வியாபாரிகளாகும் மருத்துவர்கள்..........
அனைத்தும் உலகமயமாகி கொண்டிருக்கும் சூழலில் உயிருக்கு எவ்வித உத்தரவாதம் இல்லாமல் போய்க்கெண்டு இருக்கின்றது. உயிரைக் காக்க கூடிய மருத்துவம், அதனைச் செய்யக்கூடிய மருத்துவர்கள் பொருளை மையப்படுத்தி மனித உயிர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளவிடுகின்றார்கள். மக்கள் உயிர் மலினப்பட்டுவிட்டது. அறியமையில் உழலும் மக்கள் மட்டும் அல்ல அறிவுடையோரும் சில நேரங்களில் இதில் சிக்கித் தவிக்கதான் செய்கின்றார்கள். அவர்களுடைய தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்த்துவிடவேண்டுமெனச் சில மருத்துவர்களின் எண்ணமாகிவிடுகின்றது. சர்க்கரை நோய் நிபுணர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக 60 வயதுள்ள ஆங்கில ஆசிரியராக இருந்து பணி ஒய்வு பெற்ற அம்மையார் ஒருவர் சர்க்கரை நோய்க்காக மருத்துவம் பார்த்து வந்தார். அவருக்கு மூன்று ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு எக்கச் சக்கம். அதைவிடக் கொடுமை அவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரை அவர் வைத்திருக்கும் மருந்து கடையைத்தவிர வெளியில் கிடைக்காது.(பெரும்பாலன மருத்துவமனைகளில் இதுதான் நடக்கின்றது. இல்லை என்றால் மருத்துவக் கடைக்கார்கள் அவர்கள் வைத்திருக்கும் மருந்தினை எழுதிகொடுப்பதற்குக் கமி...