இளைய சமுதாயமே சிந்திப்பீர்
இளமைப் பருவத்தில் நமக்கு கிடைக்கும் நண்பர்களைப் பொறுத்து அமைகிறது நம்முடைய வாழ்க்கை.எனக்குத் தெரிந்த ஒரு பையன் நல்லவனாகத்தான் இருந்தான்.கல்லூரி விடுதியில் தங்கி படித்தபொழுது தவறான நண்பர்களின் சேர்க்கையால்,தன் மதியிழந்து புகை,போதைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டுவிட்டான். அவனது வாழ்வு கேள்விக் குறியானது.இளைய சமூதாயமே சிறிது சிந்திப்பீர்.அறிவு கெடுக்கும் செயல்களை விடுத்து ,ஆக்கச் செயல்களில் ஈடுபடுங்கள்.அதற்கு நல்ல சிறந்த மனிதர்களைத் தேர்ந்து கொண்டு ,அவர்களின் வழி பின்பற்றும் பொழுது,எதிகால வாழ்க்கை ஒளிமயமாகத் திகழும்.பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல நல்லோர் தொடர்பு நாளும் நன்மையைக் கொடுக்கும்.
கருத்துகள்
பணி தொடர்க..
தொடரட்டும் உமது சிந்தனை ...............
{சிந்திக்க துணிந்தவன் செதுக்கபடுகிறான் ஒவ்வொரு நாளும்.....
சிந்திக்க மறந்தவன் சிலை ஆகின்றான் எந்நாளும்.....}
நல்ல கருத்து..