புறநானூற்றில் கல்விச்சிந்தனை
மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள...
கருத்துகள்
வாழ்க வள்முடன்