தொல்காப்பியம்

தெல்காப்பியம் மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றள்ளது.மூன்று அதிகாரங்களும் ஒன்பது இயல்களாக வகுக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு அதிகாரங்களிலும் உள்ள ஒன்பது தலைப்புகளையும் நினைவில் வைத்துக்கொள்ளும் படி நம் முன்னோர் நூற்பா இயற்றியுள்ளனர் . தொல்காப்பிய அகராதி என்னும் நூலில் அத்தொகுப்பு காணப்பெறுகின்றது. அதுபோலவே ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை நூற்பாக்கள் உள்ளன என்பதற்கும் நூற்பாக்கள் இயற்றியுள்ளனர்.இதோ உங்கள் பார்வைக்கு.

எழுத்த்திகாரத்தின் இயல் வரிசை

நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு
மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலாம்
உருபியலில் பின்னுயிர் புள்ளி மயக்கம்
தெரிவரிய குற்றுகரகம் செப்பு

எழுத்த்திகாரத்தின் நூற்பாத் தொகை

எழுத்தி காரத்துச் சூத்திரங்க ளெல்லாம்
ஒழுக்கிய வொன்பதோத் துள்ளும் - வழுக்கின்றி
நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள்
மேனூற்று வைத்தார் விரித்து.

சொல்லதிகாரத்தின் இயல்வரிசை

கிளவியாக் கம்மே கிளர்வேற் றுமைசொல்
உறவேற் றுமைமயக்க மோங்கும் - விளிமரபு
தேற்றும் பெரயர்வினைச்சொல் சேரும் இடையுரிச்சொல்
தோற்றிய வெச்சவியல் சொல்.

சொல்லதிகார நூற்பாத் தொகை

தோடவிழ்பூங் கோதாய் சொல்லாதி காரத்துள்
கூடிய வொன்பதியற் கூற்றிற்கும் - பாடமாம்
நானூற் ற்றுபத்து நான்கேநன் னூற்பாக்கள்
கோனூற்று வைத்த குறி

கிளவியோர் அறுபான் இரண்டுவேற் றுமையில்
கிளர் இரு பஃதிரண்டு ஏழ்ஐந்து
உளமயங் கியலாம் விளியின்முப் பான்ஏழ்
இயர்பெயர் நாற்பதின் மூன்று
தெளிவினை யியல்ஐம் பானுடன் ஒன்று
செறியிடை யியலில்யாற் பான்எட்டு
எளிர்உரி யியல் பதிற்றுப்பத் துடன்எட்டு
ஒழிபு அறு பானின்மேல் ஏழே


பொருளதிகாரத்தின் இயல் வரிசை

ஈட்டும் அகத்திணையும் ஏய்த புறத்திணையும்
காட்டும் களவியலும் கற்பியலும் - மீட்டும்
பொருளியல்மெய் பாடு(உ)வமம் போற்றிய செய்யுள்
மரபிலும் ஆம்பொருளின் வைப்பு.


பொருளதிகார நூற்பாதொகை

பூமலிமென் கூந்தால் பொருளியலின் சூத்திரங்கள்
ஆவஅறு நூற்ற்றுபத் தைந்தாகும் - மூவகையால்
ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப
பாயிரத்தொல் காப்பியங்கற் பார்.

கருத்துகள்

நர்சிம் இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதம்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நர்சிம்........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்