உள்ளியது எய்த........
இற்றை நாட்களில் புத்தக கண்கட்சிகளுக்குச் சென்றோம் என்றால் அங்குப் பெருமளவில் காணக்கூடிய நூல்கள்,வாங்க கூடிய நூல்களாக இருப்பது தன்னம்பிக்கையூட்டும் சுயமுன்னேற்ற நூல்களாக உள்ளன. சிறகை விரி சிகரம் தொடு,சுயமுன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டி,தன் முயற்சி,நமது இலக்கு என்ன அடைவது எப்படி,நம்மால் முடியும், நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள், நினைப்பதெல்லாம் நடந்துவிடும், வெற்றிக்கு வழிகாட்டி,வெற்றியின் மூலதனம்,தடைக்கு விடைகொடு,உங்களால் வெல்ல முடியும் போன்ற நூல்களைக் கூறலாம்.இந்நூல்களுள் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முப்பாட்டன் வள்ளுவர் கூறிவிட்டார். ஒருவன் வாழ்க்கையில் வெறுமனமே உட்கார்ந்து இருந்தால் காலம் என்ற மண்ணில் தன் அடையாளத்தைப் பதிக்கமுடியுமா? இந்த உலகத்தில் எதனையுமே செய்யாமல் எதனையும் பெற முடியுமா? சுதந்திரம் வேண்டுமென நம்நாட்டவர் கொண்ட வேட்கை தானே அந்நியர்களை இம்மண்ணைவிட்டு விரட்டியது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் வேட்கையாக இருக்க வேண்டும். நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றிபெற முடியுமா என்றால் முட