இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கணம் 05.01.2015

மகர இறுதி வேற்றுமை யாயின்  துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே ( தொல்காப்பியம் - 31) வேற்றுமைப் புணரச்சியில் நிலைமொழிகளாக உள்ள மகர ஈற்றுச் சொற்கள் மகரம் கெட்டு வருமொழிக்கேற்ற வல்லவெழுத்து மிக்கு முடியும். எடுத்துக்காட்டு    மரம் + கோடு   = மரக்கோடு மரத்தினது கோடு என்று பொருள் பணம் + பெட்டி  = பணப்பெட்டி சட்டம் + பேரவை  = சட்டப்பேரவை பணம் + பயிர்   = பணப்பயிர் குற்றம்+ பத்திரிகை  = குற்றப்பத்திரிகை வட்டம் + பலகை     = வட்டப்பலகை சதுரம் + பெட்டி    

புணர்ச்சி 03.01.2015

பொதுவாக மொழியில் புணர்ச்சி என்பது ஒரு சொல்லோடு இன்னொரு சொல்லோ, உருபனோ வந்து சேரும்பொழுது இடையில் ஏற்படும் மாற்றங்கள்.  சமஸ்கிருத்தில் சந்தி என்று கூறப்படுகிறது. பணம் + பெட்டி ------- பணப்பெட்டி என இணையும் இதில் பணம் என்பது நிலைமொழி பெட்டி என்பது வருமொழி என்று கூறப்படுகிறது. இவற்றுள் நிலைமொழியின் இறுதி எழுத்தாகிய 'ம்' அதுபோல வருமொழியின் முதல் எழுத்து 'பெ' இதனை ப்+ எ என்று பிரிக்கலாம். 'ம்' 'ப்' இணைதலே புணர்ச்சி. இவை நான்கு வகைகளில் வரலாம். நிலைமொழி இறுதி           வருமொழிஇறுதி           1. மெய்                   +                  உயிர்        ------- பூமகள் + ஊர்வலம்                                                                                                            (ள்)+(ஊ)            2.உயிர்                   +                  உயிர்        --------உயிரோடு +உயிராக                                                                                                           (ட் +உ) +உ            3. உயிர்                  +                  

உயிரீற்றுப் புணர்ச்சி 02. 01.2015

இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும் விதவாதன மன்னே ( நன்னூல் - 165) இந்நூற்பாக்கவை அடுத்து வரும் நூற்பாக்களில் பல இடங்களில் நிலைமொழி முன்னர் ஒற்றுமிகும் என்றும், சில இடங்களில் ஒற்றுமிகாது என்றும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. அவ்வாறு, குறிப்பிட்டுக் கூறப்பெறாத சொற்களில் இயல்பு  ஈறாகவும், விதி ஈறாகவும் நிற்கின்ற உயிரீற்றுச் சொற்களின் முன் பெரும்பாலும் ஒருமொழிக்கு ஏற்ற வல்லொற்று அல்லது மெல்லொற்று மிகும்.   அல்வழியில் எழுவாய்த் தொடரில் ஒற்றுமிகும் இடங்கள் அகர ஈறு -      விள க் குறிது ஆகார ஈறு -   புறா ப் பறந்தது இகர ஈற்று முன் ஒற்று மிகாது ( கிளி பறந்தது) ஈகார ஈறு -     தீ ப் பிடித்தது உகர ஈறு -      கடு ப் பெரிது. கடு - ஒருவகை மரம் ஊகார ஈறு -   கொண்மூ க் கடிது - கொண்மூ - மேகம் ஏகார ஈறு -     சே ப் பெரியது சே - ஒருவகை மரம் ஐகார ஈற்றின் முன்னும் ஒற்று மிகாது ( யானை பெரிது) ஓகார ஈறு -     ஓ ப் பெரியது ஓ - மதகுநீர் தாங்கும் பலகை ஔகார ஈறு - கௌவு க் கடிது வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகும் இடங்கள் அகர ஈறு -     விள க் கோடு ( விள - ஒரு வகை மரம், கோடு - கிளை)

தமிழ்க் குன்றம் - தமிழ் இலக்கண நூல்

ஒற்றுப்பிழைகள் ஏற்படாமல் தமிழ் மொழியைக் கையாளுவதற்குப் பேராசிரியர் பி.விருத்தாசலனார் தமிழ்க் குன்றம் என்னும் நூலை உருவாக்கியுள்ளார்கள். அந்நூலில் கூறப்பட்டுள்ள நூற்பாக்களோடு விளக்கங்களையும் தொடர்ந்து  எழுதலாம் என்று எண்ணுகிறேன். வேற்றுமை அல்வழிப் புணர்ச்சிகள் வேற்றுமை ஐம்முதல் ஆறாம் ; அல்வழி தொழில்பண் புவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி  ஈரெச்சம் முற்று இடையுரி தழுவுதொட ரடுக்கென வீரேழே (நன்னூல் - 152) வேற்றுமைப் புணர்ச்சியாவது ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகள் ஆறும் மறைந்தும், வெளிப்பட்டும் வரச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் புணர்ச்சியாம். 1. நிலம் கடந்தான் - இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ உருபு தொக்கது    நிலத்தைக் கடந்தான் என்பது விரி. 2. கல்லெரிந்தான் - மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் உருபு தொக்கது      கல்லால் எறிந்தான் என்பது விரி 3. கொற்றன் மகன் - நான்காம் வேற்றுமை உருபாகிய கு உருபு தொக்கது     கொற்றனுக்கு மகன் என்பது விரி 4. மலைவீழருவி - ஐந்தாம் வேற்றுமை உருபாகிய இன் உருபு  தொக்கது     மலையின் வீழருவி என்பது விரி 5. சாத்தன் கை - ஆறாம