இடுகைகள்

ஜனவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல் தன் இன்னுயிரைத் துச்செமென நினைத்துத் தீக்குளித்து உயிர் விட்ட தோழர் முத்துகுமாரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.தோழர் முத்துக்குமரனின் இறுதி ஆசை நிறைவேறுமா?

குடியரசுத் தின வாழ்த்துக்கள்

இணைய நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுத் தின வாழ்த்துக்கள்.

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம்

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம் பார்வை சரியாக இருந்தால் என்பர் புலவர் இரா.இளங்குமரனார்.ஆம் நம்மை சுற்றி ,நாம் காணும் இடங்கள் அனைந்துமே நமக்கு ஏதோ ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அண்மையில் தஞ்சைக்கு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் என்னும் ஊரில் 80 வயது மதிக்கதக்க பெண்மணியைச் சந்தித்தேன்.அவர் 1920 இல் பர்மாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்.அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு 8ஆம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்ந்தார்கள்.அவர்களிடம் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.பள்ளிக்குப் போனப் பின்னும் உணவு இடைவெளியின் போதும் ,மாலை வீடி திரும்பும் பொழுதும்,ஆசிரியர்களை எவ்வாறு வணங்கி விடைபெறுவார்கள் என்பதைக் கூறினார்கள்.இந்த வயதிலும் அவர்கள் படித்த குமரேச வெண்பா ,நீதி நெறிகள்,கம்பராமாயணம் போன்றவற்றை நினைவி நிறுத்தி நன்கு கூறுகின்றார்கள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் சிறுவயது முதற்கொண்டே பாடங்களை நன்கு மனனம் செய்ததே என்கிறார்.உரு போடாத மனம் உருப்படாது என்பார்கள் அது உண்மை தான் .ஆனால் இன்று மனனம் செய்வதே குறைந்து வருகிறது. காலை வந்தவுடன் காலையில் எழுந்திருந்து கால்கை

ஆசிரியப்பணி

ஆசிரியப்பணி என்பது மிகப் புனிதமான பணி.அங்கு நமது விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.ஒவ்வொரு மாணவர்களுமே நம்முடைய குழந்தையைப் போல நடத்த வேண்டுமே ஒழி,பிடித்த மாணவர்களிடம் ஒரு மாதிரியாகவும் பிடிக்காதவர்களிடம் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்வது ஆசிரியர் பணிக்குச் சிறப்பில்லை.எனக்கு தெரிந்த ஒரு மாணவி.அவள் நன்கு படிக்க கூடியவள்.எல்லா ஆசிரியர்களிடமு நல்ல பெயரும் வாங்கியிருந்தாள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆசிரியர் ஒருவர் மட்டும்,அவளுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே செயல்பட்டு,மற்ற ஆசிரியர்களிடம் இல்லாததை சொல்லி அவள் மேல் மற்றவர்களும் வெறுப்புக் கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்.இத்தகைய செயல் ஆசிரியர் தொழிலுக்கு நன்றா?தன்னுடைய மாணவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களைத் தனியே அழைத்துத் திருத்துவது தானே ஆசிரியர் கடன்.இதனை ஏனோ அவர் மறந்தார்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும்

வகுப்பு புறக்கணிப்பு

இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் போரினை நிறுத்தக் கோரி தங்களது வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.

மொழிப் போரில் அண்ணாவின் மொழியாளுமை

குள்ள உருவம்; குறும்புப்பார்வை; விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலையில்லா தோற்றம்; நறுக்கப்பட்ட மீசை; நகை தவழும் முகம்; சீவாத தலை; சிறிதளவு வெளிவந்த தொப்பை; செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள்; இடுப்பில் பொடி மட்டை; கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம்; இத்தோற்றத்தோடு காட்சியளித்து நின்கிறாரே அவர்தான் அண்ணா, என நாவலர் நெடுஞ்செழியன் காட்சிப்படுத்தும், இந்த உருவம் தான் 1937 இன் தொடக்க காலக்கட்டங்களிலும்,பிந்திய காலங்களிலும் தாய் மொழி தமிழ் அழியும் நிலை ஏற்பட்ட பொழுது,‘ நம்முடைய தமிழ் மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்! நம்முடைய நாடு நமக்குக் கிடைத்தால்தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியும்’எனச் தமிழ் சமுகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். அதன் விளைவாக எண்ணிறந்தோர் மொழிகாக்க வீறு கொண்டு எழுந்தனர்.அவ்வாறு அவர்கள் வீறுகொண்டு எழுவதற்குக் காரணம்,அண்ணாவின்,மொழியாளுமை என்றால் மிகையில்லை. பழுத்த அறிவு,கூரிய அறிவு நுட்பம்,அகன்ற காட்சியறிவு அகியவை அவர் தம் நடையினை அணி செய்கின்றன.அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகின்றது. கருத்து முதன்மையும் முழுமையும் கருத்து வெளிப்பாட

