இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

19-ஆம் நூற்றாண்டு ஆளுமை ரெவரெண்ட் ஜார்ஜ் உக்லோவ் போப்(1820 – 1908)

ஐரோப்பிய மதபோதக மரபில் உருவாகி, சமயப் பரப்பலுக்காகத் தமிழகத்துக்கு வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜி. யு. போப். இவர் மதபோதகப் பரப்பலின் ஊடாக தமிழ்மொழிக்குத் தம்முடைய இறுதி காலம் வரை பங்களிப்பை நிகழ்த்தியுள்ளார். வாழ்க்கைச் சுருக்கம் 1820 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நோவா ஸ்கோஷியோவிலுள்ள பிரின்ஸ் எட்வட் தீவில் ஜான் போப், கேதரின் யுக்ளோ என்னும் இணையருக்கு மகவாய்ப் பிறந்தார். இவருடன் பிறந்தோர் பதின்மர் அறுவர் ஆண்கள் நால்வர் பெண்கள். இவருடைய சகோதரர்கள் மதபோதகர்களாக விளங்கினர். இவரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு செயல்பட்டுவந்தார். ஆங்கிலம், எபிரேம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றவர் போப். இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென விரும்பியதால் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சிப்பெற்றார். தமிழகத்தை நோக்கி கப்பலில் வரும்பொழுது தமிழை நன்கு பேசவும் எழுதவும் கற்றார். தமிழகம் வந்த பிறகு ஆரியங்காவு என்னும் ஆசிரியரிடத்தும் மகாவித்துவான் இராமானுசக் கவிராயரிடத்தும் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். 1864 இல் மறைநூற் புலவர் பட்டம்( D.D) 1886 இல் ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் எம்.ஏ.பட்டம்,1906 இல் ராயல்

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் சில:

கல்வெட்டு பேசுகிறது நவீன விருட்சம் நிழல் முகம் உயிர்மை புதுவிசை கவிதாசரண் கூட்டாஞ்சோறு பன்முகம் நடவு உன்னதம் உங்கள் நூலகம் புதிய புத்தகம் பேசுது கலை காலம் தாய்மண் புதுகைத் தென்றல் சமரசம் நம் உரத்த சிந்தனை திரை கதை சொல்லி புதிய பார்வை தீராநதி காலச்சுவடு படப்பெட்டி ஆயுத எழுத்து விழிப்புணர்வு வடக்கு வாசல் இனிய ஹைக்கூ உழைப்பவர் ஆயுதம்

நூல் பதிப்பும் நுண் அரசியலும்...

படம்
நூல் பதிப்பும் நுண் அரசியலும் என்னும் நூல் புலம் பதிப்பகம் வழி வெளிவந்துள்ளது. ஆசிரியர் அ.சதீஷ் கேராளாவிலுள்ள சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.இவரின் பிற நூல்கள் ரசிகன் கதைகள், சங்க இலக்கிய உரைகள், கு.பா.ரா. கதைகள் ஆய்வுப் பதிப்பு, கு.பா.ரா. கட்டுரைகள் ஆய்வுப் பதிப்பு . அச்சு ஊடகத்தின் வருகையால் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இன்று செம்மொழி என அடையாளப்படுத்திக் கொள்வதற்கான பிரதிகள் , அன்று ஓலைச்சுவடியிலிருந்து அடையாளங் காணப்பட்டு அச்சில் பதிப்பிக்கப்பெற்றன. பதிப்பிக்கப்பட்ட பிரதிகளின் ஊடாக நிகழ்ந்த அரசியலைத் தக்கச் சான்றுகளுடன் , தான் கலந்த தமிழ், 19 ஆம் நூற்றாண்டுப் புத்தகப் பதிப்பு முறைகளும் உ.வே.சா அவர்களும், அகநானூறு உரைப் பதிப்பு நிகழ்ந்ததும் நிகழவேண்டியதும், பதிப்பாசிரியர் பயன்படுத்தும் அடைமொழிகள் சில விவாதங்கள், தமிழில் மதனநூல் பதிப்பு, திண்ணைப் பள்ளிச் சுவடிகள் பதிப்பும் சிக்கலும், நவீன கதைப் பதிப்புகள் புதுமைப்பித்தனின் கதைப் பதிப்புகளின் பதிப்பு அரசியல் என ஏழு தலைப்புகளில் நூல் பதிப்பும் நுண் அரசியலும் என்னும் நூல