இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதைகதையாய் காரணமாம்...ஒக்கூர்(ஒக்காநாடு கீழையூர்)

ஊர் வரலாறு நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு நலம் பெறும் ஒக்கநாடு பச்சிலை பறிக்கா நாடு பைங்கிளி நோகாத நாடு கள்ளர் மரபு தவறாத நாடு கடல் தண்ணீயை வாட்டும் நாடு சொல்லுக்கும் பெரிய நாடு நிகழத்தால் பதில் சொல்லும் சுயமரியாதை உடைய நாடு   ஊர்ப்பெயர்கள்   பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும் கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு   என்னும் ஊர்களாகும். 10,11 ஆம் நூற்றாண்டுகளில் இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும் பிரித்துள்ளது.   இதில் நிகழத்தால் பதில் சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில் நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற ஊர்களிலும் வழக்குகள் இர

குமட்டிக்கீரை

கார்த்திகை மார்கழி மாதங்களில் கொல்லையில்,வயல்களில் கடலை போடும் பொழுது அதனூடாக முளைக்கும் கீரை. இந்த கீரை எங்களூரில் அந்த காலங்களில்  மட்டும் தான் கிடைக்கும்.கடலை  களை வெட்டும்பொழுது அதுனூடாக இருக்கும்  இளங்கீரையாக இருக்கும் குமட்டிகீரையை மாலை நேரங்களில் பறித்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.வேரை மட்டும் கிள்ளிவிட்டு சிறது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்தால் ஒரே ஆவியில் வெந்துவிடும். எடுத்து கடைந்து கடுகு, காய்ந்த மிளகாய்,சின்னவெக்காயம், போட்டு தாளித்து சாப்பிட்டால் என்ன ஒரு சுவை. உண்மையாகவே இந்த கீரையின் சுவையைப் போல் வேறு எந்த கீரையின் சுவையையும் நான் அறிந்ததில்லை. அது பெரிதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.எங்களூரில் பெரிதாகி பார்த்தில்லை. இளங்கீரையாக கிடைக்கும் நாள்களில் பயன்படுத்துவதோடு சரி. இளம் குமட்டிக்கீரை அதை கடைந்து சாப்பிட்டால் அப்பப்பா... சொல்லி மாளாது சுவை...

வடமொழி அறமரபும் தமிழ் அறமரபும்

அறம் என்னும் மேற்கட்டுமானச் சிந்தனைப் போக்கு   வாழ்வின் ஊடாக நிகழும் அகம் புறம் சார் ஒழுங்கு / ஒழுங்கின்மைகான வரைவை உற்பத்தி செய்து, அது தொடர்பான கதையாடல்களையும் தொன்மங்களையும் விளைவிக்கிறது. அது சார்ந்து மனிதன் தன் வாழ்வில் போக்குகளைத் தீர்மானித்துக் கொள்ள முனைகின்றான். உலகம் முழுதும் இது போன்ற போக்குகள் காணப்படுகின்றன. வடமொழியில் வைதிகம் / அவைதிகம் சாரந்த அறங்கள் உருவாகியுள்ளன. வேதம் தொடர்பான அறங்கள் வைதிக அறங்கள் என்றும் அதற்கு மறுப்பாக எழுந்த சமண, பௌத்த அறங்கள் அவைதிக அறங்கள் என்றும் கூறப்படுகின்றன. தமிழில் சங்க இலக்கியங்களில் வாழ்வியலோடு இணைத்து பேசப்பட்ட அறம் சார் கோட்பாடுகள், பின்னாள் வடமொழி அறங்களை உட்செறித்து ஒர் இலக்கிய வகையாக மாறுகின்றது. வட மொழியில் அறம்சார் அறிவு செயல்பாடுகள் வேதங்களில் காணப்பட்டாலும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வரை பழமொழிகளின் வடிவிலும்(சூத்திம்) அதன் பிறகு எளிய வடிவிலான செய்யுள் நடையிலும் (சுலோகம்) கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தன. இதே நேரத்தில் உரைகளும்(பாஷ்யம்) அதன் பிறகு அது சார்ந்த   தொகுக்கப்பட்ட   ஆராய்ச்சி நூல்களும்(நிபந்த) ஏற்பட்டன.