குமரகுருபரின்-மீனாட்சியம்மை குறம்

தென்பாண்டியில் உள்ள தென்கைலாயத் தலத்தில்,வேளாளர் குலத்தில் திருவாளர் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும்,திருவாட்டி சிவகாமியம்மையாருக்கும் மகவாய் தோன்றியவர் குமரகுருபர்.ஐந்து வயதுவரை ஊமையாக இருந்து,முருகன் அருளால் பேசும் திறனைப் பெற்ற குமரகுருபர்,முருகன் மேல் முதன்முதலில்’கந்தர் கலிவெண்பா’ என்ற நூலை அருளினார்.அதன் பிறகு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துசுவாமி பிள்ளைத்தமிழ்,மதுரைக்கலம்பகம்,நீதிநெறி விளக்கம்,மதுரை மீனாட்சியம்மை குறம் போன்ற பல புகழ் பெற்ற இலக்கிய வகைகளைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் மதுரை மீனாட்சியம்மை குறம் 51 பாடல்களைக் கொண்டு,இலக்கிய நயத்துடனும்,பக்தி செறிவாயும் இலங்குகின்றது. இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. குறம்-குறவஞ்சி .தொன்மையில் வழங்கிவந்த குறி சொல்லும் வழக்கமே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக எழுந்தது என்றும், சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக இருந்த குறம்,பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக மலர்ந்தது என்றும் கூறுவர்.ஒரு குறத்தி குறி கூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்றும் வழங்கும் என்பர் உ.வே.சா.குறத்தி ஒருத்தியின

சிதம்பரத்தில் நாளை ஆருத்ரா தரிசனம்

பஞ்சபூத தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்கக் கூடியது தில்லையம்பதியாகும். இவ்வூர் சைவபெருமக்களால் கோவில் நகரம் எனவும் அழைக்கப் பெறும் சிறப்புடையது.மேலும் ஞானகாசம், பொன்னம்பலம் எனப் பல பெயர்கள் வழங்கப் பெறுகின்றன.இக் கோயிலில் சிற்றம்பலம்,பேரம்பலம்,பொன்னம்பலம்,நிருத்தசபை,இராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன. பொன்னம்பல இராஜசபையில் தூக்கயாடிய காலுடன் உலக இயக்கத்தினை உணர்த்திக்கொண்டிருக்கும் ஆதிகூத்தனுக்கு ஒவ்வொரு நாளும் ஆறுகால பூசையும்,வருடத்திற்கு ஆறுமுறை திரு நீராட்டும் நடைபெறும்.ஆறுமுறை நடைபெறும் திருநீடாட்டில் இரண்டு முறை மட்டும் இறைவனும்,இறைவியும் தேரேறி மக்களைக் காண வருவர்.இங்கு என்ன சிறப்பென்றால் மற்ற கோவில்களில் உற்சவ மூர்தியைத் தேரேற்றுவர் ,ஆனால் சிதம்பரத்தில் இராஜ சபையில் இருக்க கூடிய மூலவரான அம்மையும்,அப்பனுமே தேருலா வருவர். திருவாதிரை நட்சத்திற்கு உரியவனாகிய சிவனை ஆதிரையான் எனப் போற்றுவர்.வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆனி உத்திரத்தன்றும்,மார்கழி திருவாதிரையன்றும் தேருலா நடைபெறும்.பிறகு இறைவனும் இறைவியும் ஆயிரங்கால் மண்டத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்று அடியவர்களுக்குத் தரிசனம் தருவர்.

பழமொழி

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் விடாப்பிடியாக உதைத்தால், குற்றம் புரிந்த குற்றப் பரம்பரையினர் பெரும்பாலும் உண்மை உரைப்பர் என்று கூறுவதைவிட,குற்றம் புரிந்தவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க முடியும் என்பதே பொருத்தமாக உள்ளது. கேள்விமேல் கேள்வி கேட்க்கும் பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாகக் கூறி உண்மையைக் கூறிவிடுவர் என்பது இன்று நாம் காணும் உண்மை.