ஒரு அரசு எழுத்தரின் மரணம்

 

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் உரையைச் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டுக்கொண்டிருந்த பொழுது ரஷ்ய சிறுகதை மன்னனாகிய ஆன்டன் பாவ்லோ செக்காவின்  ஒரு கதையைக் கூறினார். அக் கதை ரஷ்ய சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய கதை என்றார். அக்கதையை நீண்ட நாள்கள் படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் பேராசிரியர் கி. நடராஜன் மொழிப்பெயர்ப்பில் பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதை மன்னன் செகாவ் என்னும் தொகுப்பில் அக்கதை இடம்பெற்றிருந்து. செகாவின் வான்கா சிறுகதையில்,

  அன்புக்குரிய தாத்தா கான்ஸ்டன்டைன் மக்காரிச் என்று எழுதினான். உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன்.கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அனுப்பிகிறேன்ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்எனக்கு அப்பாவும் இல்லைஅம்மாவும் இல்லைஉன்னைத் தவிர யாருமே இல்லை எனக்கு . மாஸ்கோ மிகப் பெரிய ஊர்கனவான்களது வீடுகளுக்குக் கணக்கே இல்லைகுதிரைகளும் ஏராளம்ஆனால் ஆடுகள் இல்லைநாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றி சாதுவாய் இருக்கின்றனகிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை கோயிலில் நம்மை பாட விடமாட்டேன்கிறார்கள்.   என்ற  அம்மா அப்பாவை இழந்து வறுமையின் காரணமாக மாஸ்கோவில் பணக்கார வீட்டில் வேலைக்கு விடப்பட்ட ஒன்பது வயது வான்கா  என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியவன். செகவின் கதைகளைப் பற்றி லியோ டால்ஸ்டாய் பெண்கள் துணியில் பூவேலைகள் செய்வது போல நுட்பமான அழகுணர்ச்சியுடன் தனித்துவத்துடன் விளங்கும் என்பார்.  எதிர்பாராமல் திடீரென வந்த தும்மல் ஒரு மனிதன் மனம் புலம்பி தவித்து தன்னைத்தானே சித்தரவதைக்கு உள்ளாக்கிக்கொண்டு இறந்த ஒரு மனிதனின் கதை தான் ஒரு அரசு எழுத்தரின் மரணம்.

அரசு எழுத்தரின் மரணம் கதை இனிய மாலைப் பொழுதில் ஒரு இசைக் கச்சேரி அரங்கில் தொடங்குகிறது. இசைக் கச்சேரி கேட்பதற்காக அரசு எழுத்தராகப் பணிபுரியும் மிட்ரிச் செர்யாகவ் வருகிறான். அரங்கின் இரண்டாவது வரிசையில் இருக்கும் இருக்கையில் நாடக நிகழச்சியைப் பார்க்கும் சிறிய தொலைக்காட்சி கண்ணாடியை அணிந்து கொண்டு அமருகிறான். The chimes of Normandy என்னும் இனபவியல் நாடகம் தொடங்குகிறது. தும்மல், இருமல் மற்ற இயற்கை உபாதைகள் மனிதர்களுக்கு எப்பொழுது வரும் என்று தெரியாது. மிட்ரிக்கு திடீரென தும்மல் வந்துவிட்டது. அவனை அறியாமல் கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு முன்வரிசை பக்கம் குனிந்து தும்மினான்.  தான் தும்மியதால்  யாருக்காவது இடையூறு ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயம் அவனுக்கெழுந்தது. சுற்றுப் முற்றும் நோட்டம்விடுகிறான். முன்வரிசையில் இருந்த வயதான வழுக்கைத் தலை மனிதர் தமது கைக்குட்டையால் தலையையும் கழுத்தையும் துடைப்பதைப் பார்க்கின்றான். அவர் போக்குவரத்துத் துறையின் தலைமை அதிகாரி என்பதை அறிகிறான். ஆனாலும் அவன் சார்ந்த துறையின் அதிகாரி அல்ல அவர். இருப்பினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணுகிறான்.

தன் முழு உடலையும் முன் வரிசைக்கு முன்பு குனிந்து அதிகாரியின் காதில், மரியாதைக்குரிய அதிகாரி அவர்களே! தெரியாமல் தும்மிவிட்டேன் என்னை மன்னித்தருங்கள் என்றான்.

உடனே அவர் அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே என்றார். மீண்டும் அவன் தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டும் நான் வேண்டுமென்று செய்யவில்லை என்றான்.

அதற்கு அவர் ஓ! தயவு செய்து அமருகிறீர்களா? நான் இசை நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார். இவனுக்குப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது. நாடகத்தோடு ஒன்றி பார்க்க முடியவில்லை. இடைவெளி எப்பொழுது வருமெனக் காத்திருக்கிறான். மீண்டும் தலைமை அதிகாரியிடம் சென்று நான் உங்கள் முகத்தில் தும்மிவிட்டேன் மரியாதைக்குரிய தலைமை அதிகாரி அவர்களே! என்னை மன்னியுங்கள். நான் வேடுமென்றே செய்யவில்லை என்கிறான்.

