சர்வதிகாரியாக நேரு...
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கொடிகட்டிப் பறந்த காலம்.நேருவை எதிருத்து ஒருவார்த்தை சொல்லவும் ஒருவருக்கும் துணிவில்லை.எதிர்க் கட்சிகலும் வலுவிழந்திருந்தன.அதிகாரிகளும்,மற்ற தலைவர்களும் அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம்'போட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியான ஆங்கில இதழ் ஒன்றில் ஒரு எழுத்தாளர் துணிச்சலாக இப்படி எழுதியிருந்தார்.'நேருவின் போக்கு சர்வதிகாரத்தனமாய் போய்க்கெண்டிருக்கின்றது.நாளை அவர சர்வாதிகாரியாய் மாறினால் அவரைத் தட்டிக் கேட்க எவருமில்லை'. இந்த செய்தியைப் படித்த அரசு அதிகாரிகள்,ஆலோசகர்கள் துள்ளிக்குதித்தனர்.உடனடியாக அந்த செய்தித்தாளின் 'கட்டிங்' ஒன்றை நேருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.'இந்த ஆளை சும்மாவிடக் கூடாது என்று அவர்கள் கோபமாக கூறினர். நேரு அவர்களைப் பார்த்து 'என்னைப் பற்றி இந்த எதிர்ப்புக் கருத்தாவது வந்ததே! இதை நான் பார்த்துக் கொள்கின்றேன்.நீங்கள் போகலாம்' என்று அனைவரையும் அனுப்பி விட்டு அந்த ஃபைலைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார். எழுதியவர் மீது அவர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஏனெனில்,புனைப்...