என்னும் நம்பிக்கை இயல்பாக அவர்களை நகர்நோக்கித் தள்ளுகின்றது. ஆகையினால் கிராமங்களின் நிலை தள்ளாட்டத்தை நோக்கி செல்கிறது.

போர்களும், பெருந்தொற்றுகளும் ஒரு புறம் என்றால் காலநிலை மாற்றம், சுழல் சூர்கேடு, பெரு நிறுவனங்களின் ஆதிக்கம், பொருளாதார உயர்வுதாழ்வு, பண்பாட்டு அழிப்பு, வரம்பற்ற வளர்ச்சி, நுகர்வு வெறி, லாபவெறி ஆகியன மனிதனை இயற்கயிலிருந்து விலக்கி உயிர்களின் இருப்பை அச்சுறுத்தி வருகிறது.

இதிலிருந்து விடுபட ஒரு சிந்தனையை இந்நூல் முன்வைக்கின்றது. தொல் தமிழரின் வாழ்வியல் குறிப்பாகத் திணை வாழ்வியலை அறிவியல் பார்வையோடு இணைத்து சூழல்- மனிதன் – சமூகம் ஆகிவற்றை ஒருங்கிணைக்கும் நெறியாக அமையும் என்பதைப் பேசுகிறது இந்நூல்.

 

 

நூல் கிடைக்குமிடம்

சிவசங்கரி பதிப்பகம்

3/997 திருப்பதி நகர், பாறைப்பட்டி

சிவகாசி- 626 189

விலை. ரூ 699

பேசி- 9843603335

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்