விடுதலையின் நிறம்
அமெரிக்காவின் அடிமை வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பல நூல்கள் வெளிவந்துள்ளன.அவற்றுள் விடுதலையின் நிறம் என்ற நூல் அமெரிக்காவில் அடிமையாக இருந்த ஹாரியட் ஏ.ஜேக்கப்ஸ் என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகத் துயரமான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.இந் நூலை அவரே 1857 இல் எழுதியுள்ளார்.இந்நூல் 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கா குறித்த இரு வித திறனாய்வு க்கு வடிவம் கொடுக்கிறது. மனிதர்களை விற்பனைப் பொருளாக எண்ணும் அடிமை முறைக்கும் அதற்குத் துணை நிற்கும் வெள்ளை இனவாத கருத்தியலுக்கும்,அது போலவே மரபான தந்தை வழி அமைப்புகள் மற்றும் கருத்தியலுக்கும் சவாலாக விளங்குகின்றது. 1813 ஆம் ஆண்டு கரோலினாவிலுள்ள எடென்டனில்,மோல்லி ஹார்னிப்ளோவுக்கும், மார்கரெட் ஹார்னிப்ளோவின் அடிமைக்கும் மகளான டிலைலாவுக்கும் டாக்டர் ஆண்ட்ரு நாக்ஸின் அடிமையான தச்சுத் தொழிலாளி டேனியல் ஜேக்கப்ஸூக்கும் மகளாகப் பிறந்தார் ஹாரியட் ஏ.ஜேக்கப்ஸ். இவர் அடிமையாகவே பிறந்து ,இரண்டு வயதிலும்,நான்கு வயதிலும் விற்கப்பட்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகும் வரை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார். ஜேக்கப்ஸ் குழந்தையாக இருந்த பொழுதே அனாதையாகிவிட்ட