உடனே அதிகாரி போதும் நிறுத்துங்கள்! அதனை நான் அப்பொழுதே மறந்துவிட்டேன். நீங்கள் திரும்பத்திரும்ப கூறுகிறீர்கள் என வேகமாக் கூறுகிறார். ஆனாலும் அவனுக்கு அவர் மறந்துவிட்டார் என்று கூறுகிறார். ஆனாலும் அவர் கண்ணில் கொடூரமான ஒளியைப்பார்த்தாக எண்ணுகிறான். அவர் தன்னிடம் பேசவிரும்பாத காரணத்தினால் தான் கோபமாகப் பேசுகிறார் எப்படியாவது வேண்டுமென்றே தும்மவில்லை என்பதை அவரிடம் எடுத்துக் கூறிவிடவேண்டும் என்று நினைக்கிறான். நாடகம் முடிந்து வீட்டிற்குச் சென்ற பின்பும் இதே நினைவு. தனது மனைவியிடமும் கூறுகிறான். அவன் துறைசார்ந்த தலைமை அதிகாரி இல்லை என்று அறிந்தவுடன் அவள் நிம்மதி அடைந்தாலும் உங்களைப் பற்றி தப்பான அபிப்ராயம் அவருக்கும் இருக்கும், பொது இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியதவனாக இருக்கிறான் என்று நினைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் மறுமுறை மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும் என்கிறாள்.

அடுத்த நாள் புதிய சீருடை அணிந்து புற ஒழுங்குபடுத்திக்கொண்டு தலைமை அதிகாரியின் அலுவலகம் சென்று, மரியாதைக்குரிய தலைமை அதிகாரி அவர்களே! நேற்று நடத்தது எதேச்சையாக நிகழ்ந்தது என்று சொல்லத் தொடங்கினான். என்ன உளறுகிறாய் நீ? இனிமேலும் என்னால் இதனைச் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறி வேறு வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார். வேலை முடித்து விட்டு ஓய்வு அறைக்கு அவர் செல்ல முற்படுகையில் மிட்ரிக் ஓடிச்சென்று என் மரியாதைக்குரிய தலைமை அதிகாரி அவர்களே! என்னை மன்னிக்க வேண்டும். என் மனது ஆறவில்லை என் வருத்தைத் தங்களிடம் தெரிவிக்கவேண்டும் . நான் வேடுமென்றே தும்மவில்லை என்கிறான். அந்த தலைமை அதிகாரி அழுத முகத்துடன் சென்று வா என்று  கூறி ஏன் என்னைப் கேலிசெய்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு தன் அறைக்கதவை மூடிக்கொண்டார்.    தலைமை அதிகாரியை நான் எப்படிக் கேலி செய்வேன் என்னைத்  தவறாகப் புரிந்து கொண்டு விட்டாரே. இனி அவரிடம் மன்னப்புக் கேட்கப் போவதில்லை. ஆனால் கடிதத்தின் வழியாக மன்னிப்புக் கோரலாம் என்று எண்ணிய படியே வீடு வருகிறான். இரவு முழுவதும் சிந்திக்கிறான் கடிதத்தில் என்ன எழுதுவது தெரியவில்லை. அவன் அடுத்தநாளும் நேரே செல்கிறான். மரியாதைக்குரிய தலைமை அதிகாரி அவர்களே! நேற்று தங்களைக் கேலி செய்ய வரவில்லை. கனவிலும் அதுபோல் எண்ணமாட்டேன். எதிர்பராமல் தும்மியதில் உங்கள் முகத்தில் பட்டதிற்காக மன்னிப்பு கோரவே வந்தேன் என்றான். அதிகாரி முதலில் இங்கிருந்து நீ போய்விடு என உரகக் கத்தினார். முகம் மாறியது உடல் நடுங்கியது. பதறினான் மிட்ரிக் மெல்லிய குரலில் பேசமுனைகிறான். இங்கிருந்து உடனே சென்றுவிடு எனச் சத்தமாகக் கத்துகிறார் அதிகாரி.

அவனுக்கு இடிவிழுந்தது போல் இருக்கிறது. உணர்வுகள் இழந்த நிலையில் வீடு நோக்கிச் செல்கிறான். தனது சீருடையைக் கழற்றிவிட்டு சோபாவில் படுக்கிறான். படுக்கையிலேயே இறந்து போகிறான்.

மிட்ரிக் செர்க்யாவ் திடீரென வந்த தும்மலுக்க தன்னைத் தானே வதைத்துக்கொண்டாலும், அப்படியான மனநிலைக்கு அவனைத் தள்ளியது எது என்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை. இது அற்பதனம் என்பதா இல்லை இவ்வளவு மன நெருக்கடிக்கு உள்ளாகுமாறு சமூக கட்டமை இருந்துள்ளது என்பதா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்