உயிரீற்றுப் புணர்ச்சி 02. 01.2015

இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன்
கசதப மிகும் விதவாதன மன்னே ( நன்னூல் - 165)

இந்நூற்பாக்கவை அடுத்து வரும் நூற்பாக்களில் பல இடங்களில் நிலைமொழி முன்னர் ஒற்றுமிகும் என்றும், சில இடங்களில் ஒற்றுமிகாது என்றும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. அவ்வாறு, குறிப்பிட்டுக் கூறப்பெறாத சொற்களில் இயல்பு  ஈறாகவும், விதி ஈறாகவும் நிற்கின்ற உயிரீற்றுச் சொற்களின் முன் பெரும்பாலும் ஒருமொழிக்கு ஏற்ற வல்லொற்று அல்லது மெல்லொற்று மிகும்.
 அல்வழியில் எழுவாய்த் தொடரில் ஒற்றுமிகும் இடங்கள்

அகர ஈறு -      விளக் குறிது
ஆகார ஈறு -   புறாப் பறந்தது
இகர ஈற்று முன் ஒற்று மிகாது ( கிளி பறந்தது)
ஈகார ஈறு -     தீப் பிடித்தது
உகர ஈறு -      கடுப் பெரிது. கடு - ஒருவகை மரம்
ஊகார ஈறு -   கொண்மூக் கடிது - கொண்மூ - மேகம்
ஏகார ஈறு -     சேப் பெரியது சே - ஒருவகை மரம்
ஐகார ஈற்றின் முன்னும் ஒற்று மிகாது ( யானை பெரிது)
ஓகார ஈறு -     ஓப் பெரியது ஓ - மதகுநீர் தாங்கும் பலகை
ஔகார ஈறு - கௌவுக் கடிது

வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகும் இடங்கள்

அகர ஈறு -     விளக்கோடு ( விள - ஒரு வகை மரம், கோடு - கிளை)
ஆகார ஈறு -  பலாக்காய்
இகர ஈறு -     கிளிச்சிறை (சிறை - சிறகு)
ஈகார ஈறு -    தீக் கடுமை
உகர ஈறு -     கடுக்காய்
ஊகார ஈறு -  கொண்மூக் குழாம்
ஏகார ஈறு -    ஏக் கடுமை
ஐகார ஈறு -   தினைத்தாள்
ஓகார ஈறு -   சோப் பெருமை (சோ - அரண்)

கருத்துகள்

தமிழ் மாணவன் சத்யா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. தொடரட்டும் தங்கள் பணி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்