சங்க இலக்கியம் கூறும் அறம்

இறைஞ்சுக, பெரும ! நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே (புறநானூறு,6;19,20)


பார்பார்க்கு அல்லது பணிபுஅறி யலையே (பதிற்றுப்பத்து 63 ;1)

வல்லாரை வழிப்பட்டுஒன்று அறிந்தான்போல,
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் (கலித்தொகை,47)

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த,
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகநானூறு, 4;11-13)

அத்தம் அரிய என்னார்,நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே!
அருளே மன்ற ஆரும்இல் லதுவே (குறுந்தொகை,174)

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன்செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்,
மென்கண் செல்வம் செல்வம்என் பதுவே (நற்றிணை,210)


அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும ! நின் செல்வம்;
ஆற்றா மைநிற் போற்றா மையே;(புறநானூறு,28)

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்( புறநானூறு, 29)

இன்சொல் எண்பதத்தை ஆகுமதி, பெரும!(புறநானூறு,40)

கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறநானூறு, 57)

நாடாகு ஒன்றோ ; காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ; முசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே!(புறநானூறு,187)

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன (புறநானூறு 192)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது;அன்றியும்
நல்லாற்று படூஉம் நெறியுமார் அதுவே (புறம்,195)

......................வித்தும்
புணைகை விட்டோர்க்கு அரிதே;துணையாழத்
தொக்குயிர் வௌவுங் காலை,
இக்கரை நின்றிவர்ந்துஉக்கரை கௌளலே (புறநானூறு, 357)


இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே;
முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே (புறநானூறு, 363)

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்தவைகல்,
வாழச்செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை (புறநானூறு, 367)

........................பொருள்வயிற்
பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின்,
அரிதுமன்று அம்ம ! அறத்தினும் பொருளே.(நற்றிணை,243)

திறவோர் செய்வினை அறவது ஆகும் (குறுந்தொகை, 247)

அறம் நனி சிறக்க அல்லது கெடுக (ஐங்குறுநூறு,7)

நன்று பெருது சிறக்க! தீது இல்லாகுக!( ஐங்குறுநூறு 9)

கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும்,அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை ஆகலின் (கலித்தொகை,125)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......