மிட்டாய் தாத்தா
புன்னகைத் தவழும் முகம். மழலை மொழி. தெளிவான பேச்சு. காண்பவரை வாழ்த்தும் வாய்மொழி. தள்ளாட்டம் இல்லா சொல்லாட்டம். தீர்க்கமான கண்கள்.முதுமையின் ரேகை புறத்தில் மட்டுமே. உழைப்பை நம்பி வாழும் மனிதர் உழைத்துப் பெற்றதைப் பிறருக்கு உதவும் மனம் என வாழ்ந்து வரும் 121 வயதான மிட்டாய் தாத்தா என்ற முகமது அபுசலி அவர்களை 28.08.2025 அன்று தஞ்சாவூர் மானம்பூச்சாவடி ஆடக்காரத் தெருவில் சந்தித்தேன். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மாவைக் கைபற்றிய பொழுது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அந்த காலக்கட்டத்தில் தன் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பின்களையும் படையினர் தம் கண் முன்னே வெட்டிக் கொன்ற நிலையில் இவர் தப்பித்து அந்தமான் கப்பலில் தமிழகம் வந்து சேர்ந்துள்ளார். தஞ்சாவூர் வந்தடைந்த பொழுது அவருக்கு 50 வயது. மிட்டாய் செய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டு தன் வாழ்நாள் முழுதும் அத்தொழிலையே மேற்கொண்டதால் மிட்டாய் தாத்தா என அழைக்கப்பெறுகிற...