இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்கள்

  Ø   பி ரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிக் குறிப்பு - ஆனந்தரங்கப் பிள்ளை Ø   கனவு, சின்னசங்கரன் கதை – பாரதியார் Ø   என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர் Ø   வ.உ.சி.- சுயசரிதை Ø   ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன் Ø   என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை Ø   வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்] Ø   எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து Ø   என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார் Ø   எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம் Ø   நாடக மேடை – பம்மல் சம்பந்த முதலியார் Ø   நினைவுகள்- க.சந்தானம் Ø   உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார் Ø   எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் Ø   நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன் Ø   நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு Ø   கவலை – அழகிய நாயகி அம்மாள் Ø   எனது வாழ்க்கைப் பாதையிலே – இராதா மணாளன் Ø   எனது பொதுவாழ்வும் அனுபவங்களும் – எம்.ஏ. சிங்கராயர் மாவீரன் Ø   பித்தன் ஒருவனின் சுயசரிதை – சுப்பிரமணிய முதலியார் Ø   என் இலக்கிய வாழ்க்கை – ம.பொ.சி Ø   ஒரு மேயரின் நினை

யசோதரை ஒரு புதினம்

படம்
               மெய்ஞானம் தேடிக் குழந்தை பிறந்தநிலையில் மனைவியையும் பச்சிளங்குழந்தையும் பிரிந்து சென்ற சித்தார்த்த கௌதமர் பற்றிய பல்வேறு கதைகள் தொடர்ச்சியாகக் வந்துகொண்டுள்ளன. ஆனால் மனைவி யோதரையைப் பற்றியோ சித்தார்த்தன் பிரியும் பொழுது ஏன் உறங்கிகொண்டிருந்தாள் என்பது குறித்து யாரும் சிந்திக்கவில்லை. யசோதரையின் வலிகளை வேதனைகளைப் பற்றி யாரும் கவலை கொள்ளவுமில்லை. பெண்ணும் உடமையாகப் பார்க்கப்பட்ட சமூகத்தில் பெண்ணுக்கான இடம் என்னவாக இருந்திருக்கும்? பெண்கள் வலிகளை வேதனைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய வெளியிலும் கூறக்கூடாது வேறு வகையில் வெளிப்படுத்தவும் கூடாது அது அழகல்ல.               வோல்கா உருவாக்கியுள்ள யசோதரை அழகுடன் கூரறிவும் பகுத்தறிவும், துணிவும், தெளிவும் வெளிப்படையான பேச்சும், தன்னிலை உணந்து கொள்பவள்.             கோலியா என்னும் ஊரைச் சேர்ந்த பிம்பானானர் வசிஷ்டை இணையருக்கு மகளாய் பிறந்தார் யசோதை. சிறுவயது முதலே பிற உயிர்கள் மீது அன்பும் வேள்விகளில் கொடுக்கப்படும் உயிர் பலி குறித்த கடும் எதிருப்புணர்வு கொண்டவள். இது குறித்து தன் தந்தையிடம் பேச முடியாது. அன்றைய சூழலில் பெண் எ

நினைவலை - 1

  ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி,   1991 இல் திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பயின்றேன். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் அருகேயுள்ள ஒக்கூர் என்ற ஒக்கநாடு கீழையூர் சொந்த ஊர் என்பதால் கல்லூரியின் உள்ளியங்கும் விடுதியில் தங்கி பயின்றேன். முதலாமாண்டு இரண்டாம் பருவத்தின் தொடக்கத்தில் ஜூலை மாதம் மதியம் 12 மணியளவில் வீட்டிலிருந்துந்து எனக்கொரு தந்தி வந்தது. கிளம்பியிருக்கவும் மாலை அழைத்துச்செல்ல வருகிறேன். என்ற செய்தி மட்டும் இடம்பெற்று இருந்தது. எனக்கு மிகவும் பதட்டமாகிவிட்டது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா என்று அழுதேவிட்டேன். என் தோழிகள் அவ்வாறு எதுவும் இருக்காது கவலை கொள்ளாதே என்று தேற்றினார்கள். நான் தங்கியிருந்த விடுதிக்கு சாமூண்டிஸ்வரி என்று பெயர். அதன் விடுதி காப்பாளர் நாகலட்சுமி அம்மையார் . அன்று மாலை என் தந்தையார் வந்தார். நாளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறினார். நான் இப்பொழுது ஏன் திருமணம் வேண்டாமே என்று கூறினேன். விடுதி காப்பாளரிடம் இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள் அப்ப

நிர்வாணமாக்கிக் கொள்ளுதல்

படம்
  நிர்வாணமாக்கிக் கொள்ளுதல் அதாவது அகத்தை நிர்வாணமாக்கி நம் முன் தூக்கிப் போடும் திராணி எத்தனைப் பேருக்கு இருக்கும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏராளமான இன்பமான கசப்பான அனுபவங்கள் எத்தனையோ எத்தனையோ அனைத்தையும் நாம் பிறருடன் பகிர்ந்து கொள்வதில்லை. நம் பிம்பத்தைக் கட்டுடைக்கும் எதனையும் அவ்வளவு எளிதாக நாம் கூறிவிடுவதில்லை. சிலரால் மட்டுமே தமது சுயத்தை அப்பட்டமாக வெளிகாட்ட முடியும். மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சிதம்பர நினைவுகள் வாசித்தபொழுது அப்படியான ஒரு அனுபவத்தைப் பெற்றேன். 21 தலைப்புகளில் எழுதப்பெற்றுள்ள அனுபவங்கள் அனைத்தும் மனித மனத்தின் இண்டு ஈடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்.     இந்நூலை வாசித்த கொண்டிருக்கும்பொழுது இவர் எதற்காக இதனை எழுதினார்? வாசிப்பாளனுக்கு எதனைக் கடத்த இவர் முனைகிறார்? என்ற வினா என்னுள் எழுந்து அடங்கியது. குற்றச் செயல்கள் எனச் சமூகம் வகுத்துள்ள மதிப்பீடுகளை மீறும் பொழுது சிலர் குற்றவுணர்வில் தத்தளிப்பர், சிலர் அதனைக் கடந்து எளிதில் சென்றுவிடுவர், அருகியோர் மட்டுமே அதிலிருந்து ஞானத்தை அடைவர். மனிதனின் நடத்தை சூழல்களைப் பொறுத்தே மாறுபடுகிறது.