புணர்ச்சி 03.01.2015
பொதுவாக மொழியில் புணர்ச்சி என்பது ஒரு சொல்லோடு இன்னொரு சொல்லோ, உருபனோ வந்து சேரும்பொழுது இடையில் ஏற்படும் மாற்றங்கள்.
சமஸ்கிருத்தில் சந்தி என்று கூறப்படுகிறது.
பணம் + பெட்டி ------- பணப்பெட்டி என இணையும் இதில் பணம் என்பது நிலைமொழி பெட்டி என்பது வருமொழி என்று கூறப்படுகிறது. இவற்றுள் நிலைமொழியின் இறுதி எழுத்தாகிய 'ம்' அதுபோல வருமொழியின் முதல் எழுத்து 'பெ' இதனை ப்+ எ என்று பிரிக்கலாம். 'ம்' 'ப்' இணைதலே புணர்ச்சி.
இவை நான்கு வகைகளில் வரலாம்.
நிலைமொழி இறுதி வருமொழிஇறுதி
1. மெய் + உயிர் ------- பூமகள் + ஊர்வலம்
(ள்)+(ஊ)
2.உயிர் + உயிர் --------உயிரோடு +உயிராக
(ட் +உ) +உ
3. உயிர் + மெய் -------- அலை + பாயுதே
( ல்+ஐ) +(ப்+ஆ)
4. மெய் + மெய் ------- கண்ணுக்குள் + நிலவு
(ள்) + (ந்+இ)
ஒற்று மிகுதல் என்பது நிலைமொழி இறுதி எவ்வாறு இருந்தாலும் வருமொழி முதலில் வல்லெழுத்துக்களான க,ச,த,ப வரும்பொழுது ஒற்று மிகுந்தும், மிகாமலும் வரும் அவ்வாறு வரும் இடங்கள் குறித்து தான் மேற்கண்டவற்றில் கூறப்பட்டுள்ளன.
ஒற்று போடுவதால் என்ன நிகழ்கிறது என்ற வினா எழலாம்.
பிட்டு தின்றார்
பிட்டுத் தின்றார்
மேலுள்ள பிட்டு என்பது உணவு வகைகளுள் ஒன்றைக் குறிக்கிறது. அடுத்துள்ளது உடைத்து உண்டார் என்ற பொருளைத் தருகிறது.
கை குட்டை
கைக்குட்டை
இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. மேலுள்ளது குட்டையான கையுயை உடையவரையும் கீழுள்ளது சிறு துண்டு துணியையும் குறிக்கும்.
இதற்கு நம்முன்னோர்கள் சில விதிகளை வகுத்துள்ளனர்.

கருத்துகள்