இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பு

படம்
சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு பாடல்கள் முழுதும் உருபனியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அருஞ்சொற்களுக்கு  விளக்கமும் இலக்கணக் கூறுகளும் கொடுக்கப்பட்டுள்ளதுடன்,  அருஞ்சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொல் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மொழியினுடை அமைப்பினையும், ஐங்குறுநூற்றுள் புலவர்களால் மொழி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். கணினி மொழிக்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தனித்தமிழ் இயக்கமும் நீலாம்பிகை அம்மையாரும்

நீலாம்பிகை மறைமலையடிகளின் மகள்; இளமையிலேயே தந்தையிடம் தமிழைக் கற்றுப் புலமை பெற்றவர். தனித்தமிழியக்கத்தை மறைமலையடிகள் தோற்றுவிக்கத் தூண்டுதலாக இருந்தவர். மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையெனில் அவ்வியக்கதின் முதல் தொண்டர் நீலாம்பிகை. தந்தையின் தனித்தமிழ் இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்ற நிலையில் அறியப்படுகிறார்.                       தனித்தமிழ் தோற்றம் குறித்து மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையாரும், மகன் மறை திருநாவுகரசும் தம் நூல்களில் பதிவுசெய்துள்ளனர். ஒருநாள் அடிகளும், அடிகளின் மூத்தமகள் நீலாம்பிகை அம்மாயாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும் போது அடிகள் இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவின் திருமுறையிலுள்ள, பெற்ற தாய்தனை மகமறந் தாலும்           பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிருமறந் தாலும்           உயிர் மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்           கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்                                     நமச்சி