எந்தையும் தாயும்

 


நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்கள்


எழுதிய நூல் எந்தையும் தாயும்.

புதுமைப்பித்தனைத் தேடிதேடிப் படிக்கின்ற வாசகர்களுக்கு சிலவற்றை அவர் மகள் என்ற முறையில் கூற ஆசைப்படுகிறேன். இதில் அச்சேறாத சில பகுதிகளும் உண்டு. இது அப்பாவின் வரலாற்றின் பின்பகுதி என்று கூறலாம் எனத் தன்னுடைய இரண்டாவது வயதில் தந்தையை இழந்த தினகரி தன் அம்மா அப்பாவைப் பற்றித் தொடர்ச்சியாக உரையாடியதன் வழியாகவும் அப்பாவின் நண்பர்களோடும் அவருடைய எழுத்துகளோடும் குறிப்பாக அவர் எழுதிய கடிகளிலிருந்தும் தாம் பெற்ற அனுவபவங்களிலுருந்தும் எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் ஒரு புறம் தமது கூரிய மொழியால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை எழுதிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் வாழ்வின் துயரம் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்துள்ளதை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலை வாசிக்கும்  பொழுது உணரமுடியும். தமது 40 வயதில் இரண்டு குழந்தைகளை இழந்து மூன்றாவது குழந்தையாகப் பிறந்த தினகரின் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் உடையவராக இருந்துள்ளது அவர் தொடர்ந்து தன் மனைவி கமலாவிற்கு எழுதிய கடிதங்கள் உணர்த்துகிறது. அப்படிபட்ட மகளோடு வாழ விதி இடம் கொடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் வெறும் நான்கு மாதம் அளவில் மட்டுமே அவர் குழந்தையுடன் இருந்துள்ளார். வாழ்வின் தேவைகள் அவரைத் தூர துரத்துகிறது.

கால் சவரன் மூஸா தங்கம் வாங்கி அதிமதுரம் கட்டையில் அடித்து உரைத்துக் கொடுப்பதற்கு லாயக்கா வைக்க வேண்டும். இதற்கு உடனே பணம் அனுப்புகிறேன் கட்டைக்கு அந்த தங்கத்திலையே தகடு அடித்து பூண்மாதிரி அமைத்துவிட்டால் உறுதியாவும் இருக்கும். இவ்விரண்டு காரியங்களும் தங்களால் தான் ஆகும் சிரமம் பாராமல் எனக்காகச் செய்ய வேணும். என 2.5.1946 அன்று உதவியாளர் குப்பண்ண ராவுக்கு கடிதம் எழுதுகிறார். மீ.பா.சோமு அவர்களுக்கு 15.8.1946 எழுதும் கடிதத்தில் நானும் என் குழந்தையும் தான் இந்தப் பரந்த உலகத்தை நிறைத்து நிற்கிறோம் என்றும் அவர் மனைவிக்கு எழுதும் கடிதங்கள் தோறும் இமைப்பொழுதும் குழந்தையை நினைக்காமல் இருக்கமுடியவில்லை நனவிலும் கனவிலும் அவள் நினைவிலேயே உழல்வதாக எழுதுகிறார். 1000 மைல் தாண்டி பூனாவில் இருந்துகொண்டு குழந்தையின் உடல் உபாதை அறியவரும் தருணமெல்லாம் தான் அருகில் இருக்க முடியவில்லையே என்ற வேதனை குழந்தையின் பிறந்தநாள், காதுகுத்து போன்ற சடங்குகளை நிகழ்ந்த முடியாமல் காலம் கடப்பதும் மனைவியின் வருத்தமும் குழந்தையைப் பற்றிய கடித்தங்களில் குழந்தையின் சவுக்கியம் பற்றி ஒரு லைனாவது எழுது, குழந்தை தினகரி பற்றி வைராக்கியமாக எழுதாமலிருக்கிறாய் என்று தெரிகிறது நான் அங்கு வந்த பிற்பாடு பரிதாபம் தெரியும் என 5.2.48 இல் எழுதும் கடிதங்களிலிருந்து அறியமுடிகிறது. புதுமைப்பித்தனும்  மனைவி கமலாவும் ஒருவருக்கொருவர் மதிக்க கூடிய புரிதலுள்ள இணையர். புதுமைப்பித்தன் தான் இறக்கும் தருவாயில் தனது மனவியிடம் அவருடைய புறத்தோற்றத்தில் எவ்விதமான மாறுபாடுகள் செய்யக்கூடாது வெள்ளைபுடவையெல்லாம் உடுத்தக்கூடாது என உறுதிமொழி வாங்கியவர். கேரளப் பகுதியில் வசித்த்தால் தமிழை அரைக்குறையாக அறிந்திருந்த தன் மனைவிக்குத் தமிழிழை நன்கு கற்றுக்கொடுத்து எழுத தூண்டியவர். தனது மனைவின் மூது தீராக் காதல் கொண்டவராக இருந்த கடிதத்தின் வழியாகவும் (கண்மணி கமாலாவுக்கு, எனது ஆருயிர் கண்ணாளுக்கு, எனதருமை கண்ணாளுக்கு எனத் தொடங்கும் கடிதம்) அவரின் மனைவியும் வாய்மொழியின் வழியாகவும் அறியமுடிகிறது.

புதுமைப்பித்தன் இறந்த பிறகு பொருளாத நிலை தாழ்ந்திருந்த நிலையில் உறவுகளாலும், சுற்றத்தாலும் புறக்கணிக்கப்பட்டு ( அவர் இறந்த பிறகு புதுமைப்பித்தனின் அப்பா சொக்கலிங்கத்தை சந்திக்கச் சென்ற ஐந்து வயது குழந்தையைப் பார்க்க மறுத்ததுடன் அவனே போயாச்சு அவன் வாரிசுயெல்லாம் பார்க்க விரும்பலே)   பிறகு நம்பிக்கையோடும் துணிவோடும் கமலா விருத்தாசலம் சென்னைக்கு வந்து நிதிப்பணம் பெற்று வீடு வாங்கி புதுமைப்பித்தன் நிலையம் என்னும் பெயரிட்டு அவருடைய எழுத்துகளைத் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூக இலக்கிய வெளியில் பேசுபொருளாகும் படி அச்சிட்டு, தனது மகளுக்கு நல்வாழ்வையும் அமைத்துக்கொடுத்த கதையையும் படைப்பாளன் இறப்புக்கு பிறகு அந்து குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்களையும் அதனை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு கையாண்டார்கள் என்பதையும் இந்நூல் பேசுகிறது.

எந்தையும் தாயும்

தினகரி சொக்கலிங்கம்

காலச்சுவடு பதிப்பகம்

முதற்பதிப்பு 2025

விலை - 100

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்