சொற்சுவை

தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்ச்சொல் இலக்கணம்தான் அம்மொழியின் இளமையைக் காத்தது.அளவிறந்த கருத்துகளும் வழிவகுக்கும் அவற்றில், ஒருசில சிறந்த பகுதிகளையே நாம் இங்கு அறிமுகம் செய்துகொள்கிறோம்.

தமிழ்மொழியிலுள்ள மொழிகளின் உள்வகைகளை ஓரிடத்தில் கூறுகின்றார்.

ஒரெழுத் தொருமொழி ஈரெழுத்தொருமொழி
இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

தமிழில் ஓரெழுத்து தொரு மொழிகள் மிகப்பல. நெட்டெழுத்து என்பன உயிர்நெடிலாகிய உயிர்நெடிலாயினும் வேறு பொருள் தரும்போது சொல்லாகிவிடும். எழுத்துக்கள் தொடர்ந்து பொருள் தருவது சொல் என்பது மாறி, எழுத்தே தன்னை உணர்த்துவதன்றி பிறிதொரு பொருள் தந்து சொல்லாவது தமிழின் சிறப்புகளில் ஒன்றெனலாம்.

ஆங்கிலத்தில் A- என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக பயன்படுகிறது.A BOOK- ஒரு புத்தகம் .A CLASS- உயர் வகுப்பு முதல் வகுப்பு I - நான். தமிழில் ஆ -பசு, வியப்புக்குறிப்பு, ஊ - தசை,ஊன்,உணவு. ஈ - தருவாயாக.தா,போ,கா,நா,வா,சா,பா,யா,மா,தீ,போ,கூ என அடுக்கலாம். சில பலபொருடையன. இவை சைகை மொழியிலிருந்து பிறந்த்தற்கு அடையாளம் என்பர் ஆய்வாளர்.

கூ- குயில், கா- காக்கை, மா- மாடு இவை போல்வன போறல் வகை என்பர். இவை தமிழின் தொன்மையைக் காட்டுவன என்பர்.

ஈரெழுத்துச் சொற்களே அடிச்சொற்கள் ; வேர்ச்சொற்களாய் அளவிறந்து இசைக்கின்றன. அடி,பிடி,கொடு,நட,பிசி,மடி,கடி,எடு,இலை,தலை,பாடு,கேளு என அடிக்கலாம்.இவை வினைஅடிச் சொல்லாக, ஏவல்சொல்லாக, பெயர் அடிச்சொல்லாக ஆயிரக்கணக்கில் வருகின்றன.

தொல்காப்பியர் ஈரெழுத்தொரு மொழிக்கு மேற்பட்டன எல்லாம் தொடர்மொழிகள் என்றாலும் தமிழில் மூன்றெழுத்து ஒரு மொழிகளும் கணக்கற்றவை. அவற்றுள் குற்றுகரச் சொற்களும் அடங்கும்.

தமிழ்,கடல்,படகு,வடம்,கலம்,தாளம்,தோல்வி,வெற்றி,கட்டு,மருகு,கனவு,நனவு,வளைவு என எண்ணலாம். ஒரெழுத்தொருமொழி, ஊரெழுத்தொருமொழி,மூவெழுத்தொருமொழி எனத் தொகுத்துப் பார்கலாம்.

தமிழண்ணல்
(தொல்காப்பியச் சொற்சுவைகள் என்னும் நூலில் இருந்து)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்